Featured post

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்

 இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்,  பேபி & பேபி !! விரைவில் திரையில் அழகான ஃபேமிலி எண்டர்டெயினர் பேபி &am...

Thursday 13 June 2019

சுட்டுப்பிடிக்க உத்தரவு நடிகர் சுசீந்திரன்





ஒரு தசாப்தத்திற்கும் மேலாக திரைப்பட இயக்குனராக இருப்பதால், சுசீந்திரன் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது திறமைகளை நிரூபித்து வந்தார், அது அவரது இயக்குனர் கிராஃபை வெற்றிகரமாக உயர்த்தியது. எனினும், நடிகராக அவரது திடீர் அவதாரம், ஒரே இரவில் அவரை ஜெட் வேகத்தில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஆம், பேண்டேஜ் அணிந்த ஒரு மனிதன் கையில் துப்பாக்கியை வைத்திருக்கும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தான் உடனடியாக அனைவரையும் ஈர்க்கும் ஆதாரமாக மாறியது. டிரெய்லரில் இந்த விஷயங்கள் இன்னும் தீவிரமடைந்தன, அதில் அவர் முழு ஆக்‌ஷனில் இறங்கி விட்டார்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் பணிபுரிந்த தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது, சுசீந்திரன் சில விஷயங்களை நகைச்சுவையாகக் கூறுகிறார். அவர் கூறும்போது, "ஆம், இந்த படத்தில் ஆக்‌ஷன் மிக அதிகமாக இருக்கும். இந்த படத்தில் நடிகர்களின் ஊதியத்தை விட தயாரிப்பாளர் துப்பாக்கிக்கு வாங்கிய புல்லட்களுக்கு செலவிட்ட பணம் அதிகமாக இருக்கும். தயாரிப்பாளர் P.K. ராம் மோகன் இந்த ஸ்கிரிப்ட் மீது வைத்த நம்பிக்கையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு இயக்குனராக இருப்பதால், இந்த ஸ்கிரிப்ட்டை எழுத்திலிருந்து செல்லுலாய்டிற்கு மொழி பெயர்ப்பதில் உள்ள சவால்கள் எனக்குத் தெரியும். இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் படைப்பு சுதந்திரத்தில் குறுக்கிடாத இந்த மாதிரி ஒரு தயாரிப்பாளரை பெற்றதற்கு மொத்த குழுவும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

ஒரு இயக்குனராக இருப்பதற்கும், நடிகராக இருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பற்றி சுசீந்திரன் கூறும்போது, "இயக்குனராக இருந்தபோது, நடிப்பு என்பது மிக எளிதான ஒரு வேலை என்று நான் குருட்டுத்தனமான ஒரு யூகத்தை கொண்டிருந்தேன். சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடிக்கும்போது தான் நான் நினைத்தது தவறான கருத்து என்பது நிரூபணமானது. உண்மையில், சண்டைக்கலைஞர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது. பல சூழ்நிலைகளில், அவர்கள் உயிருக்கு ஆபத்தான சண்டைக்காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடிக்கும்போது நான் அதிர்ச்சியில் உறைந்தே போனேன். மிஷ்கின் உண்மையில் ஒரு உள்ளார்ந்த கலைஞர். எந்த விதமான எமோஷன் காட்சியையும் அவர் மிக எளிதாக நடித்தார். விக்ராந்தின் கடின உழைப்பு மற்றும் சிறந்த நடிப்பு அவருக்கு இந்த படத்தை மிகப்பெரிய திருப்புமுனையான படமாக மாற்றும் என்று நான் மிகவும் நம்புகிறேன்" என்றார்.

சுட்டுப்பிடிக்க உத்தரவு முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்த ஒரு படம். பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வர வைக்கும் திரைக்கதையை கொண்டிருக்கும். ஜூன் 14, 2019 அன்று வெளியாகும் இந்த படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ளார். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment