Featured post

Draupathi 2 Ignites Buzz as Chirag Jani Leads a Ferocious Villain Line-Up

 *Draupathi 2 Ignites Buzz as Chirag Jani Leads a Ferocious Villain Line-Up* _*The much-awaited ‘Draupathi 2’ heightens the expectation mete...

Saturday, 16 May 2020

Corona Awareness Song | “Bayam Vendam Thozha Bayam Vendam”
Written,Music & Sung By Iniyavan

இசையமைப்பாளர் இனியவன் படைப்பில் உருவாகியிருக்கும் கரோனா விழிப்புணர்வு பாடல் – ‘பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்
உலகையே ஸ்தம்பிக்க வைத்துகண்ணுக்கு தெரியாமல் பெரும் பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடலைதானே எழுதிஇசையமைத்து பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் இனியவன்.
கௌரி மனோகரி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இனியவன்தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால்சிறுவயது முதலே பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டவர்.
தனது கடுமையான உழைப்பினால்முதல் படத்திலேயே கவிஞர் வைரமுத்துவுடன் ஒரு தொழில்முறை நெருக்கத்தை எற்படுத்திக் கொண்ட இனியவன்கவிஞர் வைரமுத்து வரிகளில்எஸ்பிபாலசுப்ரமணியம்கே ஜே யேசுதாஸ்எஸ் ஜானகிசித்ரா உள்ளிட்ட பல்வேறு பாடகர்களின் குரலில் பல நல்ல பாடல்களை படைத்திருக்கிறார்.
2004ம் ஆண்டு முன்னாள் முதலைமைச்சர் டாக்டர் கலைஞர் முன்னிலையில்கவிஞர் வைரமுத்துவின் ‘கவிதையே பாடலாக – 1’ என்ற பாடல் தொகுப்புக்கு இனியவன் மேடையிலேயே இசையமைத்து பாடல்களை அரங்கேற்றிய விதம் அவருக்குப் பெரும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்ததுஅதனைத் தொடர்ந்து, 2007ம் ஆண்டு கவிதையே பாடலாக – 2ம் தொகுப்பு மற்றும் அதே ஆண்டில் ‘சுனாமி பாடல் தொகுப்பு’ உள்ளிட்ட படைப்புகள், 2009ம் ஆண்டில் சுதா ரகுநாதன் குரலில்கவிஞர் வைரமுத்து வரிகளில்  இவர் வெளியான ‘கல்லறைப் பாடல்’ பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2000 பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் இவர்பல்வேறு சர்வதேச இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார்இந்த இக்கட்டான ஊரடங்கு நேரத்திலும் கரோனா விழிப்புணர்வு பாடலைஎழுதிஇசையமைத்துபாடிபகிர்ந்திருப்பது மிகுந்த வரவேற்புக்கு உரியது.

No comments:

Post a Comment