Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Saturday, 23 May 2020

என்றும் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக

என்றும் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். இன்றைய உலக ஒழுங்கை மாற்றியமைத்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அனைவரும் பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

கடந்த ஜனவரி 19 2020 அன்று  எனது வரிகளிலும், தயாரிப்பிலும் , உதயன் அவர்களின் இசையமைப்பில் "காதல் ஆனந்தம்" இறுவட்டு வெளியீடு செய்யப்பட்டது.  எங்களுடைய இந்த இசைத் தொகுப்பில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எனதும், இசையமைப்பாளர் உதயன் அவர்களினதும் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளகின்றோம்.
எட்டுப் பாடல்கள் உள்ளடங்கிய தொகுப்பு இங்கே: 

 "காதல் ஆனந்தம்" இறுவட்டின் பாடல்கள் நான் பெரிதும் மதிக்கும் தொலைக்காட்சி, பத்திரிக்கையாளர்கள், இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் இப்பாடல்களை அனுப்பி வைக்கின்றேன்.

இந்த இறுவட்டில்  உள்ள பாடல்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நான் பணியாற்றும் சுயாதீன இசைப்பாடல்கள் உருவாக்கும் பணியின்  ஒரு அங்கமாகும். தொடர்ச்சியாக பல பணிகளுக்கு மத்தியில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் பாடல்களை உருவாக்கி வருகின்றேன். 

அந்த வகையில் இந்தப் பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன். உங்களுடைய ஊடகத்தில் இந்தப் பாடல்களை மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தப் பாடல்கள் தொடர்பாக அல்லது உங்கள் ஊடகங்களில் வெளியிடுவது தொடர்பான கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும். 

No comments:

Post a Comment