Featured post

Rajini Gang Movie Review

Rajini Gang Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரஜினி gang ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Ramesh...

Wednesday, 31 July 2019

கதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் ! புலம்பும் தயாரிப்பாளர்

பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறார். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் பிரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறார். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார் இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வது என்று தயாரிப்பாளர் தவியாய் தவிக்கிறார்கள். படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கடினம். கதாநாயகன்-கதாநாயகி இருவரும் இப்படி செய்தால் எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்ய முடியும் என்று புலம்புகிறது தயாரிப்பாளர் தரப்பு.







No comments:

Post a Comment