Featured post

*A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track’ O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, Backed by Bhushan Kumar

 *A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track’ O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, Backed by Bhushan...

Wednesday, 20 May 2020

சிதறிப்போன தன் வாழ்வை

சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் 'நான்தான் சிவா' - இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம்

'ரேணிகுண்டா' மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். இதையடுத்து '18 வயசு' மற்றும் விஜயசேதுபதி நடித்த  'கருப்பன்' போன்றவ்படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும்
'நான்தான் சிவா' என்ற படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தைப் பற்றி அவர் கூறியதாவது :

ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை. இதை காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் மூலம் கூறியிருக்கிறோம்.இதன் படபிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடந்தது. படபிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இன்று இதன் பாடல் வெளியீடு சோனி ஆன்லைனில் வெளியாகிறது.



கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக 'உதயம் NH4' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.



இவ்வாறு இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம் கூறினார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு - என்.சுபாஷ் சந்திரபோஸ்

இயக்குநர் - ஆர்.பன்னீர் செல்வம்

ஒளிப்பதிவு - பி.ராஜசேகர்

சண்டைப் பயிற்சி - ராஜசேகர்

நடனம் - தினேஷ்

மக்கள் தொடர்பு - ஜான்சன்

பாடல்கள் - யுகபாரதி

இசை - டி.இமான்

கலை - சீனு

தயாரிப்பு மேலாளர் - ஜி.ஆர்.நிர்மல்

படத்தொகுப்பு - ஆண்டனி

இணைத் தயாரிப்பு  - ஜி.ஆர்.வெங்கடேஷ்
‘பையா’, அஞ்சான், ரஜினிமுருகன்,மஞ்சப்பை, வழக்கு எண் 18/9, தீபாவளி, கும்கி, உத்தமவில்லன் போன்ற பல வெற்றி படைப்புகளை தந்த என்.லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் “நான்தான் சிவா” படத்தை தயாரிக்கிறார்கள்.
'.

No comments:

Post a Comment