Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Monday, 24 June 2019

ஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு !




இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில்  இயக்கத்தில் உருவாகியுள்ள "கண்டுபிடி" என்கிற ஆல்பம் பாடல் வெளியாகி பெரிதும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.


இதில் நாயகன், நாயகியாக கார்த்திக்முனிஸ் ,சுமா பூஜாரி நடித்துள்ளனர்.

இதன் அறிமுகநாயகன் கார்த்திக் முனிஸ் சிவாகாசியைச் சேர்ந்தவர்.இவர் அடுத்து ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.அந்தத் திரைப்படத்தையும் இசையமைப்பாளர் எம்சி ரிக்கோவே இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பாடலில் நடித்துள்ள நாயகனைப் பற்றி இயக்குநர் எம்சி ரிக்கோ கூறும் போது " கார்த்திக்முனிஸ் நடிப்பில் மிகுந்த ஆர்வமும்,திறமையும் உள்ளவர்

 அவரின் முன்று வருட சினிமா முயற்சியில் முதன்முதலாக அவர் என்னுடைய இயக்கத்தில் நாயகனாக அறிமுகமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

 நான் இயக்கும் திரைப்படத்திலும் அவரே நாயகனாக நடிக்கவுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம் இப்பொழுது படம் ஆரம்பக் கட்ட வேலையில் உள்ளது.

 என் பாடலில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராகுல் , படத்தொகுப்பாளர் எம்.எஸ். கோபி இவர்களையே திரைப்படத்திலும் பணிபுரிய ஒப்பந்தம் செய்துள்ளேன்.படத்தில் முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள் .அவர்கள் யார்யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 எங்கள் டீம் ஒர்க் கிரியேஷன் புரொடக்ஷன் தயாரித்த "கண்டுபிடி" என்ற பாடலை உங்கள் இணையதளத்தில் பார்த்து மகிழுங்கள் எங்களுக்குப் பார்வையாளர்களான உங்களுடைய ஆதரவை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.என்கிறார்  இயக்குநர் எம்சி ரிக்கோ இந்த பாடலைத் திரைப்பட தயாரிப்பாளரும்,ஓவியருமான ஏ.பி.ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

"கண்டுபிடி"மற்றும் "மொரட்டு சிங்கிள்" தமிழ் ஆல்பத்தை ஸ்ரீதர் வெளியிட இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,மரகதநாணயம் போன்ற படங்களில் நடித்தவரும்,கதாநாயகன் படத்தினை இயக்கிய இயக்குநருமான முருகானந்தம்பெற்று கொண்டார்.

இயக்குநர் முருகானந்தம் பாடலைப் பற்றிக் கூறுகையில் "எம்சி ரிக்கோவின் இசையும்,பாடலும் இயக்கமும், கேட்பதற்கும்,பார்ப்பதற்கும் மிக அருமை..

 இதில் நடித்த நாயகன், நாயகியின் நடிப்பு பாராட்டத்தக்கது
.இருவரின் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தது. இருவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.
கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் கார்த்திக்முனிஸ் நடிப்பிற்க்கு புதியவர்போல் தெரியவில்லை பாடலில் அவருடைய நடிப்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது..

பாடலில் நடித்த நாயகன் நாயகி இருவரும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்..
பாடலை பாடிய பாடகர் ஜெகதீஷின் குரலும் பாடல் வரிகளும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.என் நண்பன் ரிக்கோ அடுத்ததாக திரைப்படம் இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் அவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

 இந்தக் குழு திரைப்படம் இயக்கியும் வெற்றிபெறும் என்பதற்கு இந்தப்பாடலே சான்று " என்று இயக்குநர் முருகானந்தம்  கூறினார்.


https://youtu.be/yoyXnBxZiNs

No comments:

Post a Comment