Saturday, 16 May 2020

ஜீ5 பிரத்யேகமாக வழங்கும்

*ஜீ5 பிரத்யேகமாக வழங்கும் தனித்துவமான 3 தமிழ் இணையத் தொடர்கள்*

பொது முடக்கத்தில் ‘அமைதியாக இருங்கள்; மகிழ்ச்சியுடன் இருங்கள்’ எனும் ஜீ5 தளத்தின் தனித்துவ முயற்சியின் வெளிப்பாடாக மூன்று புத்தம் புதிய இணையத்தமிழ் தொடர்கள் ‘வேட்டை’, ‘அறிவான் – வெளிப்படுத்துதல்’, ‘உயிரே – பிணைக்கும் உறவுகள்’ வெளியாகிறது

14 மே 2020:

நாட்டின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ5 தனது பார்வையாளர்களுக்காக மூன்று தனித்துவமான டிஜிட்டல் பிரத்தியேக தமிழ் நிகழ்ச்சிகளைத் திரையிடுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொடருக்கும் ஒரு எபிசோட் என இரவு 8.30 மணிக்கு 'வேட்டை', இரவு 9.00 மணிக்கு 'அறிவான் - வெளிப்படுத்துதல் ', இரவு 9.30 -க்கு 'உயிர் - பிணைக்கும் உறவுகள்’ வெளியிடுகிறது

‘அறிவான் - வெளிப்படுத்துதல்’, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான ஹரி, ஒரு தொடர் கொலைகாரனைக் கைது செய்வதற்காக, பிரிந்த சகோதரர் தேவாவுடன் இணைகிறார். ஒரு அதிரடி திரில்லர் நாடகத்திற்கு சாட்சியாக, இருவரும் தங்கள் பணியில் அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள். ஜபு தீன், ஜேம்ஸ் குமார், காயத்ரி சேகரன், உதய சவுந்தரி மற்றும் ஆர் வேங்கா ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரை டி.வேல்முருகன் மற்றும் குமரன் சுந்தரம் இயக்கியுள்ளனர்.

இணையதள இணைப்பு: https://www.zee5.com/tvshows/details/arivaan-the-revelation/0-6-2688


‘உயிரே - பிணைக்கும் உறவுகள்’ இது ராகவன் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றியது. மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அசைக்க முடியாத குடும்பப் பிணைப்பு ஆகிய அனைத்தையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அவரது குடும்பத்தை பிரிப்பதற்கு ஏதுவாக அச்சுறுத்தும் வகையிலான ரகசியங்கள் வெளிப்படுகின்றன. அப்பாஸ் அக்பர் மற்றும் குமரன் சுந்தரம் இயக்கத்தில் அரவிந்த் நாயுடு, புரவலன், குணா, இந்திரா, அஸ்வினி, மாலினி, நிஷா குமார் மற்றும் ஜேம்ஸ் குமார், தவனேசன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இணையதள இணைப்பு:https://www.zee5.com/tvshows/details/uyire-ties-that-blind/0-6-2689
‘வேட்டை’ (சீசன் 1, 2, 4) என்பது இந்திய சமூகம் மற்றும் இந்தியாவில்  குடியேறியவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத வழக்குகளைச் சமாளிக்க கூடிய ஒரு சிறப்பு பணிக்குழுவை பற்றியது. இந்த குழு மறைப்புகளின் பின்னிருந்து வேலை செய்தாலும், அதன் பணிச்சுமை அளப்பரியது. இக்கதைகளத்தின் மையமாக இருப்பது அதன் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு தயாநிதி. தொடரின் முக்கிய சதியை அவர் ஒய்வு பெற்ற சில நாட்களிலேயே மர்மமான முறையில் இறந்து கிடப்பதில் தான் தொடங்குகிறது. அனுராதா கண்டேராஜு மற்றும் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் ஷபீர், சதீஷ், குணாளன், விக்னேஸ்வரன், காயத்ரி சேகரன், ரிஷி குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இணையதள இணைப்பு:https://www.zee5.com/tvshows/details/vettai-s1/0-6-2690

ஜீ5 பற்றி:

ஜீ5 என்பது உலகளாவிய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மையமான ஜீ எண்டர்டைன்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) ஆல் தொடங்கப்பட்ட டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமாகும். ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 12 மொழிகளில் உள்ளடக்கத்துடன், ஜீ5 ஆனது 1.25 லட்சம் மணிநேர ‘ஆன் டிமாண்ட்’ உள்ளடக்கம் மற்றும் 100+ நேரடி தொலைக்காட்சி சேனல்களைக் கொண்டுள்ளது. இத்தளம் அசலான சிறந்த தொடர்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் உள்ளடக்கம், திரை நாடகங்கள், லைவ் டிவி மற்றும் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற அனைத்து உள்ளடக்கங்களையும் ஒரே இடத்தில்  கொண்டு வருகிறது. ஜீ5 11 பயன்பட்டு மொழிகள், உள்ளடக்க பதிவிறக்க விருப்பம், தடையற்ற வீடியோ பின்னணி மற்றும் குரல் தேடல் போன்ற பல்வேறு முன்னோடியான அம்சங்களை வழங்குகிறது.

ஜீ5வை பின்தொடர: Facebook.com/ZEE5Premium, Twitter.com/ZEE5Premium, Instagram.com/ZEE5Premium

No comments:

Post a comment