Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Sunday, 28 July 2019

A CINEMATIC IMAGINATION: JOSEF WIRSCHING AND THE BOMBAY TALKIES


இந்தியத் திரைப்பட முன்னோடி ஒருவருக்கான கவுரவமாக, செரண்டிபிட்டி ஆர்ட்ஸ் பவுண்டேஷன் அல்காசி பவுண்டேஷன் பார் தி ஆர்ட்ஸுடன் இணைந்து வழங்கும்



சினிமாட்டிக் இமேஜினேஷன்
ஜோசப் விர்ஷிங் & தி பாம்பே டாக்கீஸ்

வழங்குபவர்கள்:

கோத்தே இன்ஸ்டிடீயூட்  / மேக்ஸ்முல்லர் பவன் சென்னை  & CPB பவுண்டேஷன்
20 ஜூலை - 4 ஆகஸ்ட், 2019 | காலை 10 முதல் மாலை 6 வரை
லலித் கலா அகாடமி, 4 கிரீம்ஸ் ரோடு சென்னையில் பார்வையிடலாம்



கோவாவில், செரண்டிபிட்டி ஆர்ட் பெஸ்டிவலில் (2017) காட்சிப்படுத்தப்பட்ட இந்த நடமாடும் கண்காட்சி, உலகங்கள் தழுவிய உலகின் கதையை, பெர்லின், கொல்கத்தா, முனிச், பாம்பே ஆகிய நகரங்களை ஒன்றிணைத்த கலாச்சாரக் குவிதலின் கதையைச் சொல்கிறது. இந்தியாவைத் தனது இல்லமாகவும் பணியிடமாகவும் தேர்வு செய்துகொண்ட ஜெர்மனி நிழற்படக் கலைஞர் ஜோசப் விர்ஷிங்கின் புகைப்படத் தொகுப்பிலிருந்து இந்தக் கண்காட்சி ஊக்கம் பெற்றது. விர்ஷிங்கின் புகைப்படத் தொகுப்பு, கலைஞர்கள், பணியாளர்கள் தொடர்பான பின்னணிக் காட்சிகள், உற்பத்தி, விளம்பரக் காட்சிகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவில் காலானியாதிக்கத்துக்குப் பிந்தைய காலத்தில் படைப்பூக்கச் சமூகம் மற்றும் அழகியல் முடிவுகள் தொடர்பான இதற்கு முன் இல்லாத அணுகலை அளிக்ககூடியவையாக இவை அமைந்துள்ளன. 


சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய கலைஞர்கள், தேசியவாத நோக்குடன் இருக்கும் அதே நேரத்தில் நவீனமாகவும் இருக்கக்கூடிய அழகியல் மொழியை நாடினர். ஐரோப்பியக் கல்வியியல் நியதிகள், காலானியாதிக்க வகைமாதிரிகள் ஆகியவற்றால் அதிருப்தி அடைந்தவர்கள், உள்ளூர் கலை வம்சாவளியினரை நோக்கியும், ஆங்கிலேயப் பேரரசுக்கு வெளியே இருந்த வித்தியாசமான பரிசோதனை இயக்கங்கள் பக்கமும் திரும்பினர். இந்த விழைவில், இந்தியவியல் ஆய்வில் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஜெர்மனி முக்கியக் கூட்டாளியானது. இந்த வகையில் 1920களில் ரவீந்திரநாத் தாகூர் ஜெர்மனி சென்றார். ஆஸ்திரியக் கலை ஆய்வாளர் ஸ்டெல்லா கிரம்ரிஷ், சாந்தி நிகேதனில் இணைந்து கொல்கத்தாவில் (1922) பவுஹாஸ் கண்காட்சியை நடத்தினார். இந்த இருவழிப் பரிமாற்றத்தின் தாக்கம் சினிமாவில், தீவிரமாக உணரப்பட்டது. சுமுருன் (1920), தி டைகர் ஆப் இஷ்னாபூர் (1921), தி இந்தியன் டாம்ப் (1921) ஆகிய கிழக்காசியப் படங்களின் வெற்றியால் ஊக்கம் பெற்று, இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் தொழில்நுட்பப் பயிற்சிக்காக ஜெர்மனையை நாடினர். ராஜா ரவிவர்மா, ஏற்கனவே தனது வெகுஜனமயமாக்கப்பட்ட காலெண்டர் ஓவியங்கள் மூலம், உடலுக்கான ஐரோப்பிய அணுகுமுறைகள் மற்றும் ஜெர்மனி குரோமோலித்தோ கிராபிக் நுட்பங்களை அறிமுகம் செய்திருந்தார். 1920களில் தேசியவாதத் திரைப்பட இயக்குநர்கள் தாதாசாகிப் பால்கே, வி. சாந்தாராம், ஹிமான்சூ ராய் ஆகியோர் இந்தத் தாக்கங்களை, ஜெர்மனியின் ஒபெரம்மேரகாவின் நாடகங்கள், வங்காளப் பள்ளிச் சித்திரங்கள், ஹெய்மத் திரைப்பட கிராம கதைகள், ஆர்ட் டெக்கோ தொழில் வடிவமைப்பு, இந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம் ஆகிய தாக்கங்களோடு கலந்து அறிதலோடு மறுஉருவாக்கத்தில் ஈடுபட்டனர்.


இரண்டாம் உலகப் போரின்போது அடைக்கலம் தேடி மும்பை வந்த  வால்டர் காப்மன், வில்லி ஹாஸ் போன்ற யூதக் கலைஞர்களால் வேறு விதமான பரிமாற்றம் ஏற்பட்டது. 1934இல் திறந்து வைக்கப்பட்ட பாம்பே டாக்கீஸ் ஸ்டூடியோ, அந்த இயக்கத்தின் பண்பாட்டு இயங்குவிசையை, அதன் மையக் குழுவில் இருந்த ஹிமான்சூ ராய், பிரான்ஸ் ஓஸ்டன், ஜோசப் விர்ஷிங், நிரஞ்சன் பால், தேவிக ராணி ஆகியோர் மூலம் பிரதிபலித்தது. இந்தியாவின் வணிக திரைப்பட வடிவத்தை உருவாக்கியதில் பாம்பே டாக்கீஸ் அடிப்படையான பங்களிப்பு செலுத்தியது. உடனடிப் பிரச்சினையான சமூக சீர்த்திருத்தங்களை முன்வைத்த புகழ்பெற்ற அக்காலத்து இசைமயமான திரைப்படங்கள் சிலவற்றை அது தயாரித்தது. இந்தத் திரைப்படங்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் சிந்தனைகளைக் கடன் வாங்கி, “சுதேசி நவீனத்துவம்என்று சொல்லக்கூடிய புதிய அழகியலை உருவாக்கின. இந்தியத் தன்மை, வெளிநாட்டுத்தன்மை, மரபார்ந்த தன்மை, பரீட்சார்த்தத் தன்மை ஆகிய வேறுபாடுகளை இது கேள்விக்குள்ளாக்கிடது.




ஜோசப் விர்ஷிங்கின் கலாபூர்வமான கற்பனை, ஜெர்மனிய வெளிப்பாடுவாதத்தின் உளவியல் ஆழம், அழகியல் நெறிகள் ஆகியவற்றை பாம்பே சினிமாவுக்கு வழங்கியது. அதே நேரத்தில் அவரது புகைப்படத் தொகுப்பு, தினசரி வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு இருக்கும் வாழ்வியல் தருணங்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சினிமாட்டிக் எனும் மற்றொரு பொருள் குறித்தும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் படங்களில், தனிநபர்கள், பொருட்கள், சூழல் ஆகியவற்றின் உரையாடலை நாம் காண்கிறோம். இவை திரைப்படத் தயாரிப்பின் கஷ்டமான பணிக்குப் பின்னே உள்ள அழகியல் மற்றும் நாடகத்தன்மையைச் சித்தரிக்கும் தொலைநோக்கால் படமாக்கப்பட்டுள்ளன.
           
சர்வதேசப் பயணியும் இந்திய சினிமாவின் முன்னோடியுமான ஜோஃபப் விர்ஷிங்கிற்குச் செலுத்தும் அஞ்சலியாக இந்தக் கண்காட்சியை வழங்குகிறோம்.



உணர்வைவெளிப்படுத்தும்லென்ஸ்
ஆரம்ப கால இந்தியத் திரை உலகில் அரங்கிற்குள்ளும், அதைச் சுற்றிலும் பிம்பங்களை உருவாக்குவதில் ஜோசப் விர்ஷிங்கின் (1903-1967) அணுகுமுறை செறிவூட்டப்பட்டதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமைந்திருந்தது. இது, களச் சூழல்களை நுண்ணுணர்வுடனும் இயல்பாகவும் படம்பிடித்த அதே நேரத்தில் கலைஞர்களின் அழகியல் மற்றும் பழக்க வழக்கக்களையும் காட்சிப்படுத்தியது.

விர்ஷிங் ஜெய்பூரில் லைட்ஸ் ஆப் ஆசியா (1925) படம் பிடிக்கட்த் துவங்கியபோது, பொறியாளரும் தொழில் வடிவமைப்பாளருமான ஆஸ்கர் பார்னக் உருவாக்கிய முதல் வர்த்தக லைகா காமிராவான லைகா 1 ஜெர்மனியில் லீப்ஜில் கண்காட்சியில் அறிமுகமானது. இந்தக் கருவியில், புகைப்படச் சுருள், திரைப்பட காமிரா போல நீளவாட்டில் அல்லாமல், பக்கவாட்டில் இயங்கியது. இதன் மூலம் 35 மிமீ புகைப்படக் கலைக்கான அடிப்படை உண்டானது. விர்ஷிங் புகைப்படத் தொகுப்பில் மிஞ்சியிருப்பவை, நிழற்படக் கலையில் உண்டான இந்தப் புரட்சிக்கு அடையாளமாக விளங்குகின்றன. இதன் தாக்கமானது நவீன புகைப்பட இதழியிலிலும் உள்ளது. அன்றாட நிகழ்வுகளைப் படமாக்குவதில் இது புதிய அழகியலுக்கு வித்திட்டது. ஹென்றி கார்டியர் பிரெஸன் படங்கள் (காந்தி இறுதிச் சடங்கு காட்சி) அல்லது ராபர்ட் கோபா உள்ளிட்டோர் படங்களில் இதைக் காணலாம். இவர்கள் அனைவருமே இந்தக் கையடக்கச் சாதனத்தின் மேல்புற உலகோ எலும்பு அமைப்பில் லயித்திருந்தனர்.  

வால்டர் பெஞ்சமின் தனது புகழ்மிக்க கட்டுரையானஇயந்திர மறு உருவாக்கத்தில் காலம்எனும் கட்டுரையில் (1936) குறிப்பிட்டிருந்ததுபோல, முதல் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில், கலைகளில் புதிய பார்வைக்கான தேவை உண்டானது. அந்தக் காலத்தில் கலை உலகைப் புத்தொளி பெற வைத்த மிகப்பெரிய அளவிலான திரைப்பட மற்றும் புகைப்படக் காட்சிபடுத்தலாக, ஜெர்மனி வெர்க்பண்ட் (கூட்டமைப்பு) நடத்திய பிலிம் அண்ட் போட்டோ (1929) கண்காட்சி அமைந்தது. இதில் மற்றவர்கள் படைப்புகளுடன், யூஜின் அஜெட், மார்செல் டஷ்காம்ப், ஹன்னா ஹோக், லாஸ்லோ மோஹோலி நேகி, மான் ரே, அலக்சாண்டர் ராட்சென்கோ ஆகியோரின் அழுத்தமானதும் சோதனை ரீதியானதுமான படைப்புகளும் இடம்பெற்றன. இவர்கள் அனைவரும், ஐரோப்பிய வெளிப்பாட்டிற்கு அதன் எல்லைகளைக் கடந்த அசாதரணமான கலாச்சார அர்த்தத்தை உண்டாக்கினர்.
இதன் விளைவாக இந்தியாவில், விர்ஷிங்கின் சமச்சீரில்லாத காமிரா கோணங்கள் மற்றும் சூழல் உருவாக்கங்கள், தனது துணையான ஆலைன் டேனியேலா (பிரான்ஸ்) உடன் பயணம் செய்து இந்துக் கோயில்களின் கட்டிடக் கலையைப் படம் பிடித்த ரேமாண்ட் பர்னியர் (சுவிட்சர்லாந்து) போன்ற வெளிநாட்டுப் புகைப்படக் கலைஞர்களின் படங்களுடன் இந்தியாவில் இடம்பெற்றன. இதற்கு மாறாக, விர்ஷிங்கின் பார்வை, திரைப்படத் தன்மை கொண்டதாக இருந்ததுடன், கனவு போன்ற தன்மையையும் அளித்தன. நெருக்கமான காட்சி, நாடகமாக்கச் சித்தரிப்பு உள்ளிட்ட நிகழ் காட்சிகளின் நேர்த்தியான நுட்பமும் வலுசேர்த்தன. மேலும் செய்தி நோக்கிலான படங்களும் இவரை அசையும் மற்றும் நிழல் படங்களின் மன்னானாக்கின.



தேர்வாளர்கள்

தேவஸ்ரீ முகர்ஜி, ரஹாப் அல்லனா
படைப்பூக்கப் பங்குதாரர்
ஜார்ஜ் விர்ஷிங்
சீனோகிராபி
சுதீப் சவுத்ரி
இவர்களுக்குக் கூடுதல் நன்றிகள்
மூர்த்தி அஹூஜா
லட்சுமன் ஆர்யா
ஜெனீபர் சவுத்ரி பிச்வாஸ்
ஹிடான்ஷி சோப்ரா
பீட்டர் டெய்ட்சே
சிவாந்திரா சிங் துங்காபூர்
விஜய் குமார்
லட்சுமன் போட்டோகிராபிக்ஸ்
கணேஷ் பிரசாத்

No comments:

Post a Comment