*“திருக்குறள்” திரைப்படத்தில் “ தளபதி பரிதி” வேடத்தில் பாராட்டுக்களைக் குவிக்கும் நடிகர் குணா பாபு !*
*குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்க்கும் நடிகர் குணா பாபு !*
தமிழ்த் திரையுலகில் 2017 ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் குணா பாபு, சமீபத்தில் வெளியான “திருக்குறள்” திரைப்படத்தில் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீரமும் காதலும் நிறைந்த “தளபதி பரிதி” கதாபாத்திரத்தில் அவரது தனித்துவமான நடிப்பு, பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
இளம் நடிகரான குணா பாபு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், ஒரு தையல்காரரின் மகனாக வளர்ந்தார். ஒரு தனியார் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றிய குணா பாபு, சினிமா மீதான ஆர்வத்தால், தனது பணியைத் துறந்து, தியேட்டர் மற்றும் சினிமா நடிப்புப் பயிற்சியில் சான்றிதழ் பெற்றபின், திரையுலகில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் திரையுலகில் நிலைத்து நிற்கும் வகையில், 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனது திறமையைப் நிரூபித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான H.வினோத், P.S. மித்ரன், மகிழ்த்திருமேனி, கிருத்திகா, மதுமிதா, பிருந்தா, C.S. அமுதன், லோகேஷ் கனகராஜ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜீத்து ஜோசப் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து, தீரன், காளி, இரும்புத்திரை, தமிழ் படம் 2, தடம், ஹீரோ, கே.டி (அ) கருப்பு துரை, தக்ஸ், லால் சலாம், விக்ரம், வேட்டையன், பாயும் ஒளி நீ எனக்கு, மற்றும் திருக்குறள் உட்பட பல ப்ளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றியுள்ளார்.
சின்ன சின்ன பாத்திரங்கள் முதல் குணச்சித்திர பாத்திரங்கள் வரை, தான் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களில் தனது முழு அர்ப்பணிப்பைத் தந்து, தனித்துவமான நடிப்புத் திறமையால், திரை ரசிகர்களிடமும், பார்வையாளர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறார். அவரது திறமையின் பலனாக திருக்குறள் படத்தில் "தளபதி பரிதி" பாத்திரம் அமைந்துள்ளது. திருக்குறள் படத்தில் அவரது தோற்றமும், நடிப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பல புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. சவாலான கதாபாத்திரங்கலை ஏற்று நடப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
நடிகர் குணா பாபு அடுத்ததாக முன்னணி இயக்குநர்கள் இயக்க, முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும், ரிவால்வர் ரீட்டா, மாரீசன், கேங், தடை அடி உடை, மிராஜ் (மலையாளம்) உடப்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
எளிய பின்னணியிலிருந்து வந்து, திரையுலக சவால்களை மீறி, தனது திறமை மற்றும் முயற்சியால் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள குணா பாபு, தனது எதிர்காலப் படங்கள் மூலம் இன்னும் பல உயரங்களைத் தொட தயாராக இருக்கிறார்.
No comments:
Post a Comment