Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Saturday, 23 May 2020

தமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான

தமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின்  படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது

இந்தியளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படமான  விஜய் மற்றும் விஜய்சேதுபதி  இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.



மேலும் நடிப்பிற்காக எந்தத் தோற்றத்தையும் தனக்குள் கொண்டு வரும் சியான் விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படம் 90 நாட்கள் ஷுட்டிங் நிறைவுற்றுள்ளது. அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25%  மட்டுமே பாக்கி இருக்கிறது

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் 'துக்ளக் தர்பார்' படத்தின் ஷுட்டிங் 35 நாட்கள் நடைபெற்றுள்ளது. விறுவிறுப்பான கதை அம்சம் உள்ள இப்படம் சிறப்பாக வளர்ந்து வருகிறது

மேலும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில்  இளைஞர்களின் ஆதர்ச இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் ஆக்ஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. விஜய்சேதுபதி நயன்தாரா விக்னேஷ் சிவன் ஏற்கெனவே வெற்றிக்கூட்டணி என்பதால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் முக்கியமான படமாக இருக்கிறது.

கொரோனாவின் தாக்கம் குறைந்து  தளர்வு வந்ததும் இப்படங்களின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் இருக்கும் என்று நம்பலாம்.

No comments:

Post a Comment