Featured post

John Deo Movie Review

  John Deo Tamil Movie Review ஹாய் மக்களே! இன்னைக்கு நம்ம பார்க்கப்போற படம் John Deo. Arjun Das நடிப்பில், Madhumita இயக்கத்தில் உருவாகியிரு...

Thursday, 12 November 2026

With a heart full of love and gratitude, I’m so happy to share that Raj and I got married on November 11(Today), in a beautiful, intimate ceremony surrounded by our loved ones.

With a heart full of love and gratitude, I’m so happy to share that Raj and I got married on November 11(Today), in a beautiful, intimate ceremony surrounded by our loved ones.







It brings me so much joy to share this happiness with all of you who have been such a special part of my journey.


To my friends in the press and media, you have always been more than just a part of my professional life. You’ve celebrated my milestones, shared in my happiest moments, and been there for me through the years. In so many ways, you’ve been a part of my story, and I will always cherish that.


Thank you for all the love, kindness and warmth you’ve shown me over the years. Raj and I hope to carry the same affection and your blessings with us into the years ahead. 


Love

Priya & Raj

அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி(இன்று),

 அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நவம்பர் 11ஆம் தேதி(இன்று), எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில், எனக்கும் ராஜ்-க்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.


இத்தனை ஆண்டுகளாக என் பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் விரும்புகிறோம்.


உங்கள் அன்பு என்றும் எங்களுடன் இருக்கட்டும்.


அன்புடன்,

ப்ரியா-ராஜ்







Birla Studios and Neelam Studios unveil ‘IGNORE’,

 Birla Studios and Neelam Studios unveil ‘IGNORE’, the first single from K. Manikandan-starrer Makkal Kaavalan*



Birla Studios and Neelam Studios have unveiled ‘Ignore’, the first single from their upcoming action drama Makkal Kaavalan, starring K. Manikandan. Written and directed by Santhosh Kumar, the film is slated for a worldwide theatrical release on 4 December 2026.


‘Ignore’ features vocals by Yogi B, the Malaysian rapper known as the “Godfather of Tamil Hip-Hop”, actor and singer Aditi Shankar, and Nivas K Prasanna. The song is composed, arranged and programmed by Nivas K Prasanna, with lyrics penned by M.K. Balaji.Telling the story of a police officer who is ignored and humiliated at every turn, ‘Ignore’ is a rap-driven anthem that refuses to stay in its pain. The song moves constantly between hurt and resolve, as he draws his strength from the very wounds that weigh on him, and rap gives that shift its edge. A short section rooted in a ritual folk tradition brings a raw, earthy turn before the track rises again, with parai drums that lift it into defiance. It is a song of resilience and self-belief, about the moment a victim becomes the victor.

Produced by Birla Studios and Pa Ranjith & Aditi Anand's Neelam Studios, Makkal Kaavalan is written and directed by Santhosh Kumar. The film follows a simple man determined to live with dignity until a corrupt system leaves him with only two choices: surrender or resist. What begins as one man’s struggle for survival grows into something far larger, forcing him to become a leader he never sought to be. As the battle intensifies and the price of resistance mounts, the line between an ordinary man and a people’s protector begins to disappear.


‘Ignore’ is the first taste of a film about an ordinary man who becomes a people’s protector. Makkal Kaavalan releases worldwide in theatres on 4 December 2026.


https://www.youtube.com/watch?v=_74gonZ2-UI

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் முதல் பாடலான 'இக்னோர் – IGNORE'

 *பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் முதல் பாடலான 'இக்னோர் – IGNORE' வெளியீடு!*



பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான 'மக்கள் காவலன்' (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து 'இக்னோர் – IGNORE' எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


'இக்னோர் – IGNORE' பாடலுக்கு 'தமிழ் ஹிப் ஹாப்பின் தந்தை' (Godfather of Tamil Hip-Hop) என அழைக்கப்படும் மலேசிய ராப்பர் யோகி பி (Yogi B), நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளதுடன், பாடலுக்கான இசை ஒருங்கிணைப்பு மற்றும் நிரலாக்கப் பணிகளையும் (Arrangements & Programming) மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளைப் பாடலாசிரியர் எம். கே. பாலாஜி எழுதியுள்ளார்.


இத்திரைப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதையைச் சொல்லும் 'இக்னோர் – IGNORE'.தொடர்ந்து ஒலிக்கும் அதிரடி ராப் இசையால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வலியால் முடங்கிவிடாமல், அதிலிருந்து மீண்டெழும் மன உறுதியை வெளிப்படுத்தும் ஒரு ராப் பாடலாகும் (Rap-driven anthem). காயங்களுக்கும் உறுதியான தீர்மானத்திற்கும் இடையே ஊசலாடும் இந்தப் பாடலில், தன்னை மனதளவில் காயப்படுத்திய அதே காயங்களிலிருந்தே அவர் வலிமையைப் பெறுகிறார்; அந்த மாற்றத்திற்கு ராப் இசை கூடுதல் வீரியத்தை அளிக்கிறது. பாடலின் ஒரு பகுதியில் இடம்பெறும் நாட்டுப்புறச் சடங்கு மரபைச் சார்ந்த இசை, ஒருவிதமான இயல்பான மண்ணின் மணத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து, 'பறை' இசையின் முழக்கத்துடன் பாடல் மீண்டும் எழுச்சி பெற்று, எதிர்ப்புணர்வையும் துணிச்சலையும் வெளிப்படுத்தும் உச்சத்தை அடைகிறது. மீண்டெழும் மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் உரத்துப் பேசும் இந்தப் பாடல், பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி வெற்றியாளராக மாறுகிறார் என்பதையும் உணர்த்துகிறது.


பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதன், ஊழல்கள் நிறைந்த அமைப்பால் 'சரணடைதல்' அல்லது 'எதிர்த்து நிற்றல்' என்ற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறான். உயிர் வாழ்வதற்கான ஒரு தனி மனிதனின் போராட்டம், காலப்போக்கில் மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது. இதனால், தான் விரும்பாத ஒரு சூழலில் அவன் ஒரு தலைவனாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போராட்டம் தீவிரமடைந்து, எதிர்ப்புக்கான விலை அதிகரிக்கும்போது, ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மறையத் தொடங்குகிறது.


ஒரு சாதாரண மனிதன் எப்படி மக்களின் காவலனாக மாறுகிறான் என்பதை உணர்த்தும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் முதல் அறிமுகமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

https://www.youtube.com/watch?v=_74gonZ2-UI


Wednesday, 11 November 2026

RX' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

 *’RX' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!* 




இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு RX எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, தெலுங்குத் திரையுலகில் ஸ்ரீமந்துடு, ரங்கஸ்தலம், உபென்னா மற்றும் மாபெரும் வெற்றிபெற்ற புஷ்பா உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம், பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்கத்திற்கும், வலுவான கதைக்களங்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.


தெலுங்கு மட்டுமல்லாது, பிற மொழித்திரைப்படங்களையும் மைத்ரி நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் அஜித் குமார் நடித்த ’குட் பேட் அக்லி’ மற்றும் ’மொத ராத்திரி’ உள்ளிட்ட திரைப்படங்கள் தயாரித்து தமிழ் திரையுலகிலும் முத்திரை பதித்துள்ளது. தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து RX திரைப்படத்தை தயாரிக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ்.


முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், புதிய திறமையாளர்களுக்கும், புதுமையான கதைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். படைப்புச் சுதந்திரம், தயாரிப்பு அனுபவம், நிதி வலிமை மற்றும் விரிவான சந்தை வாய்ப்புகள் ஆகியவை ஒன்றிணைவதன் மூலம், வழக்கமான வணிகத் திரைப்படங்களின் எல்லைகளைக் கடந்து தனித்துவமான கதைகளை உருவாக்க இதுபோன்ற கூட்டணி உதவும். 


RX திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அவருடன் நடிகர் நாசர் இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளனர். 'Truth Always Demands a Voice!' என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் கதைக்களத்தை வெளிப்படுத்தாமல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் பாம் ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராஜுவின் கதைக்கு ஆஷாமீரா ஐயப்பன் வசனங்கள் எழுதியுள்ளார். ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் சென்னையில் நிறைவடைந்துள்ளது.


தொழில்நுட்பக் குழுவில் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பாளராகவும், எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவாளராகவும், ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பாளராகவும், கே. மனோஜ் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கும் இப்படம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. பிரதீப் பூபதி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.


RX திரைப்படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் விரைவில் வெளியாகும்.

RX – TRUTH ALWAYS DEMANDS A VOICE

*RX TRUTH ALWAYS DEMANDS A VOICE!*




Lokesh Kanagaraj’s G Squad joins hands with Indian cinema powerhouse Mythri Movie Makers for an intriguing new film starring Regina Cassandra, Nassar and Ramesh Thilak


Chennai, November 8, 2026:


In an exciting collaboration that brings together two prominent names in Indian cinema, filmmaker Lokesh Kanagaraj’s G Squad joins hands with leading production house Mythri Movie Makers for RX, an intriguing new film featuring Regina Cassandra, Nassar and Ramesh Thilak in pivotal roles. The first-look poster of the film was unveiled today.


Mythri Movie Makers – A Leading Force in Indian Cinema


Founded by Naveen Yerneni and Y. Ravi Shankar, Mythri Movie Makers has emerged as one of India’s leading production houses, making a significant contribution to the growth and reach of Telugu cinema. With successful films such as Srimanthudu, Rangasthalam, Uppena and the blockbuster Pushpa franchise, the banner has consistently backed ambitious filmmaking and compelling storytelling.


Expanding its footprint across industries, Mythri has also made a significant mark in Tamil cinema with films such as Ajith Kumar’s Good Bad Ugly and Modha Raathiri. Its growing presence across languages reflects its vision of building a truly pan-Indian production footprint.


The association with Lokesh Kanagaraj’s G Squad for RX further reinforces Mythri’s commitment to exploring new creative partnerships and supporting distinctive storytelling across industries.


A New Creative Partnership


The collaboration also reflects an encouraging trend in contemporary Indian cinema, where established and popular directors are increasingly extending their creative vision into film production. By partnering with established production companies, these filmmaker-producers are creating opportunities for fresh talent, original ideas and content-oriented storytelling.


This emerging model brings together creative freedom, production expertise, financial strength and wider market reach, encouraging distinctive narratives beyond conventional commercial templates.


Introducing RX


The first-look poster of RX presents a striking visual composition, with Regina Cassandra in a compelling central portrayal, alongside Nassar in an intriguing appearance. Carrying the evocative tagline, “Truth Always Demands a Voice!”, the poster establishes an atmosphere of mystery and anticipation without revealing the film’s central narrative.


Directed by Vishal Venkat, who earned recognition for his distinctive storytelling through films such as Sila Nerangalil Sila Manidhargal and Bomb, RX is based on a story by Hariharan Raju, with dialogues penned by Ashameera Aiyappan.


The film also features Ramesh Thilak and Sreeja Ravi in important roles.


The technical team comprises Hesham Abdul Wahab for music, S.K. Selvakumar for cinematography, G.K. Prasanna for editing and K. Manoj Kumar for art direction.


RX is produced by Naveen Yerneni and Y. Ravi Shankar under the prestigious Mythri Movie Makers banner, in association with Lokesh Kanagaraj’s G Squad. Pradeep Boopathi is the co-producer.


The entire shoot has been completed in Chennai, marking the successful completion of principal photography.


With Mythri Movie Makers’ proven production experience, Lokesh Kanagaraj’s creative initiative G Squad and a talented team led by Vishal Venkat, RX brings together an interesting combination of creative vision and production strength.


As Indian cinema increasingly embraces collaborations that encourage fresh voices and original storytelling, RX is poised to be an interesting addition to this evolving cinematic landscape.


More exciting updates about RX will follow soon.

இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!*

 *இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!*



*நடிகர் மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய் - (Family Boy)’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!*


தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் திறமையான நடிகர் மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய் - Family Boy’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன.


இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் - (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP - Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. 


எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சரியா.. சதியா.. நீ என் சகி.. மதியா.. விதியா.. நீ கண்மணி.. இறையா.. இரையா.. இதயம் நீயா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடலைப் இப்படத்தின் இயக்குநர் மித்துன் மாணிக்கம் எழுத, பின்னணிப் பாடகர் ஆதித்யா RK, பின்னணிப் பாடகிகள் மால்வி சுந்தரேசன் மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். காதல் பாடலாகவும் மெலோடியாகவும் உருவாகியிருக்கும் இந்தப் பாடல், இசை ரசிகர்களைக் கடந்து இளைய தலைமுறையினரையும் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.


மேலும், இந்தப் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவின் தொடக்கத்தில் ‘அணுவும் அண்டமும்... அவளும் யானும்... அனைத்தும் காதலே... அவள் என் தீராகணமே...’ என்ற கவிதையுடன் தொடங்குவது, இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியரும் இயக்குநருமான மித்துன் மாணிக்கம், நடிகர் சூர்யாவால் கண்டறியப்பட்ட திரைப் பொக்கிஷம் என்பதை உறுதிப்படுத்துவதுடன், பாடலை முழுமையாகக் கேட்கத் தூண்டுகோலாகவும் திகழ்கிறது என்பது கவனிக்கத்தக்கது.


https://www.youtube.com/watch?v=5dCNDd_hTAo

இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் சிவாஜியின் திருவிளையாடல்

 இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் சிவாஜியின் திருவிளையாடல்





அருட்செல்வர் ஏபி நாகராஜன் இயக்கத்திலும் திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் இசையிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிலும் 1965 ஆம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்தது


சிவாஜி கணேசன், முத்துராமன், டி எஸ் பாலையா, நாகேஷ், ஏபி நாகராஜன், சாவித்திரி, தேவிகா ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த தருமியாக நடித்த நாகேசுக்கும், சிவனாக நடித்த சிவாஜிக்கும் இடையேயான  அந்த உரையாடல் காட்சி இன்று வரை மக்கள் மனதிலே நிற்கின்ற ஒன்று.


61 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வர இருக்கும் திருவிளையாடல் படத்தினுடைய டிரைவர் வெளியீட்டு விழா நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த தினமான அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற புலிராம்போது அந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்னுடைய  பேரனும் சிவாஜி ராம்குமாரின் மகனுமான தர்ஷன் , சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகத்தினுடைய மகனான கிரி சண்முகம் உட்பட அவரது குடும்பத்தினரும், நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், இளவரசு, இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், கதாசிரியர் மற்றும் இயக்குனர் பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


லண்டனிலும், ஜெர்மனியிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பாக ஜி லதா வெளியிடுகிறார்


இம்மாதம் மாதம் 27ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது. சிவாஜி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் வெளியிட்டை ஒருங்கிணைக்கின்ற பணியை சிவாஜியின் தீவிர ரசிகரான பி வி முரளி செய்து வருகிறார்.

தொடர்ந்து மூன்று படங்களில் டாக்டர் வேடத்தில் நடிக்கும் சித்ரா லட்சுமணன் !

 தொடர்ந்து மூன்று படங்களில் டாக்டர் வேடத்தில் நடிக்கும் சித்ரா லட்சுமணன் !



தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வரும் சித்ரா லட்சுமணன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார், 


தற்போது பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார்.


ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சபாநாயகராக நடித்த சித்ரா லட்சுமணன், விஷால் இயக்கத்தில் உருவான ‘மகுடம்’ திரைப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார்.


இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அப்பா குட்டி’ திரைப்படத்திலும், கே.பி.ஒய். பாலா கதாநாயகனாக நடிக்கும் ‘ரி மேட்ச்’ திரைப்படத்திலும் டாக்டர் வேடத்தில் இப்போது நடித்து வருகிறார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.


இவை தவிர, இயக்குநர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘வாண வேடிக்கை’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சித்ரா லட்சுமணன் நடித்துள்ளார்.


இதற்கிடையே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரபுவும் நடிகை சுகன்யாவும்  இணைந்து நடிக்கும் ‘மேரி கோல்ட்’ திரைப்படத்திலும் சித்ரா லட்சுமணன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். பிரியன் ராஜேந்திரன் இயக்கும் இப்படத்தில் அவர் ஊர்த் தலைவராக நடிக்கிறார்.


இந்தப் படத்தில் வடிவுக்கரசி, சிங்கம்புலி, பாரதி கண்ணன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ரக்சன் மற்றும் நம்ரதா ஆகியோர் காதல் ஜோடியாக நடிக்கின்றனர்.


‘மேரி கோல்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் 15 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் பிரபு, சுகன்யா, வடிவுக்கரசி, சிங்கம்புலி, பாரதி கண்ணன், விவேக் பிரசன்னா, ரக்சன், நம்ரதா உள்ளிட்ட நடிகர்களுடன் சித்ரா லட்சுமணனும் பங்கேற்று நடித்துள்ளார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்துள்ள சித்ரா லட்சுமணன், ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.