Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Monday, 19 August 2019

சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு



உலக திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. 
நமக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் 
மற்றும் யாஷ் ஆகியோரும் இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப் டைட்டிலுடன் படத்தை ஆஸ்கார் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். 
உலக நாயகன் கமல்ஹாசன் தன் வாழ்துச் செய்தியில்,ஏற்கெனவே ஒற்றைப் பாத்திரமாக படம் முழுவதும் வந்த ராபர்ட் ரெட்ஃபோர்ட், டாம் ஹார்டி ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் பார்த்திபனும் இணைந்து விட்டது நிதர்சனமாகத் தெரிகிறது என்று கூறியிருக்கிறார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நண்பர் பார்த்திபனின் தனித்துவம் மிக்க திரைப்பட சோதனை முயற்சி இது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தி நடிகர் ஆமிர்கான், வழக்கத்துக்கு மாறான மிகப் புதிய முயற்சி இது. இதைப்பற்றி பேசுவதற்கே பரவசமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ்,  யாருமே பயணப்படாத புதிய பாதையில் பயணப்படுவது பார்த்திபனுக்கு கைவந்த கலை. எங்களைப் போன்ற நடிகர்கள் செய்ய பயப்படுவதை அவர் எளிதாகச் செய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர், இதுதான் தனி மனித சாதனை. ஓத்த செருப்பு சைஸ் 7 என்ற தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த செருப்பு யாருடையது என்பதைத் தெரிந்து கொள்ள முயலும்போது ஆர்வம் அதிகரிக்கிறது என்றார்.
ஆஸ்கர் விருதுக்கு முழு தகுதியுள்ள இந்தப் படத்திற்கு ஏற்கெனவே ஆஸ்கர் விருதை வென்ற புரொடக்ஷன் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் தன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.

ராம்ஜி ஒளி்ப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் ஓத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.சத்யா பின்னணி இசைக் கோர்பு செய்திருக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்துக்கு அகடமி விருது வென்ற ரசூல் பூக்குட்டி கலை இயக்குநராகவும், அம்ரித் ப்ரீத்தம் சவுண்ட் டிசைனராகவும் பொறுப்பற்றிருக்கின்றனர். பாடல்களை விவேகா எழுதியிருக்கிறார்.  இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்
புகைப்படங்கள் - விஷ்ணு
இணை இயக்கம் - கிருஷ்ணமூர்த்தி
பப்ளிசிட்டி டிசைனர்-  டி.கண்ணதாசன் 
மக்கள் தொடர்பு சுரேஷ் - சந்திரா-ரேகா (D'one) 
 IGENE- (D.I)
Whitee Lottus- (VFX)

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் சார்பில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தயாரித்து இயக்கியிருக்கும் இப்படம் இம்மாதம் 30ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது.
மேலும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7வரை சிங்கப்பூரில் நடக்கும் தெற்கு ஆசிய சர்வதேச திரைப்பட விழாவிலும் கலந்து கொள்வது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment