Featured post

Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath & Saanve Megghana

 *Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath &  Saanve Megghana* Shanthi Talkies, led by the enterprising pr...

Monday, 17 June 2019

தந்தை கேப்டன் விஜயகாந்தின் வழியில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் மகன் சண்முக பாண்டியன்



.

தந்தை கேப்டன் விஜயகாந்தின் கவர்ந்திழுக்கும் அம்சங்களை கொண்ட அவரது மகன் சண்முக பாண்டியனையும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் அன்பை பொழிந்து வரவேற்கிறார்கள். உயரமான மற்றும் களையான இந்த நாயகன் தனது ஒவ்வொரு படத்திலும் மிகவும் தனித்துவமான மற்றும் இணையற்ற திறன்களை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். இந்த முறை, அவர் தனது தந்தை மிக வெற்றிகரமாக இருக்கும் ஒரு மண்டலத்திற்குள் நுழைந்திருக்கிறார்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் 'ப்ரொடக்ஷன் நம்பர் 1' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம், இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக வீரம், வேதாளம், மற்றும் விவேகம் படங்களில் பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்குனராக அறிமுகமாகிறார். போலீஸ் திரைப்படங்கள் என்றாலே எப்பொழுதும் இருக்கையின் விளிம்பில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லர் படங்களாக தான் அமைந்திருக்கின்றன. ஆனால் பூபாலன் வேறு விதமான ஒரு கதையை சொல்ல இருக்கிறார். அவர் கூறும்போது, “போலீஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம். இது ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் கொண்ட வண்ண மயமான பொழுதுபோக்கு படம். கல்லூரி படிப்பை முடித்து, காவல் துறையில் பயிற்சி பெற்று, மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் ஒரு இளைஞனின் கதை" என்றார்.

இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக ரோனிகா நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஏ வெங்கடேஷ், விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பப்பு, யூடியூப் புகழ் பாரத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவருடைய நகைச்சுவையான மற்றும் பெயர் சொல்லும் கதாபாத்திரங்கள் மூலம் நடிக்கும் எல்லா படங்களுக்கும் அதிர்ஷ்ட சின்னமாக விளங்கும் 'முனிஷ்காந்த்' இந்த படம் முழுக்க தோன்றும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, நாயகனின் தாயாக நடிக்கிறார். இந்த அம்மா, மகன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பு இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

அருண்ராஜ் (இசை), பி. ஜெயமோகன் (வசனம்), முரளி கிரிஷ் (ஒளிப்பதிவு), ரூபன் (படத்தொகுப்பு), தேவக் (கலை), மதன் கார்க்கி, அருண் பாரதி (பாடல்கள்), சதீஷ் (நடனம்), விக்கி (சண்டைப்பயிற்சி), டான் கார்த்திக் (ஆடைகள்), ஜி ஃபிராங்க்ளின் வில்லியம்ஸ் (நிர்வாக தயாரிப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் 'ப்ரொடக்‌ஷன் நம்பர் 1' ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலம் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மிக விரைவில் வெளியிடுவார்.

No comments:

Post a Comment