Featured post

Rajini Gang Movie Review

Rajini Gang Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரஜினி gang ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Ramesh...

Friday, 26 July 2019

கழுகு-2 க்ளைமாக்ஸ் கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்


ஆகஸ்ட்-1ஆம் தேதி உலகம் முழுவதும்  வெளியாகும்  'கழுகு-2'..!


கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’. ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் 'கழுகு 2’ படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம்  வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது.

இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.. த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்கள்.. இதில் உணர்ச்சிவசப்பட்ட கோவை விநியோகஸ்தர் சிதம்பரம், கோவை ஏரியா வெளியீட்டு உரிமையை அவுட் ரேட் முறையில் வாங்கியுள்ளார்..
கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, கழுகு 2 படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான சில நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.




No comments:

Post a Comment