Featured post

தேனிசைத் தென்றல்' தேவாவின் குரலில் இறுதியாக உருவான 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடலான 'வா சிவா' வெளியீடு!*

 *'தேனிசைத் தென்றல்' தேவாவின் குரலில் இறுதியாக உருவான 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடலான 'வா சிவா' வெளியீடு!* *இய...

Monday, 16 November 2026

திருமண கனவை நனவாக்கும் 'கனவு வெட்டிங்'!*

 *👩‍❤️‍💋‍👨திருமண கனவை நனவாக்கும் 'கனவு வெட்டிங்'!*








 *நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், மாதம்பட்டி ரங்கராஜ், டாக்டர் சாம் பால் ஆகியோர் ‘கனவு வெட்டிங்’ நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டனர்!* 


*கனவு வெட்டிங் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை பவித்ரா லட்சுமி அறிவிப்பு!*


சென்னையில், சொகுசுத் திருமண அனுபவத்தை வழங்கும் முன்னணி நிறுவனமான  ‘கனவு வெட்டிங்’ பிராண்ட், டிசம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள RK கன்வென்ஷன் சென்டரில் மூன்று நாள் பிரம்மாண்ட திருமணக் கண்காட்சியை நடத்தவுள்ளது.


ஒவ்வொரு கொண்டாட்டமும் மறக்க முடியாத ஓர் அனுபவமாக அமைய வேண்டும். இந்த  நோக்கத்துடன், தமிழில் ‘கனவு’ என்ற அழகான அர்த்தத்தைக் கொண்ட ‘கனவு வெட்டிங்’ என்ற சொகுசுத் திருமண அனுபவத்தை வழங்கும் பிராண்டின் அதிகாரப்பூர்வ லோகோ, சென்னையில் உள்ள ஹோட்டல் அக்கார்டில் அறிமுகம் செய்யப்பட்டது.


இந்த லோகோவை நடிகர் கணேஷ் வெங்கட்ராம், பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், டாக்டர் சாம் பால், நடிகை பவித்ரா லட்சுமி மற்றும் உபாசனா உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்துறையினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை பவித்ரா லட்சுமி இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாசிடராகவும் அறிவிக்கப்பட்டார். 


சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் MOAR Digital 360 என்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிராண்டிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மோனிகா ரிச்சர்ட் இதனை முன்னெடுத்துள்ளார். ஒவ்வொரு கொண்டாட்டமும் தனித்துவமானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ‘கனவு வெட்டிங்’ உருவாக்கப்பட்டுள்ளது.


விழாவில் மோனிகா ரிச்சர்ட் பேசியதாவது, "கனவு வெட்டிங் என்பது வழக்கமான ஒன்று கிடையாது. திருமணத்திற்கான ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிடுவதற்கு முன்பே, தங்களுடைய திருமணக் கனவை நேரடியாக அனுபவிக்கும் வகையில் தம்பதிகளுக்காக முழுமையான ஓர் உலகத்தை உருவாக்குவதே எங்களுடைய நோக்கம்.


சென்னையில் மட்டும் இப்போது தொடங்கியுள்ளோம். இதே அனுபவத்தை உலகம் முழுவதும் வாழும் இந்திய வம்சாவளியினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், இங்கிலாந்து, துபாய் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கும் இந்த பிராண்டை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.


‘கனவு வெட்டிங்’ நிறுவனத்தின் முதல் பிரம்மாண்ட திருமண கான்க்ளேவ், வரும் டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள RK கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.


மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், முப்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 150 க்கும் அதிகமான முன்னணி மற்றும் பிரீமியம் சேவை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. மேலும், திருமணத்திற்குத் தயாராகி வரும் 6,000 க்கும் மேற்பட்ட தம்பதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் அனைவரும் ‘கனவு வெட்டிங்’ குழுவினரின் தொடக்கத்திற்கும் வருங்கால பணிகளுக்கும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். 


நிகழ்ச்சியின் இறுதியில், நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிகளை மேற்கொண்ட ஐரிஸ் ஈவண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் லதா ஏ. கிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், பார்ட்னர்ஸ் மற்றும் ஊடகத்துறையினருக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.


தற்போது அதிகாரப்பூர்வ லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 18 முதல் 20 வரை சென்னை ECR-ல் உள்ள RK கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ள முதல் ‘கனவு வெட்டிங்’ கான்க்ளேவ் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. தங்களது திருமணக் கனவை நனவாக்கும் வகையில், தம்பதிகளுக்கு பிரத்யேகமான மற்றும் முழுமையான திருமண அனுபவத்தை இந்த நிகழ்வு வழங்கவுள்ளது.

Celebrities Ganesh Venkatraman, Madhampatty Rangaraj and Dr.Sam Paul Unveil Kanavu Wedding Logo; Pavithra Lakshmi Is Announced as the Brand Ambassador*

 *Celebrities Ganesh Venkatraman, Madhampatty Rangaraj and Dr.Sam Paul Unveil Kanavu Wedding Logo; Pavithra Lakshmi Is Announced as the Brand Ambassador*








_*India’s luxury bridal experience brand opens its curtain ahead of a three-day conclave at RK Convention Center, ECR, Chennai, on December 18, 19 and 20.*_


Chennai, November 15, 2026: Every celebration deserves to be extraordinary can be changed to something impactful.


Kanavu Wedding, the luxury bridal experience brand named after the Tamil word for “dream”, unveiled its official logo at Hotel Accord, Chennai. The logo was launched by Ganesh Venkatraman, Madhampatty Rangaraj, Sam Paul, actress Pavithra Lakshmi and Upasana among others  in the presence of special invitees and members of the media. The evening also brought the announcement that actor Pavithra Lakshmi is the brand’s official ambassador.


Conceptualised by MOAR Digital 360, the Chennai-based IT and Branding company led by Monicka Richard, Kanavu Wedding is built on a simple belief: every celebration deserves to be extraordinary. 


Speaking at the launch, Monicka Richard, Founder and CEO, MOAR Digital 360, said, “Kanavu Wedding is not another wedding expo rather a conclave. It is a fully immersive world where couples step into their wedding dream before they plan a single detail. Chennai is only the launchpad. The brand will expand to the UK, Dubai and Malaysia, bringing the same experience to Indian diaspora communities worldwide.


The first Kanavu Wedding conclave will be held on December 18, 19 and 20, 2026, at RK Convention Center, ECR, Chennai. Across three full days, it will bring together more than 150 premium vendors spanning over 30 categories, with more than 6,000 to-be-wed couples expected to attend.


The celebrities present extended their warm wishes to the Kanavu Wedding team and conveyed their best for the brand’s journey ahead. The evening concluded with a vote of thanks by Dr. Latha A Krishnan of IRIS Events who was the event planner, thanked the guests, partners and media for their presence and support. With the logo now revealed, all eyes turn to the inaugural conclave from December 18 to 20, 2026, at RK Convention Center, ECR, Chennai, where couples can step into their wedding dream in a fully immersive setting.

Cult Digital Accelerates Growth with Twin Tamil Announcements, Emerging as One of India’s Fastest-Growing Independent Multilingual Content Mini Studios

 *Cult Digital Accelerates Growth with Twin Tamil Announcements, Emerging as One of India’s Fastest-Growing Independent Multilingual Content Mini Studios*





*After building a diverse slate across Hindi, Marathi, Tamil and Malayalam, Suunil Jaiin and Aditya Joshi’s Cult Digital enters its biggest expansion phase yet with KOODU, Octopus and a robust 2026–27 pipeline*


Independent multilingual content mini studio Cult Digital, led by producers Suunil Jaiin and Aditya Joshi, is entering a defining phase of growth. On November 13, the company announced two major Tamil projects in a single day—the feature film KOODU, produced in association with Panorama Studios and Skymoon Entertainment, targeting an early 2027 release, and Octopus, a Tamil original series premiering on ZEE5 on November 27.


The back-to-back announcements underline Cult Digital’s evolution from an independent production banner into one of India’s fastest-growing multilingual content mini studios, with a vision to develop and produce distinctive stories across languages, regions and platforms.


Over the years, Jaiin and Joshi have built an impressive portfolio across industries, with titles including Takatak 2, Dhondi Champya Ek Prem Katha (with Reliance Entertainment), the Tamil period drama August 16, 1947, the Malayalam film Get-Set Baby starring Unni Mukundan, Phule in association with Zee Studios and filmmaker Anant Mahadevan, Dedh Bheega Zameen, and the recently released Marathi film Tujhya Aaila.


The studio’s growing portfolio reflects its ambition to create a new-age content ecosystem that bridges regional storytelling with wider audiences.

Following the release of Tujhya Aaila, Cult Digital is gearing up for a packed 2026–27 lineup. The upcoming slate includes Rakthphal, directed by two-time National Award-winning filmmaker Sujay Dahake, the Tamil feature KOODU, directed by Joyal Vijay, and the Tamil web series Octopus.


The company’s short film Save The God has also been selected for screening at IFFI Goa this year. Additionally, Cult Digital is producing the Hindi feature Aanch, co-produced with Suparn Verma and directed by Ravi Shankar Kaushik.


Adding further scale to the slate is a large-scale, star-studded feature film backed by one of India’s leading film studios. The film has completed production and is scheduled for release in early 2027.


Together, the upcoming lineup represents five feature films and one premium series, showcasing Cult Digital’s strategy of building stories across multiple markets rather than being restricted to a single language or region.


Aditya Joshi — Film Entrepreneur & Producer

“Over the next five years, we believe the future of Indian film production will be shaped by film entrepreneur producers—creators who combine storytelling instincts with business vision, audience understanding and the ability to build sustainable content ecosystems.


At Cult Digital, we are building a new-age multilingual content studio by identifying the right story, the right creator and the right partner for every project. Our philosophy is to remain agile, collaborative and market-focused—bringing together creative excellence and strategic studio partnerships to create content that can travel across languages, regions and audiences.”

The company is now looking beyond its existing markets and preparing to enter Gujarati cinema, with conversations underway with leading filmmakers from the industry. Cult Digital is already developing its next slate of six to eight films across Marathi, Hindi, Gujarati, Tamil and Malayalam, further strengthening its presence as a pan-Indian content company that believes in stories and storytellers.


With films and series spanning Marathi, Hindi, Tamil, Malayalam and soon Gujarati cinema, Cult Digital’s growth story reflects the changing landscape of Indian entertainment—where regional stories are finding national and global audiences, and independent players are building scalable content studios of the future.

For Cult Digital, November 13 was not just a day of announcements—it marked the beginning of its next chapter.

தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்... அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்🔥*

 *தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்... அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்🔥*





*இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சுயாதீன பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கல்ட் டிஜிட்டல் ஒரே நாளில் இரண்டு தமிழ் திரைப்பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது!*


இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் படைப்புகளை உருவாக்கி வரும் சுனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷியின் கல்ட் டிஜிட்டல் நிறுவனம், கூடு மற்றும் ஆக்டோபஸ் ஆகிய இரண்டு புதிய தமிழ் திரைப்படங்களுடன் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது. மேலும், 2026- 2027 ஆம் ஆண்டிற்கான திட்டத்தையும் உருவாக்கி வருகிறது. 


கடந்த நவம்பர் 13ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு முக்கியமான தமிழ் படைப்புகளை இந்நிறுவனம் அறிவித்தது. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்கைமூன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் கூடு திரைப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸான ‘ஆக்டோபஸ்’ நவம்பர் 27ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு அறிவிப்புகளும், சுயாதீன திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கிய கல்ட் டிஜிட்டல், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் தளங்களுக்கு ஏற்ற தனித்துவமான கதைகளை உருவாக்கி, தயாரிப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.


கடந்த சில ஆண்டுகளாக ஜெயின் மற்றும் ஜோஷி இணைந்து பல்வேறு திரையுலகங்களில் பாராட்டத்தக்க படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தகடக் 2, தோண்டி சாம்ப்யா ஏக் பிரேம் கதா, தமிழ் வரலாற்றுப் பின்னணியில் உருவான ஆகஸ்ட் 16, 1947, உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படமான கெட்-செட் பேபி, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அனந்த் மகாதேவன் உடன் இணைந்து உருவாக்கிய புலே, தேத் பீகா சமீன் மற்றும் சமீபத்தில் வெளியான மராத்தித் திரைப்படமான துஜ்யா அய்லா உள்ளிட்டவை இவர்கள் தயாரிப்பில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது. 


இரண்டு முறை தேசிய விருது பெற்ற இயக்குநர் சுஜய் தஹாகே இயக்கத்தில் உருவாகும் ரக்தஃபல், ஜோயல் விஜய் இயக்கும் தமிழ் திரைப்படமான கூடு மற்றும் தமிழ் வெப் சீரிஸான ஆக்டோபஸ் ஆகியவை அடுத்து வெளியாகவுள்ளன. மேலும், இந்நிறுவனம் தயாரித்துள்ள Save The God என்ற குறும்படம், இந்த ஆண்டு கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


மேலும், இயக்குநர் ரவி சங்கர் கௌஷிக் இயக்கத்தில், சுபர்ன் வர்மாவுடன் இணைந்து தயாரிக்கும் இந்தித் திரைப்படமான Aanch படத்தையும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம் தயாரிக்கிறது. இதுமட்டுமல்லாது, இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றின் ஆதரவுடன், நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தமாக, ஐந்து திரைப்படங்கள் மற்றும் ஒரு பிரம்மாண்டமான வெப் சீரிஸை கல்ட் டிஜிட்டல் தயாரித்து வருகிறது. 


இதுபற்றி திரைப்படத் தொழில்முனைவோர் மற்றும் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி கூறியதாவது, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியத் திரைப்படத் தயாரிப்புத் துறையின் எதிர்காலத்தை திரைப்படத் தொழில்முனைவோரான தயாரிப்பாளர்கள்தான் தீர்மானிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். கதை சொல்லும் திறனுடன், வணிக நோக்கம், பார்வையாளர்களைப் பற்றிய புரிதல் மற்றும் நல்ல கதைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர்களே எதிர்காலத் திரைப்படத் துறையை வழிநடத்துவார்கள்.


கல்ட் டிஜிட்டல் நிறுவனத்தில், ஒவ்வொரு படைப்புக்கும் பொருத்தமான கதை, சரியான படைப்பாளர் மற்றும் சரியான பார்ட்னரை அடையாளம் கண்டு, புதிய தலைமுறை பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி வருகிறோம். எங்களது அணுகுமுறை என்பது கூட்டாண்மை மற்றும் சந்தையை மையமாகக் கொண்ட திட்டமிடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த கதைகளை தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒன்றிணைத்து, பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் பார்வையாளர்களைக் கடந்து பயணிக்கக்கூடிய படைப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்” என்றார். 


தற்போது, ஏற்கெனவே செயல்பட்டு வரும் மொழிச் சந்தைகளைக் கடந்து குஜராத்தி திரைப்படத் துறையிலும் நுழைய கல்ட் டிஜிட்டல் திட்டமிட்டு வருகிறது. இதற்காக அத்துறையைச் சேர்ந்த முன்னணி இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.


மேலும், மராத்தி, இந்தி, குஜராத்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அடுத்தகட்டமாக ஆறு முதல் எட்டு திரைப்படங்களை உருவாக்குவதற்கான பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், கதைகளுக்கும் கதை சொல்லிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாக தனது இருப்பை மேலும் வலுப்படுத்த கல்ட் டிஜிட்டல் திட்டமிட்டுள்ளது.


கல்ட் டிஜிட்டல் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நவம்பர் 13 என்பது வெறும் இரண்டு படைப்புகளின் அறிவிப்பு வெளியான நாள் மட்டுமல்ல! அதன் வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கிய நாளாகவும் அமைந்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு குறித்த 1-நிமிட விழிப்புணர்வு வீடியோ போட்டி: பி.ஆர்.எஸ்.ஐ (PRSI) சென்னை கிளை ஏற்பாடு

உணவுப் பாதுகாப்பு குறித்த 1-நிமிட விழிப்புணர்வு வீடியோ போட்டி: பி.ஆர்.எஸ்.ஐ (PRSI) சென்னை கிளை ஏற்பாடு



​இந்திய மக்கள் தொடர்பு கழகத்தின் (PRSI) சென்னை கிளை சார்பில், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் (Coromandel International Limited) நிறுவனத்தின் ஆதரவுடன், உணவுப் பாதுகாப்பு குறித்த "1-நிமிட பொதுச் சேவை அறிவிப்பு (PSA) வீடியோ போட்டி" சென்னை மயிலாப்பூரில் உள்ள ஹோட்டல் சவேராவில் இன்று (நவம்பர் 13) வெற்றிகரமாக நடைபெற்றது.

​"உணவைச் சேமிப்போம் – வீணாக்குவதைத் தவிர்ப்போம், சிறப்பாக வாழ்வோம்" (Save Food – Waste Less, Live Better) என்ற மையக்கருத்தில், இளம் தகவல் தொடர்பாளர்களிடையே உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூக மாற்றத்தை ஊக்குவிக்கவும் இப்போட்டி நடத்தப்பட்டது.

​இவ்விழாவில், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் (AVP & Head) திரு. தினேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். "சிந்திப்போம், படைப்போம், பேசுவோம்!" (Think, Create, Speak!) என்ற வாசகத்தின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்களது படைப்புகளைச் சமர்ப்பித்தனர்.

​போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் நடுவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன:

​முதல் பரிசு (ரூ. 25,000): செல்வி. எஸ். தேஜஸ்வினி, காட்சித் தொடர்பியல் துறை (Department of Visual Communication), சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.

​இரண்டாம் பரிசு (ரூ. 15,000): திரு. எஃப். கிராஸ் ஷெரூன் (Cross Sheroon. F), காட்சித் தொடர்பியல் துறை, வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனம் (VISTAS), சென்னை.

​மூன்றாம் பரிசு (ரூ. 10,000): திரு. ஆர். இர்பான், காட்சித் தொடர்பியல் துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

​பி.ஆர்.எஸ்.ஐ (PRSI) சென்னை கிளையின் தலைவரும், சென்னை வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் காட்சித் தொடர்பியல் துறை இணைப் பேராசிரியருமான டாக்டர் என். ராஜா இவ்விழாவிற்குத் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கிக் கௌரவித்தார். இந்நிகழ்விற்கு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

Public Relations Society of India (PRSI) Chennai Chapter Host 1-Minute PSA Video Contest on Food Conservation

 Public Relations Society of India (PRSI) Chennai Chapter Host 1-Minute PSA Video Contest on Food Conservation

​CHENNAI sponsored by Coromandel International Limited, November 13, 2026. 



The Public Relations Society of India (PRSI), Chennai Chapter successfully organized a "1-Minute Public Service Announcement (PSA) Video Contest" today at Hotel Savera in Mylapore, Chennai. On the theme "Save Food – Waste Less, Live Better," the initiative aimed to inspire young communicators to create awareness and drive behavioral change around food conservation.  


​The event featured an address by invited speaker Mr. Dinesh Kumar, AVP & Head – Corporate Communication & Marketing at Coromandel International Limited. Under the tagline "Think, Create, Speak!", the competition drew creative entries from students across Tamil Nadu.  


​Following the evaluation of the entries, the winners of the contest were announced and felicitated:  


​First Prize Rs 25,000 won by Ms. Tejaswini S, Department of Visual Communication, Sathyabama Institute of Science and Technology, Chennai.  

​Second Prize Rs 15,000 won by Mr. Cross Sheroon. F, Department of Visual Communication, Vels Institute of Science, Technology & Advanced Studies (VISTAS), Chennai.  

​Third Prize Rs 10,000 won by Mr. R. Irfan, Department of Visual Communication, Jamal Mohamed College, Tiruchirappalli.  


​The program and awards ceremony were presided over by Dr. N. Raja, Chairman, PRSI Chennai Chapter and Associate Professor, Department of Visual Communication, Vels Institute of Science, Technology and Advanced Studies, Chennai, who presented the Certificates of Achievement and Cash Prizes to the winners. The event was sponsored by Coromandel International Limited.

ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன்ஸ் - Sri Venkatachalapathi Visual On Production நிறுவனம் தயாரிக்கும் Production No 1 'லவ் லாக்

 *ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன்ஸ் -  Sri Venkatachalapathi Visual On Production நிறுவனம் தயாரிக்கும் Production No 1 'லவ் லாக்- (Love Lock) 'படத்தின் தொடக்க விழா*





*'லவ் லாக்' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'மொத ராத்திரி ' நடிகர் DK கார்த்திகேயன்*


*தமிழக முதல்வர் விஜயுடன் மூன்று படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கௌசல்யா மீண்டும் அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'லவ் லாக்'*


ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எட்வின் GJ இயக்கத்தில் 'மொத ராத்திரி' படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் D.K. கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'லவ் லாக்- Love Lock'' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


அறிமுக இயக்குநர் எட்வின் GJ இயக்கத்தில் தயாராகும் 'லவ் லாக் - Love Lock' படத்தில் D.K. கார்த்திகேயன், கௌசல்யா, நடிகை லாவன்யா, ராஜ் MRK ,

அன்பழகன்,  ரமா, உதய் மகேஷ், அஜித் கோஷி, தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரசோமிகின் - (Razomikhln) ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மூன்ராக்ஸ் ( MoonRoxx) இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அர்ஜுன் மேற்கொள்ள கலை இயக்கத்தை எஸ் ஏ ராஜா கவனிக்கிறார். லவ் ட்ராமா ஜானரில் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிக்கிறார். 


படத்தின் தொடக்க விழா 15.11.2026 அன்று சென்னையில் பாரம்பரிய பூஜையுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


*படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,*


'' ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் காதலிக்கிறார்கள் எனும் இயல்பான கதையாக இருந்தாலும்... அதில் பறவைகளின் மென்மையான இறகு மீது கடினமான பாறாங்கல்லை வைத்தால்... இறகுகளின் எதிர்வினை என்ன? என்பதை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், யதார்த்தமான தினசரி வாழ்வியலுடன் இணைத்து, உணர்வுபூர்வமாக 'லவ் லாக்' படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகை கௌசல்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் இந்த கதையை கேட்டு நடிக்க சம்மதம்  தெரிவித்ததை எனக்கு கிடைத்த ஆசியாக பார்க்கிறேன். இந்தப் படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக  நடிக்கிறார் அவரும் கதையை கேட்டதும், 'நடிப்பதற்கு வாய்ப்புள்ள வேடம்' எனச் சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டார்.


இந்தப் படத்தில் நடிகர் எம் ஆர் கே ராஜ் ரஜினி ரசிகராக கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார். மற்றொரு ஹீரோ கார்த்திகேயன் அமைதியான கவிதை எழுதும் ஆசிரியராக வரவேண்டும் என்ற வேடத்தில் நடிக்கிறார்'' என்றார்.


*நடிகை கௌசல்யா பேசுகையில்,*


'' ஒரு காதல் கதையை பணிவான திரை மொழியில் இயக்குநர் சொன்னார். இந்த கதையை கேட்கும்போதே காதலைப் பற்றி கச்சிதமாக -சந்தோஷமாக - சொல்லப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். தயாரிப்பாளருக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். பெற்றோர்கள் எப்போதும் 'லவ்'வை லாக் செய்து தான் வைத்திருப்பார்கள். அப்படி தான் நான் இந்த படத்தில் பெற்றுள்ள கதாபாத்திரத்தில் லவ் மீது லாக் இருக்கும்'' என்றார். 


*நடிகர் கார்த்திக்கேயன் பேசுகையில்,*


''  இதற்கு முன் இணைய தொடர்களிலும், 'மொத ராத்திரி' திரைப்படத்திலும் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறேன். ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 


*நடிகை லாவண்யா அன்பழகன் பேசுகையில்,*


'' இது என்னுடைய முதல் திரைப்படம். அதிலும் இரண்டு நாயகர்களுடன் நடிக்கும் முதல் படம். கதையை கேட்கும் போதும்.. இப்படத்தின்  டைட்டிலும்... எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யங்கான... சார்மிங்கான.. டீம். கௌசல்யா மேடத்துடன் நடிக்கவிருக்கிறேன் இதுவே எனக்கு உற்சாகமாக இருக்கிறது'' என்றார். 


*நடிகர் ராஜ் MRK பேசுகையில்,*


''  குறும்படம்- இணைய தொடர்-  சினிமாவில் சின்ன சின்ன வேடத்தில் நடித்த வந்த நான்.. இப்படத்தின் மூலம் கதையின் நாயகர்களில் ஒருவராக அறிமுகமாகிறேன். அற்புதமான கதை. ரசிகர்களுக்கு பிடிக்கும். வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி என்றார்.  


*இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் சிவராமன் பேசுகையில்,*


'' இளமையான புதிதான இளைஞர்கள் அடங்கிய குழுவாக இந்த படக்குழு அமைந்திருக்கிறது. ஊடகங்களின் ஆதரவு தேவை'' என்றார்.


இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Sunday, 15 November 2026

ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் பேனரில் ராஜாபிரபு தயாரிப்பில், சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டைனர் 'கிளிக்' (Click)

 *ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் பேனரில் ராஜாபிரபு தயாரிப்பில், சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டைனர் 'கிளிக்' (Click)*







*ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் 'கிளிக்'*


ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனம் சார்பில் ராஜாபிரபு தயாரித்து, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில், ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் 'கிளிக்' எனும் யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டைனர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.


இத்திரைப்படத்தைத் தயாரிப்பதுடன் ராஜாபிரபுவே கதாநாயகனாகவும் நடிக்கிறார். துள்ளலான இளமை, சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு புதுமையான கதையாக, இன்றைய தலைமுறையினருடன் எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.


ஜென் சி (Gen-Z) கதைக்களத்துடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் உருவாகும் 'கிளிக்', உறவுகளின் உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளின் எதிர்பாராத திருப்புமுனைகளை அழகாக வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான கலகலப்பான திரை அனுபவத்தை வழங்க உள்ளது.


*நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்*


ஓவியா, ராஜாபிரபு, சுந்தர் மஹாஸ்ரீ , அஸ்மிதா, அமுதவாணன், 'லொள்ளு சபா' மனோகர், சல்மா பைரோஸ், அருள் செல்வம் 


தயாரிப்பு : ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts)

தயாரிப்பாளர் : ராஜாபிரபு

இயக்கம் : சுந்தர் மஹாஸ்ரீ

ஒளிப்பதிவு : அருண் குமார், 

இசை : ஜோசப் சந்திரசேகர், 

நிர்வாக தயாரிப்பு : சையத் ஜாஃபர்,


தற்போது இத்திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்…

Produced by Rajaprabhu under the banner of JRP International Cine Arts and directed by Sundar Mahashree,

 *Produced by Rajaprabhu under the banner of JRP International Cine Arts and directed by Sundar Mahashree, the youthful suspense entertainer 'Click'*








*Oviya and Rajaprabhu play the lead roles in 'Click'*


The grand youthful suspense entertainer film 'Click' has been produced by Rajaprabhu under the banner of JRP International Cine Arts, directed by Sundar Mahashree, with Oviya and Rajaprabhu starring in the lead roles.


In addition to producing the film, Rajaprabhu also plays the hero. Created as an innovative story filled with youthful vibrancy, suspense, and engaging entertainment elements, the movie is designed to easily connect with today's generation.


Featuring a Gen-Z storyline paired with a fast-paced screenplay, 'Click' beautifully captures the excitement of relationships and unexpected emotional twists, promising audiences a complete and lively cinematic experience.


*Cast and Crew*


Cast: Oviya, Rajaprabhu, Sundar Mahashree, Asmita, Amudhavanan, 'Lollu Sabha' Manohar, Salma Fairoz, Arul Selvam


Banner: JRP International Cine Arts

Producer: Rajaprabhu

Director: Sundar Mahashree

Cinematography: Arun Kumar

Music: Joseph Chandrasekar

Executive Producer: Syed Jafar


Further announcements regarding the film's theatrical release will be out soon...