Featured post

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது

 *மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் - “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்”  பட ஃபர்ஸ்ட்லுக் வெளியானது !!* *பிரியங்கா மோகன் நடிக்கும்,  க...

Wednesday, 30 October 2019

நவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது பட்லர் பாலு



நவம்பர்  ம் தேதி வெளியாக உள்ளது “ பட்லர் பாலு 
தமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது.


காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது  "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில்   நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சியும் இணைந்துள்ளார்.  மற்றும் மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையள் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த  பட்லர்பாலு  படம் அமையும் என்கிறார்கள். இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற 
சமையல் வேலைக்காக சென்ற  திருமண மண்டபத்தில்  மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி  விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது.போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார்  என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் படி கலகல காமெடி கலந்த திரைக்கதையாக  “ பட்லர் பாலு “ படத்தை உருவாக்கி இருக்கிறார்
இயக்குநர்  சுதிர்.M.L
அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் அந்த அளவிற்கு காமெடி கலாட்டாவாக இருக்கும். படத்தை முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் நவம்பர்  8ம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறது.


ஒளிப்பதிவு  - பால் லிவிங்க்ஸ்டன்
இசை  - கணேஷ் ராகவேந்திரா
வசனம்  - S.P.ராஜ்குமார்
தயாரிப்பு  -  தோழா சினி கிரியேஷன் கிருத்திகா.

No comments:

Post a Comment