Featured post

Mellisai Tamil Movie Review

Mellisai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம   mellisai   படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dhirav. இந்...

Wednesday, 26 June 2019

பிக் பாஸில் சீசன் 3 இல் மிஸ் சவுத் இந்தியா, நடிகை மீரா மிதுன்





பிக்பாஸ் 3 தான் இப்போதைக்கு தமிழ்நாட்டின் ஒரே பரபரப்பு.   நடிகர் கமலஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்க வருகிறார். முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட செட்டில் இம்முறை அதிக கேமராக்களுடன் 17 போட்டியாளர்களுடன் களமிறங்குகிறது பிக்பாஸ். 


இதுவரை 15 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் 16 வது சிறப்பு போட்டியாளராக மாடல், நடிகை, மிஸ் சவுத் இந்தியா புகழ் மீரா மிதுன் களமிறங்க உள்ளார்.


மீராமிதுன் இவர் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட நான்கு அழகி பட்டங்களை வென்றவர். படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் வெகுவாக  ஆர்வம் கொண்டிருந்த இவர்  ஒரு தமிழ்ப்பெண்ணாக கார்பரேட்கள் கொடிகட்டி பறக்கும் மாடலிங் துறையில் தனியாளாக மோதி ஜெயித்தவர். ஐந்து வருடங்களாக மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர். அதைத்தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். 

தமிழ்ப்பெண்ணாக மாடலிங் துறையில் ஜெயித்த இவர் தன்னைப்பொன்றே மாடலிங் ஆசை கொண்ட தமிழ்ப்பெண்கள் எந்தக் கஷ்டங்களும் படக்கூடாது என்றே மிஸ் தமிழ்நாடு திவா அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். 

தற்போது மாடலிங் துறையில் இருந்து முதல் தமிழ்ப்பெண்ணாக பிக் பாஸிக்குள் நுழைந்துள்ளார். மாடல் என்றாலே வெளிநாட்டு, வெளி மாநில பெண் என்ற நிலையை மாற்றி ஒரு தமிழ்ப்பெண் மாடலாக பிக் பாஸுக்குள் நுழைகிறார். இவரது சாதனைகள் கேள்விப்பட்டே பிக் பாஸில் கலந்து கொள்ள பிக்பாஸ் குழு சிறப்பு போட்டியாளராக இவரை அழைத்துள்ளது. 

இன்றைய எபிஸோட் முதல் இவர் பிக்பாஸ்3 ல் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment