Featured post

Aari Arjunan starrer 4th Floor Set for February Release

 *Aari Arjunan starrer 4th Floor Set for February Release"* Aari Arjunan's 4th Floor, right from its time of announcement has been ...

Wednesday, 3 July 2019

நம்பியார், ரகுவரன் வரிசையில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்


ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்
தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம் வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார்.
 காரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2  படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘களவாணி 2 படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களே கூட பகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும்.


அரசியல் காமெடி கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் துரை சுதாகர் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். எந்த வேடம் இருந்தாலும் சரி மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், எழில் இயக்கும் படத்திலும் மேலும் முன்னணி இயக்குனர்கள் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


வில்லன்களாக முத்திரை பதித்த பிரபல நடிகர்கள் நம்பியார், ரகுவரன் வரிசையில் தானும் முத்திரை பதிப்பேன் என்று கூறுகிறார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.

No comments:

Post a Comment