Featured post

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!* Sunda...

Tuesday, 26 November 2019

சமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும்

சமூக வலைத்தளங்களால்  பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் " கருத்துக்களை பதிவு செய் "

RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் " கருத்துக்களை பதிவு செய் " 
இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக உபாசனா  நடித்துள்ளார். மற்றும்  சௌடா மணி, E.V.கணேஷ்பாபு, சிந்துஜாவிஜி, நேத்ரா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் ராகுல்பரமகம்சா  கூறியதாவது..
முகநூலால் ஒரு அப்பாவி கிராமத்து பெண் பாதிக்கப்பட்டு அவள் எப்படி அதிலிருந்து மீண்டு வந்து தன் வாழ்வை கேள்விக்குறியாக்கி அந்ந கயவர்களை தண்டிக்கிறார்கள்  என்பதே இந்த கருத்துகளை பதிவு செய் படம். இந்த காலத்து பெண்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு தரும் பாடமாக இந்த படம்  இருக்கும்.











சமீபத்தில் பொள்ளாச்சியில்  இது போல் ஒரு சம்பவம் நடந்தது. அது  நடப்பதற்கு முன்பே இப்படம் எடுக்கப்பட்டு விட்டது. இதில் வரும் காட்சிகள் அந்த சம்பவங்ளோடு ஒத்து போவதால் எனக்கு பல மிரட்டல்களும் வந்தன ஆனால்  நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்றய சமூக இளைஞர்கள், பெண்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் அதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி சம்பவம் ஒன்றுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போல் இன்னும் நிறைய நடந்து கொண்டுதான் இருக்கிறது. மூகநூல் பயன்படுத்தும் அனைத்து பெண்களுக்கும் இந்த படம் ஒரு விழிப்புணர்வைத்தரும் என்ற நம்பிக்கையில்தான் எடுத்துள்ளேன் என்கிறார் இயக்குனர் ராகுல்பரமகம்சா.
சென்ஸார் அதிகாரிகள் படத்தை பார்த்து பாராட்டினர். அதுமட்டுமல்லாது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். அது மக்களிடையே  மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஒளிப்பதிவாளர்: மனோகரன்
இசை: கணேஷ் ராகவேந்திரா,
பின்னணி இசை: பரணி,
பாடல்கள் - சொற்கோ
எடிட்டர்: கணேஷ்.D
ஸ்டன்ட்  - ஆக்ஷன் பிரகாஷ்
கலை  - மனோகர்
நடனம்  - எஸ்.எல்.பாலாஜி
மக்கள் தொடர்பு  - மௌனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை  - வெங்கடேஷன்
நிர்வாக தயாரிப்பு  - வி.கே.மதன் 
தயாரிப்பு  -  RPM சினிமாஸ்
இணை தயாரிப்பு - JSK.கோபி
இயக்கம் - ராகுல் பரமகம்சா
கதை, திரைக்கதை, வசனம் - ராஜசேகர் 
ஸ்ரீ சிவ சாய் ஆர்ட்ஸ் கே.மோகன் தமிழகமெங்கும் படத்தை வெளியிடுகிறார்.

No comments:

Post a Comment