Featured post

மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா

 *மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா* நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, ...

Monday, 29 May 2023

மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா

 *மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா*


நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வருகிறார். .





யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே "SN Musicals" மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  


தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மே-30ஆம் தேதி ரெஜினா படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது.


இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் கலந்து கொள்கிறார். மேலும் கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் திரு. எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் சிறப்பு பிரபல விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.


சித் ஸ்ரீராம், சின்மயி, வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திர பாடகர்களுடன் நடிகை ரம்யா நம்பீசனும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். 


பாடல்களை தமிழில் யுகபாரதி, விவேக், வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R , தெலுங்கில் ராகெண்டு ( rakendu ), இந்தியில் ராஷ்மி விராக் ( Rashmi Virag ), மலையளத்தில் ஹரி நாராயண் ( Hari Narayan ) ஆகியோர் எழுதியுள்ளனர்.


இந்தப்படத்திற்கு பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் மேற்கொள்கிறார்.


ரெஜினா படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

Actress Sunaina's Regina Teaser to have a grand launch in Coimbatore on

 Actress Sunaina's Regina Teaser to have a grand launch in Coimbatore on May 30

 

Actress Sunaina plays the protagonist in the edge-of-the-seat crime thriller "Regina".  Domin D' Silva, a well-known Malayalam filmmaker who made movies like Suvatrile Pranayam and Star, is making his Tamil film directorial debut.  

 




Satish Nair is producing this film for Yellow Bear Productions LLP and composing the music, which has already witnessed good reception for the songs. It is noteworthy that the label he runs, SN Musicals, has created some beautiful independent songs.

 

The shooting of Regina has already been completed, and the teaser launch will be held as a grand event at Prozone Mall in Coimbatore on May 30.

 

The occasion will witness Thiru. V. Balakrishnan IPS, Commissioner of Police, Coimbatore District as Chief Guest. Thiru. M. Krishnan, Chairman, Sri Krishna Sweets, and Thiru. S. Balasubramanian, Managing Director, Sri Baba Theaters Pvt Ltd will be the guest of honour. Dr. Jaya Mahesh, Fashion Icon, Sun TV Fitness Guru, and Motivational Speaker will be the special celebrity guest.

 

The album comprises beautiful songs crooned by Sid Sriram, Chinmayi, Vaikom Vijayalakshmi, and actress Ramya Nambeesan.

 

Yugabarathy,  Vel Murugan, Vijayan Vincent, and Ijaz R have penned the Tamil lyrics. Rakendu has written lyrics in Telugu, Rashmi Virag in Hindi, and Hari Narayanan in Malayalam.

 

Pavi K Pawan is handling the cinematography and Kamar Edakkara is the production designer for this film. Toby John is overseeing the editing works and Aegan is the costume designer.

 

Times Music has acquired the music rights of ‘Regina’, which will be released in Tamil, Telugu, Malayalam, and Hindi.


Johnson PRO

புதிய நாடாளுமன்ற கட்டடத்திறப்பு விழாவின்போது பிரதமர் தங்கள்

 புதிய நாடாளுமன்ற கட்டடத்திறப்பு விழாவின்போது பிரதமர் தங்கள் குடும்பத்தினருக்கு அளித்த கவுரவம் நெகிழ்ச்சி அடைய செய்ததாக உம்மிடி அனில் குமார் தெரிவித்துள்ளார். 


சுதந்திரத்தின் சின்னமான செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு குடும்பத்தினருக்கு பிரதமரின் இல்லத்தில் மரியாதை அளிக்கப்பட்டது. 







புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை உருவாக்கிய  உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினரை  பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். 


உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான உம்மிடி அனில் குமார் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சுதந்திரத்தின்  சின்னமான "செங்கோல்" ஐ மையமாகக் கொண்ட பெருமைக்குரிய விழாவில் கலந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் திரும்பியுள்ளார்.

இந்த விழா செங்கோலின் வரலாற்று முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் மதிப்பையும் வலியுறுத்துகிறது.



1947 ஆம் ஆண்டு ஆதீனங்களுக்கு செங்கோல் வழங்கிய  இடமான  பழமையான  வளாகமான பாரிமுனையில் உள்ள உம்மிடி துவாரக்நாத் ஜூவல்லர்ஸ்  இருந்ததைக் குறிப்பிட்ட உம்மிடி அனில் குமார்,    செங்கோலின் பாரம்பரியம் தொடங்கிய இடத்தைப் பாதுகாத்து கௌரவிப்பதில்  தானும் தன் குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். 


1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அசல் செங்கோல் குறித்து ஆய்வில்  ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் முக்கிய பங்களிப்பை மனதார பாராட்டினார்.  அவர்களின் விடாமுயற்சி மற்றும் நுணுக்கமான ஆராய்ச்சி இந்த வரலாற்று கலைப்பொருளை அங்கீகரிப்பதிலும் கொண்டாடுவதிலும் உச்சத்தை எட்டியுள்ளது என்றும் இது உம்மிடி குடும்பத்தினருக்கும் தேசத்திற்கும் மகத்தான கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று  உம்மிடி அனில் குமாரின் மகன்  அனிருத்தா உம்மிடி மேற்கோள் காட்டினார்.


நீதி மற்றும் நிர்வாகத்தின் சக்திவாய்ந்த பிரதிநிதித்துவமாக கருதப்படும் செங்கோல் தேசத்திற்கான அடையாள பொக்கிஷம்.


உம்மிடி அனில் குமார்  உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு இந்த சிறப்பு மரியாதையை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.  உம்மிடி அனில் குமாரின் மகன்களான அனிருத்தா உம்மிடி மற்றும்  பிரத்யும்ன உம்மிடி ஆகியோர் தங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்த  வளாகத்திலிருந்து வணிகத்தைத் தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அடைகின்றனர்.


இந்த செய்தியாளர் சந்திப்பில் அணில்குமார் உம்மிடியின் மனைவி உம்மிடி அபர்ணா லக்ஷ்மி, மகன்கள் அனிருத்தா உம்மிடி மற்றும்  பிரத்யும்ன உம்மிடி ஆகியோர் உடனிருந்தனர்

Vummidi Bangaru Chetty Family Honored at the Prime Minister's Residence, Celebrating the symbol of

 Vummidi Bangaru Chetty Family Honored at the Prime Minister's Residence, Celebrating the Symbol of Independence  - The Sengol


The Vummidi Bangaru Chetty family, makers of the Sengol that is now placed behind the Speaker’s chair in the Lok Sabha at the new Parliament building, New Delhi have been felicitated by the Hon’ble Prime Minister Shri. Narendra Modi celebrating India’s 75th year of independence.  







Mr. Vummidi Anil Kumar, a prominent member of the esteemed Vummidi Bangaru Chetty family, returned from a momentous ceremony held at the Hon’ble Prime Minister's residence on May 27th, 2023, filled with extreme joy and honor. The event centered around the remarkable symbol of Independence “The Sengol”. Further, the ceremony has not only recognized the historical importance of the Sengol but also emphasized its relevance and enduring value in shaping India's future.


Mr. Vummidi Anil Kumar takes pride in mentioning that this shop served as the very location for delivering the Sengol to the Adheenams in 1947 and is the oldest premises (Vummidi Dwarknath Jewelers fondly known as the “Corner shop” in Parrys, Chennai) of the Vummidi family having established in the 1920s. This noteworthy occasion amplifies the delight felt by Mr. Vummidi Anil Kumar and family as they have played a vital role in preserving and honoring the place where the legacy of the Sengol began.


Expressing gratitude, Mr. Vummidi Anil Kumar extends heartfelt appreciation to the esteemed elders of the Vummidi Bangaru Chetty family who have played an instrumental role in driving progress and upholding the family's values through the years. Their unwavering dedication and commitment in conceptualizing and creating the Sengol in 1947 is greatly respected.


Furthermore, Mr. Vummidi Anil Kumar acknowledges the pivotal contributions of the family members involved in the re-discovery of the Sengol. Their diligent efforts and meticulous research have culminated in the recognition and celebration of this historic artifact. 


The remarkable re-discovery of the Sengol holds immense cultural and historical significance for the Vummidi family and the nation quoted Mr. Aniruddha Vummidi son of Mr. Vummidi Anil Kumar.


The Sengol holds significant historical value as it was presented to India's first Prime Minister, Shri. Jawaharlal Nehru, on August 14, 1947, marking the consequential transfer of power from the British Government to India. Considered a powerful representation of justice and governance, the Sengol has become an emblematic treasure for the nation.


Mr. Vummidi Anil Kumar expresses his wholehearted thankfulness to the Hon’ble Prime Minister Shri. Narendra Modi for bestowing this exceptional honor upon him and the Vummidi Bangaru Chetty family. 


Mr. Vummidi Anil Kumar and Family (Mrs. Vummidi Aparna Lakshmi - Wife of Mr. Vummidi Anil Kumar, Mr. Aniruddha Vummidi and Mr. Pradyumna Vummidi - Sons of Mr. Vummidi Anil Kumar) take great pleasure and glory in continuing the business from this premises carrying forward their legacy.

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி  என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M. இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது. எல்.ஜி.எம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது,




இந்த செகண்ட் லுக் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. செகண்ட் லுக் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் ஒரு பேருந்தின் நடுவில் அமர்ந்திருக்க பிரதான பாத்திரங்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

 இப்படம் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்பதாலேயே இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு மற்றும் மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

அண்மையில் தான் எல்.ஜி.எம். படக்குழு படப்பிடிப்பை முடித்து அதற்கான கொண்டாட்டத்தையும் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது,

L.G.M என்பது லெட்ஸ் கெட் மேரீட் என்பதின் சுருக்கம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல சினிமா பார்த்ததற்கான அனுபவத்தைத் தரும். ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தையும், அதன் ஊடே உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், வயிறு குலுங்கவைக்கும் காமெடியையும் ஒருசேரக் காணலாம் என தயாரிப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

இந்தப் படத்தை விகாஸ் ஹசிஜா தயாரிக்க பிரியான்ஷு சோப்ரா இதன் கிரியேடிவ் தயாரிப்பாளராக உள்ளார். தோனி என்டெர்டெய்ன்மென் ட் இந்தப் படத்தை வழங்குகிறது.

முதல் படைப்பு என்றாலும் சரியான திட்டமிட்டலுடன் நேர்த்தியாக படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு குறித்து காலத்தில் படம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பதை படத் தயாரிப்புக் குழு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

Second Look of Dhoni Entertainment’s L.G.M. out!

Second Look of Dhoni Entertainment’s L.G.M. out!

The makers of 'L.G.M', which is being produced by Sakshi Dhoni's Dhoni Entertainment, has released the second look of their family entertainer, much to the delight of fans. 




Needless to say, the second look has thrilled fans and they are eagerly awaiting the films release. The second look poster has Harish Kalyan seated in the centre of the last seat of a bus and all other significant characters in the film seated around and in front of him.


The film has triggered huge interest as it happens to be the maiden production of cricketing legend M S Dhoni's  and Sakshi Dhoni's Dhoni Entertainment and has been directed by Ramesh Thamilmani.


The film features actors Harish Kalyan, Nadhiya, and Ivana in the lead and has Yogi Babu and Mirchi Vijay playing prominent roles.


Only recently, the unit of LGM had wrapped up shooting for the film with a wrap-up party.


L.G.M, which is an acronym for Let's Get Married, will be a film that will look to offer a breezy cinematic experience to audiences, who can expect an interesting screenplay, lots of emotions and humour from the film.


Vikas Hasija is the producer while Priyanshu Chopra is the creative producer of this film, which is being presented by Dhoni Entertainment. 


The film, which was meticulously planned and efficiently shot, was completed well on time.

Sunday, 28 May 2023

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்


படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சாய்ஸ் இல்லை ; லைசென்ஸ் இயக்குனர் வைத்த நம்பிக்கை


வீட்டுக்கே விரட்டி வந்து செக் கொடுத்தார்கள் ; லைசென்ஸ் டிரைலர் விழாவில் தயாரிப்பளருக்கு பழ.கருப்பையா புகழாரம்


லைசென்ஸ் டிரைலர் வெளியீட்டு விழாவில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்






*எளிமையான பின்னணியில் இருந்து வந்த வலிமையான பெண் ராஜலட்சுமி ; தயாரிப்பாளர் T.சிவா புகழாரம்*


*ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை பிடுங்கியதும் மாணவர்களின் ஒழுக்கம் காணாமல் போய்விட்டது. ; இயக்குனர் பேரரசு வேதனை*



JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார்.


மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். படத்தின் மூன்று பாடல்களையும் ஏ.இரமணிகாந்தன் எழுதியுள்ளார். கலை - சிவா. எடிட்டர் ஆண்டனியின் சிஷ்யையான வெரோனிகா பிரசாத் இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார். 


இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் T.சிவா, இயக்குனர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, 'சண்டியர்' ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்ல தயாரிப்பாளர் ஜீவானந்தத்தின் பள்ளி நண்பர்களாக ஒன்றாக படித்து இன்று பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பொறுப்புக்கள் வகிக்கும் அவரது 40 நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தயாரிப்பாளர் T.சிவா பேசும்போது, “இந்த நிகழ்வை பார்க்கும் போது இசை வெளியீட்டு விழா போல தெரியவில்லை. முன்னாள் நண்பர்கள் ஒன்று சேரும் விழா போல தான் தெரிகிறது. இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறி உள்ள ஜீவானந்தம் இனி தயாரிப்பாளர் என்கிற அடையாளம் பெற்ற ஒரு ‘லைசென்ஸ்’ ஹோல்டர் தான். பெரிய நடிகர்கள் மற்றும் ஓடிடிக்கு பின்னாடி ஒரு ரேஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு படம் எடுக்க இவருக்கு வந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன். இந்த மேடையிலேயே தயாரிப்பாளரிடம் பாராட்டு வாங்கிய இந்த இயக்குனர் தான் புதிதாக சினிமாவிற்கு வரும் இயக்குனர்களுக்கு ரோல் மாடல்.


ராஜலட்சுமியை என் பேரன்பு மிக்க மகள் என்றே சொல்வேன். எளிமையான பின்னணியில் இருந்து வந்த வலிமையான பெண். அத்தனை திறமைகளையும் ஒன்றாக பெற்றவர். இதுவரை தனது பாடல்கள் மூலமாக பார்வையாளர்களின் மனதை வென்றவர், இனி இந்த படம் மூலம் ஒரு நடிகையாக திரையுலக  ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிப்பார்” என்று வாழ்த்தினார்.


நடிகை அபி நட்சத்திரா பேசும்போது, “நான் நடித்த அயலி வெப் சீரிஸ்க்கு முன்பாகவே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டேன். ராஜலட்சுமி அக்காவின் மிகப்பெரிய ரசிகை நான். அயலிக்கு கொடுத்த ஆதரவு போல இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.


படத்தொகுப்பாளர் வெரோனிகா பிரசாத் பேசும்போது, “எடிட்டர் ஆண்டனியை குருவாக ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் படத்தொகுப்பை கற்றுக்கொண்டேன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் எனக்கான ஒரு லைசென்ஸ் ஆக இருக்கும்” என்றார்.


இயக்குனரும் சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர் பேசும்போது, “இருப்பதிலேயே சின்ன படம் பண்ணுவது தான் கஷ்டமான விஷயம். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல், நல்ல கதை வைத்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு கிடைத்த முதல் பரிசாக தான் இந்த படத்தின் இசை உரிமையை எம் ஆர் டி நிறுவனம் வாங்கியிருக்கின்றனர். இது ஒரு பாசிட்டிவ்வான படம்” என்று கூறினார்.


எடிட்டர் ஆண்டனி பேசும்போது, “இந்த படம் சின்ன படம் என்று சொன்னார்கள். ஆனால் இதை பார்க்கும்போது கொஞ்சம் பெரிய படமாகவே தெரிகிறது. முதன் முதலில் ஒரு பெண், சினிமாவில் படத்தொகுப்பாளராக வருவது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.


துரிதம் பட நாயகன் ஜெகன் பேசும்போது, “தயாரிப்பாளர் ஜீவானந்தம் எனக்கு நல்ல நண்பர். ஆனால் இப்படி ஒரு படம் தயாரிக்கிறேன் என அவர் சொன்ன போது இயக்குனர் கணபதி பாலமுருகன் மீது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இரண்டு படங்களில் நடித்து அனுபவப்பட்டதால் அந்த சந்தேகம் வந்தது. ஆனால் போகப்போக அவரது திறமையும் கதை மீது தயாரிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிந்து கொண்டேன்” என்று கூறினார்.


நாயகி ராஜலட்சுமி பேசும்போது, “இதுவரை ஏறிய எந்த மேடையிலும் நான் பதட்டப்பட்டதில்லை. ஆனால் இது சினிமாவில் எனக்கு முதல் மேடை. நான் முதல் குழந்தை பெற்றபோது பிரசவ வலி எப்படி இருந்ததோ அதேபோன்ற ஒரு அனுபவம் இதில் கிடைத்தது. இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லிவிட்டு அதில் கதாநாயகியாக நான் நடிக்கிறேன் என்றபோது என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் துப்பாக்கி வைத்த ஒரு பெண்ணாக என்னை கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை. இயக்குனர் என்னிடம் கூறும்போது இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர்களுக்கு கூட இன்னொரு சாய்ஸ் வைத்துள்ளேன். ஆனால் இந்த கதாநாயகி பாத்திரத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை என்று கூறியபோது அவர் என் மீது வைத்து நம்பிக்கையை கண்டு வியந்து போனேன்.


பொதுவாக ஆரம்பத்தில் தயாரிப்பாளர்கள் பாசிட்டிவாக இருந்தாலும் போகப்போக அவர்களிடம் மாற்றம் வரும். ஆனால் ஜீவானந்தம் சார் கடைசி வரை மாறவே இல்லை. பைஜூவின் இசையில் நிறைய ஆல்பங்கள் மற்றும் ஒரு சில படங்களில் பாடியுள்ளேன். நல்ல இசையமைப்பாளர் இந்த படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார். அயலி புகழ் அபி நட்சத்திரா நடிக்கும் இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை. 32 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நாந கதாநாயகியாக நடிக்கிறேன் என்பதே ஆச்சரியம் தான்.


ஒருமுறை ராதாரவி சார் என்னிடம் பேசும்போது இனி அடுத்து எந்த நிகழ்வுக்கு வந்தாலும் உன் கணவரை அழைத்து வரக்கூடாது என்று விளையாட்டாக கூறுவார். இன்று இந்த நிகழ்வுக்கு என் கணவர் வரவில்லை. ஆனால் அதற்கு வேறு ஒன்றும் காரணம் இல்லை.. எங்களை போன்ற கலைஞர்களுக்கு இந்த மே மாதம் முழுவதும் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இன்று இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவேண்டிய இருந்ததால் எனது கணவரை எனக்கு பதிலாக அந்த நிகழ்வுக்கு அனுப்பி விட்டேன்” என்று கூறினார்.


மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ.கருப்பையா பேசும்போது, “ஒரு பெண்ணின் உரிமைக்காக, பெண்ணின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட படம் இது. ராஜலட்சுமி தான் கதையின் தலைவி என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. இளம் வயது நடிகையை கதாநாயகியாக போட்டிருந்தால் இந்த படத்தில் அந்த பெண் போராடும்போது தனக்காக போராடுவது போல இருக்கும். ஆனால் ராஜலட்சுமி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தான் ஒரு பெண் சமூகத்திற்காக போராடுவதை நம்பும்படியாக இருக்கும்.


இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே, படத்தின் மேனேஜரும் பின் தொடர்ந்து வந்து விட்டார். ஏதாவது காட்சி எடுக்கப்படாமல் விடுபட்டு போய்விட்டதா என்று கேட்டபோது, அதெல்லாம் இல்லை.. உங்களுக்கு செக் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். இப்படி வீட்டுக்கே விரட்டி வந்து சம்பளத்தை கொடுத்தது இந்த தயாரிப்பு நிறுவனமாக தான் இருக்கும்” என்றார்.


இயக்குனர் கணபதி பாலமுருகன் பேசும்போது, “எனது முதல் பட தயாரிப்பாளர் தெய்வம் என்றால் ஏழு வருடங்கள் கழித்து எனக்கு இரண்டாவது பட வாய்ப்பு தந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜீவானந்தத்தை தெய்வத்தின் தெய்வம் என்று சொல்லலாம். இங்கே அவரது நட்புக்கு மரியாதை கொடுத்து அவரது நண்பர்கள் 40 பேர் வந்துள்ளனர். என்னுடைய உதவி இயக்குனர்களிடம் இங்கே வந்திருப்பது 40 தயாரிப்பாளர்கள்.. எதிர்காலத்தில் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று கூறினேன்.


படத்தின் டிரைலரிலேயே முழு கதையையும் சொல்லிவிட்டேன். கிளைமாக்ஸையும் கூட டிரைலரிலேயே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்தேன். காரணம் அந்த அளவிற்கு கதை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் திரைக்கதை.


இந்த படத்தில் பல நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ராட்சசர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் பாடல்களை எழுதியுள்ள ரமணிகாந்தன் வரும் காலத்தில் பாடலாசிரியர் யுகபாரதிக்கு டப் கொடுப்பார். சரஸ்வதி மற்றும் லட்சுமி இரண்டும் இணைந்த கடாட்சம் கொண்டவர் தான் ராஜலட்சுமி. ஒரு பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக அவர் இருந்தார். மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்த தன்யா அனன்யா இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்று கூறினார்.


தயாரிப்பாளர் N.ஜீவானந்தம் பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இயக்குனர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை. இன்று தான் இவ்வளவு பேசியுள்ளார். ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக உலகம் முழுக்க சென்று பேசியுள்ளேன். ஆனால் இன்று நான் தயாரித்துள்ள படத்தின் விழா மேடையில் நின்று பேசுவது புதிதாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பழ.கருப்பையா நடித்துள்ளார் படப்பிடிப்பு சமயத்தில் என்னை தான் புதிதாக துவங்கிய கட்சியில் சேர்வதற்காக கூட அழைத்தார். இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனது தந்தை நாடக நடிகராக இருந்தவர்.. மூன்று படங்களில் நடித்துள்ளார்.. அவரை தொடர்ந்து நானும் சினிமாவிலேயே பயணிக்க துவங்கியுள்ளேன்.


இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஜலட்சுமி கூச்சம் இல்லாத நடிகை அவர் மிகப்பெரிய கூட்டங்களில் கலந்துகொண்டு அங்கு இருப்பவர்களை கையாளும் விதத்தைப் பார்த்து அவர் இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என நான் ஒப்புக் கொண்டேன். அபி நட்சத்திரா நடித்திருக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது நான் அழுதேன். நானும் அடிப்படையில் ஒரு கவிஞன் என்றாலும் இந்த படத்தில் பாடல் எதுவும் எழுதாமல் மூன்று பாடல்களையும் ரமணி காந்தனையே எழுத சொல்லிவிட்டேன். அவருக்கு சீக்கிரம் ரசிகர் கிளப்பும் ஆரம்பிக்க இருக்கிறேன்.


இந்த நிகழ்வில் எனது இரண்டாவது படம் குறித்து அறிவிப்பையும் வெளியிடுகிறேன். மன்னார்குடி பின்னணியில் கால்பந்தாட்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு கோல் என்று டைட்டில் வைத்துள்ளோம். ஒரு கிராமம் எப்படி கால்பந்து விளையாட்டால் பிரிகிறது, பின் எப்படி கால்பந்து விளையாட்டால் ஒன்று சேர்கிறது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படத்தை இயக்கிய குமரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்” என்று கூறி தனது அடுத்த படத்தின் இயக்குனர் குமரனையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இயக்குனர் பேரரசு பேசும்போது, “இந்த படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகனை பார்க்கும்போது திருமணம் ஆகி பத்து வருடம் இருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்டவரை அவரது மாமனாரே மேடை ஏறி பாராட்டுகிறார் என்கிறபோது உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்.. அதேபோன்று இவரது படமும் வெற்றி பெறும். பொழுதுபோக்கு படம் எடுப்பவர்கள் பொறுப்பாக படம் எடுப்பவர்கள் என இரண்டு பிரிவு உண்டு. அப்படி சமூகத்திற்காக படம் எடுப்பது தான் ஒரு பொறுப்பான டைரக்டரில் வேலை. அதைத்தான் இந்த படத்தின் இயக்குனர் செய்துள்ளார்.


சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ராஜலட்சுமியை பாடகியாக சந்தித்தேன். இன்று ஒரு நடிகையாக சந்திக்கிறேன். அடுத்த தடவை அவரை சந்திக்கும்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகையாக சந்திக்க விரும்புகிறேன். இதற்கு முன் ஆசிரியராக பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் திரையில் பார்க்கும்போது நடிகைகளாக தான் தெரிந்தார்கள். இந்த படத்தில் ராஜலட்சுமி அந்த கதாபாத்திரமாகவே மாறி, நாம் பள்ளியில் படித்தபோது நமக்கு பாடம் நடத்திய ஆசிரியை போல எதார்த்தமாக தெரிகிறார். இந்த கதைக்கே அவர்தான் சரியாக சாய்ஸ்.


ஒரு டீச்சர் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று எதற்காக கேட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்றைக்கு சூழல் அப்படித்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஒழுங்கீனமாக, சுயமரியாதை இல்லாமல், அராஜகமாக நடந்து கொள்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருந்தது. மாணவர்களும் ஒழுக்கமாக இருந்தனர். அந்த பிரம்பை பிடுங்கி கீழே போட்டது யார் ? அந்த பிரம்பு கீழே விழுந்ததும் மாணவர்களிடம் இருந்து ஒழுக்கமும் போய்விட்டது.


அதனால் ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பை கொடுக்க வேண்டும்.பள்ளிப் பருவத்தில் வராத ஒழுக்கம் கடைசி வரை வராது. மாணவர்கள் பிரச்சனையில் எப்போதுமே ஆசிரியர் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். இப்போது ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கண்டிக்கும் ஆசிரியர்களை பற்றி பெற்றோர்களிடம் புகார் கூறி அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் மாணவர்களுக்கு டிசியை கொடுத்து அனுப்ப வேண்டும்.


ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை எப்படி பிடுங்கிப் போட்டார்களோ, அதேபோல மக்களிடம் பக்தியையும் பிடுங்கி போட முயற்சிக்கிறார்கள். பக்தி இருக்கும் வரை தான் தார்மீக பயம் இருக்கும். அதை விடுங்க அனுமதிக்க கூடாது. இது சமூக சிந்தனை கொண்ட நல்ல படம்.  மாணவர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்த படத்திற்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கையை வைத்து பேசினார் இயக்குனர் பேரரசு.


இந்த நிகழ்வில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலரை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட, சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்திருந்த தயாரிப்பாளர் ஜீவானந்தத்தின் பால்ய கால நண்பர்கள் அதை பெற்றுக்கொண்டனர்..

மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு

 மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு தான் வருகிறது - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்


இந்த விழாவிற்கு வருகைப் புரிந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு நன்றி எழுத்தாளர் மீனா சாப்ரியா



















பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். 


ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.  


யார் இந்த மீனா சாப்ரியா?


17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் மீனா சாப்ரியா. 


இவரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் பேசியதாவது:


எழுத்தாளர் மீனா சாப்ரியா பேசும்போது, 


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. இது போன்ற ஒரு சாதாரண நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி. 


குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின் இங்கு வந்துள்ள தயாரிப்பாளர் யுவராஜுக்கு நன்றி. 


அண்ணாதுரை பற்றி சொல்லவேண்டுமென்றால் வார்த்தைகள் இல்லை. ஆனந்த் மஹிந்திரா சொன்னது போல், “இந்தியாவின் மேலாண்மை பேராசிரியர்” அண்ணாதுரை. 


நீண்டநாளாக எனக்கென ஒரு மேடை கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, நான் நடிக்கவில்லை என்றாலும், எனக்கான ஒரு மேடையை நான் அமைத்துக் கொண்டது மிகவும் பெருமையாக உள்ளது. 


நான் தவறான பாதையில் செல்கிறேன் என்பதை புரிந்துகொள்ள எனக்கு 20 வருடங்கள் ஆனது. “UNSTOPPABLE ANGELS” மூலமாக நான் பல பெண்களை உயரத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன். 


நான் 19 வருடமாக சினிமாத் துறையில் இருக்கிறேன். நான் கலந்து கொண்ட முதல் படப் பூஜை “MIC SET” ஸ்ரீராமின் படத்தின் பூஜை தான் என்றார்.


ஆட்டோ அண்ணாதுரை பேசும்போது,


எனக்கு மேடை புதிதல்ல. ஆனால், இந்த மேடை புதிதாக இருக்கிறது. எனக்கு பத்திரிகையாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை இருக்கிறது.


மீனா சாப்ரியா அவர்களை விட அன்ஸ்டாப்பபில் லேடி என்று பார்த்தால் அவர்களின் தாயார் தான். அவரின் ஆசீர்வாதம் எப்போதும் தேவை. 


வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், என்றார். 


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,


முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன். 


ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. 


17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார். 


சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE”ஆக இருப்பது தான் காரணம். 


அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன். 


நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன். 


நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதிய என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவரானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவரானவர்கள் உள்ளனர்.


மைக் செட் ஸ்ரீராம் பேசும்போது,


மீனா மேடத்தை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். “UNSTOPPABLE” என்ற வார்த்தைக்கு மீனா சாப்ரியா மேடம் தான் பொருத்தமானவர்.


இவரை போன்ற ஒருவருடன் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. 


ஒருநாள் மீனா மேடத்தை சந்திக்க வேண்டும் என்று அவரை தொடர்பு கொண்ட போது, நான் மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறேன் கண்ணா, வந்தபின் சந்திப்போம் என்றார். இந்த வயதிலும் ஒருவர் படிக்க ஆசைப்படுகிறார் என்றால் அவர் இன்னும் எந்த உயரத்திற்கு செல்வார் என்று நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. 


அவர் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.  


நடிகை/தயாரிப்பாளர் சினேகா நாயர் பேசும்போது, 


இங்கு பேசுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மீனாவுடன் பயணித்திருக்கிறேன். எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அது அனைத்தையும் நாங்கள் சமாளித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளோம்.


ஆண்களுடன் வேலை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அதை பெண்கள் யாரும் தட்டிக்கழிக்க முடியாது. 


இந்த விழாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கலாம் என்று மீனா சொன்னபோது, அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க முடியாது என்று கூறினேன் என்றார்.


தயாரிப்பாளர் யுவராஜ் பேசும்போது,


நான் குட் நைட் படம் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை. முதல் பார்வை வெளியான பின்பு மீனா சாப்ரியா மேடம் கொடுத்த ஆதரவு மறக்க முடியாத ஒன்று. அதற்கு நன்றி, என்றார்.


அதன் பின், மீனா சாப்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மைக் செட் ஸ்ரீராம், யுவராஜ், சினேகா நாயர் அனைவரும் இணைந்து *“UNSTOPPABLE”* புத்தகத்தை வெளியிட்டனர்.

திருநெல்வேலியில் நடைபெற்ற 'அறமுடைத்த கொம்பு' இசை வெளியீடு

திருநெல்வேலியில் நடைபெற்ற 'அறமுடைத்த கொம்பு' இசை வெளியீடு.!


திருநெல்வேலி ஸ்ரீ செந்தில் வேல் திரையரங்கில் 'நெல்லை கீதம்' ஜாக்சன்ராஜ் அவர்கள் இயக்கிய 'அறமுடைத்த கொம்பு' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.




படத்தின் தயாரிப்பாளர் தங்கதுரை அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அறமுடைத்த கொம்பு படத்தின் நான்கு பாடல்கள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் ஆவுடையப்பன், கபாலி விஸ்வந்த் அவர்கள் இசை ஆல்பத்தை வெளியிட  பிரபல பின்னணி  பாடகர் வேல்முருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


விழாவில் அறமுடைத்த கொம்பு திரைப்படத்தின் இயக்குனர் ஜாக்சன் ராஜ் அவர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி நன்றி கூறினார்.


நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அல்-ருபியான், எடிட்டர் மணிக்குமரன்,  கதாசிரியர் வினோத்சிங், கதாநாயகன் ஆனந்த், கதாநாயகி ஜெசி மற்றும் கார்த்திக், கலைவாணன், ராஜா  மற்றும் படக்குழுவினர்கள் அனைவரும்ந பங்கு பெற்றனர்.