Featured post

கிங்டம் திரைப்படத்தை திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால்

 கிங்டம் திரைப்படத்தை திரையிட எவரேனும் இடையூறு விளைவித்தால் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற...

Sunday, 28 July 2019

சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிப்பில்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்

சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்


விண்னைதாண்டி வருவாயா, கோ, நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார்.

குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment