Featured post

தேனிசைத் தென்றல்' தேவாவின் குரலில் இறுதியாக உருவான 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடலான 'வா சிவா' வெளியீடு!*

 *'தேனிசைத் தென்றல்' தேவாவின் குரலில் இறுதியாக உருவான 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடலான 'வா சிவா' வெளியீடு!* *இய...

Saturday, 31 October 2026

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!*

 *இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் புது முயற்சி!*





*இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்த ராக்ஸ்டார் டிஎஸ்பி!*


‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வேணு எல்தண்டி இயக்கத்தில், தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இந்நிலையில், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும்.


தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ‘எல்லம்மா’ திரைப்படம் வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!*

 *ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!*



*ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்ட தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'தங்கப்புள்ள' பாடல்*


*மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் அன்பையும் ஏக்கத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் பாடல்!*


நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


பொதுவாகத் தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை  மையமாகக் கொண்டு ‘தங்கப்புள்ள’ பாடல் உருவாகியுள்ளது. மகனுடன் நேரடியாகத் தனது அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு தந்தையின் ஏக்கத்தையும், மகனின் மகிழ்ச்சியை மறைந்திருந்து ரசிக்கும் பாசத்தையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.


மென்மையான இசை, பா. விஜய்யின் உணர்வுப்பூர்வமான வரிகள், முருகவேலின் குரல் ஆகிய அனைத்தும் இணைந்து பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. தந்தையின் மனதில் புதைந்திருக்கும் அன்பையும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையும் காட்சிகளுடன் இணைத்து வெளிப்படுத்தும் இப்பாடல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.


மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.


‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.


இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனம் மற்றும் OTT உரிமையை Zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடலும் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.


https://www.youtube.com/watch?v=Tj8j_2jh-5M

தேவர் ஜெயந்தி கொண்டாடும் நிகழ்வு இல்லை, அவரை நினைத்து கும்பிடும்

*தேவர் ஜெயந்தி கொண்டாடும் நிகழ்வு இல்லை, அவரை நினைத்து கும்பிடும் நிகழ்வு, அவர் சொன்ன கருத்துக்களை பின்பற்ற தான் இது போன்ற குருபூஜை, ஜெயந்தி விழா நடக்கிறது., ரோட்டில் போகும் போதும், காரில் போகும் போதும் பாதுகாப்பா போங்க - இளைஞர்களுக்கு நடிகர் சௌந்தரராஜா அறிவுரை*


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, உசிலம்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு நடிகரும், தவெக மாநில செய்தி தொடர்பாளருமான சௌந்தரராஜா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,


தொடர்ந்து பேசிய நடிகர் சௌந்தரராஜா.,


சாதி பார்ப்பவன் சண்டாளன் என்று சொன்னவர், எல்லா மக்களும் இன்புற்று, சமமாக இருக்க வேண்டும், எல்லா மக்களையும் மதிக்க வேண்டும் என சொன்னவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.,


அப்பேர்பட்ட தேசிய தலைவரை நாம் அவர்கள் கூறிய கருத்துக்களை இளம் தலைமுறையினர் பின்பற்றி வர வேண்டும், 


நீங்கெல்லாம் சின்ன பசங்க தேவர் ஐயா சொன்ன கருத்துகளை பின்பற்றுங்க follow பன்னுங்க, ரோட்டில் போகும் போதும், காரில் போகும் போதும் பாதுகாப்பா போங்க, இது கொண்டாடும் நிகழ்வு இல்லை, அவரை நினைத்து கும்பிடும் நிகழ்வு, அவர் சொன்ன கருத்துக்களை பின்பற்ற தான் இது போன்ற குருபூஜை நடக்கிறது.,


என் அண்ணன் தம்பி, மாமன் மைத்துனர்கள், அக்கா தங்கச்சி எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள், அவரது வரலாறை மதித்து எல்லா மக்களையும் சமமாக நடத்த வேண்டும், மனிதநேயத்தை போற்ற வேண்டும்.,


இந்த உசிலம்பட்டிக்கு தேவையான தேவைகளை உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-யும், உசிலம்பட்டி மண்ணின் மைந்தர் அமைச்சர் நிர்மல்குமார் அவர்களும் முதல்வரின் கவணத்திற்கு கொண்டு போய் கொண்டே தான் இருக்கிறார்கள், கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்வார்கள்.,


கை என்றால் கொடு என்று அர்த்தம், நமக்கு மேல் யாராவது சாதித்து சென்றால் மனதார கை தட்டி பாராட்டுங்கள், நமக்கு அருகில் யாராவது கஷ்டப்பட்டால் கை கொடுத்து தூக்கி விடுங்கள் என பேசினார்.,


பேச்சு : சௌந்தரராஜா ( நடிகர் )

Friday, 30 October 2026

ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு

 *ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு* 



*ஜீ ஸ்குவாட் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் - விஷால் வெங்கட்  இயக்கத்தில்* 


நாசர்- ரெஜினா கஸாண்ட்ரா- ரமேஷ் திலக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு. 


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும்..... தொடர்ந்து வெற்றி படங்களை தமிழிலும் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.‌


'சில நேரங்களில் சில மனிதர்கள்' 'பாம்- Bomb' படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நாசர்- ரெஜினா கசாண்ட்ரா - ரமேஷ் திலக்- ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். ஹரிஹரன் ராஜூ கதை எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு *ஹெஷாம் அப்துல் வஹாப்* இசையமைக்கிறார். கலை இயக்கத்தை கே. மனோஜ் குமார் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்கிறார்.

 

ட்ராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ்-  நவீன் யெர்னேனி & ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழு பிரத்யேக காணொளியாக வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌


லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் 'குட் பேட் அக்லி', 'டியூட்', 'மொத ராத்திரி' ஆகிய வெற்றி பெற்ற படங்களை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் புதிய கூட்டணி - இயக்குநர் விஷால் வெங்கட் - நாசர் -  ரெஜினா கசாண்ட்ரா- ரமேஷ் திலக் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால்..... இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் அதிகரித்திருக்கிறது. மேலும் படத்தின் டைட்டில் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Premgi Amaren plays lead role in a new film produced by Lavanya Abirami and directed by C. Ganesh Kumar*

 Premgi Amaren plays lead role in a new film  produced by Lavanya Abirami and directed by C. Ganesh Kumar*







*Bose Venkat, Sastik and Nayana Sai play key characters in this gripping crime thriller*


C. Ganesh Kumar, who has worked as editor on several films, including 'Vallamai' and 'Nari Vettai', is all set to make his directorial debut with a film produced by Lavanya Abirami under the banner of Abirami Productions.


Headlined by Premgi Amaren, the yet-to-be-titled film is an intriguing crime thriller that revolves around the mysterious murder of a young woman. With a series of twists and turns, the film promises to unravel the mystery of who committed the crime and the motive behind it. In addition to playing the lead role, Premgi Amaren is also composing the music for the film.


Bose Venkat, Sastik and Nayana Sai play pivotal roles in the film. The project has been progressing at a brisk pace and has now entered the final phase of shooting. The team plans to wrap up all the remaining work at the same pace and bring the film to audiences soon.


Speaking about the movie, director C. Ganesh Kumar said, “The film is being crafted in a way that will keep audiences on the edge of their seats from beginning to end. Premgi Amaren will be seen in a role he has never portrayed before. Working with experienced actors like Bose Venkat has been a wonderful experience.”


The film’s cinematography is handled by Sirpi Kumar, while director C. Ganesh Kumar is also taking charge of the editing. Stunts: S.R. Hari Murugan. With shooting nearing completion, post-production work is set to begin soon. The makers are planning to announce further details about the film in due course.


***

லாவண்யா அபிராமி தயாரிப்பில் சி. கணேஷ் குமார் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம்

லாவண்யா அபிராமி தயாரிப்பில் சி. கணேஷ் குமார் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம்*







*போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகிறது*


'வல்லமை', 'நரி வேட்டை' உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய சி. கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ் பேனரில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் புதிய படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகிறார். 


இளம்பெண் ஒருவரை யார் கொலை செய்தார்கள், எதற்கு செய்தார்கள் என்பதை மர்ம முடிச்சுகளோடு பார்வையாளர்களுக்கு சொல்லும் இந்த கிரைம் திரில்லர் கதையில் பிரேம்ஜி அமரன் முதன்மை வேடத்தில் நடிப்பதோடு இசையும் அமைக்கிறார்.


போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் வேகமாக வளர்ந்து தற்போது படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் உள்ளது. அனைத்து பணிகளையும் இதே வேகத்தில் முடித்து படத்தை விரைவில் வெளியிட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை குறித்து பேசிய இயக்குநர் சி. கணேஷ் குமார், "தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. இதுவரை ஏற்றிராத வேடத்தில் பிரேம்ஜி அமரன் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். போஸ் வெங்கட் போன்ற அனுபவமிக்க நடிகர்களோடு பணிபுரிவது சிறந்த அனுபவமாக உள்ளது," என்றார்.


இந்த திரைப்படத்திற்கு சிற்பி குமார் ஒளிப்பதிவு செய்ய இயக்குனர் சி. கணேஷ் குமாரே படத்தொகுப்பையும் கையாளுகிறார். சண்டைப் பயிற்சி: எஸ். ஆர். ஹரி முருகன். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. 

Cycle Gap’ Is a Beautiful Blend of Nostalgia and Contemporary Romance” – Actress Sherry Agarwal

 *“‘Cycle Gap’ Is a Beautiful Blend of Nostalgia and Contemporary Romance” – Actress Sherry Agarwal*





_*Making her Tamil debut with Tubelight Productions’ musical romance, Sherry Agarwal reflects on her experience working with Nawaz, director M. R. Bharathi and the film’s team.*_


Actress Sherry Agarwal is steadily expanding her presence across the Indian entertainment industry, with projects spanning Telugu, Punjabi, Hindi and Kannada cinema, and now Tamil. Her Tamil debut, Cycle Gap, is an emotional musical romance that seeks to bridge the innocence and nostalgia of 1990s love with the emotions and sensibilities of today’s generation. Blending music, romance and relatable human emotions, the film aims to bring two generations of romantic sensibilities together in a story that evokes the past while speaking to contemporary audiences. Produced by Tubelight Productions and directed by M. R. Bharathi, the film features Sherry alongside producer and lead actor Nawaz.


Sharing her experience on working in ‘Cycle Gap’, Sherry says, “As an actress, I can honestly say that my experience working on Cycle Gap was amazing and memorable. The entire team was extremely supportive, and that positive environment made the shoot a very enjoyable learning experience for me. I am thankful to everyone who contributed their time, effort and talent to this film. I would genuinely love to work with this wonderful team again in the future. I wish Tubelight Productions, Producer and Hero Nawaz, Director M. R. Bharathi Sir, DOP Solomon Sir, Hemanth Selvaraj Sir, Executive Producer Suja Suriya Nila, and the entire team of Cycle Gap the very best. I hope the audience receives the film with the same love and enthusiasm with which all of us have worked on it.” 


Beyond Cycle Gap, Sherry’s screen credits include the Telugu films April 28th Em Jarigindi?, Ram Asur and I Hate You. She is also associated with the upcoming Telugu project Enthavaarugaani, whose teaser has been released, and the Kannada film Akarshita. Her listed projects further include the Hindi titles Kaushiki and IPS Dubey, along with the Telugu project Benaami. Her work extends beyond feature films to the Punjabi web series RANGE, which was released on Chaupal and is also available on YouTube, as well as music videos in Punjabi and Hindi for labels and productions including T-Series, Zee Music and Red Ribbon Musik.


For Sherry Agarwal, Cycle Gap marks an important milestone in her journey as an actress, bringing her to Tamil cinema with a story that celebrates the timeless emotions of love through a nostalgic yet contemporary lens. With its blend of music, romance and the innocence associated with 1990s love, the film seeks to strike an emotional chord with audiences across generations. Grateful for the opportunity to be part of the project, Sherry hopes the film will find a warm response from audiences and that her Tamil debut will mark the beginning of a meaningful journey in the industry.

எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்

 *“எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!*





தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரையுலகிலும் ’சைக்கிள் கேப்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார் நடிகை ஷெர்ரி அகர்வால். 1990களின் காதலில் இருந்த அப்பாவித்தனத்தையும் பழைய நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளோடும் ரசனைகளோடும் இணைக்கும் உணர்வுப்பூர்வமான மியூசிக்கல் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சைக்கிள் கேப்’. 


இசை, காதல் மற்றும் அனைவருக்கும் நெருக்கமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், இரண்டு தலைமுறைகளின் காதல் உணர்வுகளையும் ஒரே கதையில் இணைக்க முயல்கிறது. கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டெடுக்கும் அதேவேளையில், இன்றைய தலைமுறை ரசிகர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார்.

 

'சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஷெர்ரி அகர்வால் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு நடிகையாக, ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் பாசிட்டிவாக இருந்ததுடன் படக்குழுவினர் அனைவரும் இனிமையாக பழகினர். பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் மாற்றியது. இவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். 


ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி சார், ஒளிப்பதிவாளர் சாலமன் சார், ஹேமந்த் செல்வராஜ் சார், எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா மற்றும் ‘சைக்கிள் கேப்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயம் பார்வையாளர்களுக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார். 


தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ ஆகிய திரைப்படங்களிலும் ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார். டீசர் வெளியாகியுள்ள ‘எந்தவாருகானி’ என்ற வரவிருக்கும் தெலுங்குப் படத்திலும், ‘ஆகர்ஷிதா’ என்ற கன்னடப் படத்திலும், ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ ஆகிய இந்திப் படங்களிலும், ‘பெனாமி’ என்ற தெலுங்குப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.


திரைப்படங்கள் மட்டுமல்லாது, சௌபால் தளத்தில் வெளியிடப்பட்டு யூடியூப்பிலும் காணக்கிடைக்கும் பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ தொடரிலும் நடித்துள்ளார். இதுதவிர, டி-சீரிஸ், ஜீ மியூசிக் மற்றும் ரெட் ரிப்பன் மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளில் உருவான பஞ்சாபி மற்றும் இந்தி இசை வீடியோக்களிலும் அவர் நடித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் தான் அறிமுகமாகும் ‘சைக்கிள் கேப்’ தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்கிறார் ஷெர்ரி அகர்வால். இசை, காதல் மற்றும் 1990களின் காதலில் நிறைந்திருந்த அப்பாவித்தனம் ஆகியவற்றின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், பல தலைமுறை ரசிகர்களின் மனங்களிலும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்

 *‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குநர் சசிகுமார்!*





















‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘எங்க காட்டுல மழை’, ‘சிக்கிக்கு சிக்கிகுச்சு’, ‘காக்ட்டைல்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த மிதுன் மகேஸ்வரன், தற்போது மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் ‘அரிகொம்பன்’ திரைப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டார்.


காட்டு யானையை மையமாகக் கொண்டு, அதே காட்டில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் எடுத்துரைக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் கதாநாயகியாக கேரளத்தைச் சேர்ந்த தேவிகா கிருஷ்ணன் நடித்துள்ளார். ‘திருடா திருடி’ படத்தின் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, மு. ராமசாமி, எதிர்நீச்சல் விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.


காட்டுக்குள் இரண்டு கிராமங்களைப் பிரம்மாண்டமாகச் செட் அமைத்து, அந்தக் கிராம மக்களின் வாழ்வியலையும் காட்டு யானையையும் மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக இதன் இயக்குநரும் கதாநாயகனுமான மிதுன் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது…