Featured post

Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers*

 Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers* The monumental project featuring Icon Star Allu Arjun in...

Monday, 18 May 2020

Noise and Grains about their New initiative “Noise and Grains-Movies “

இந்த கொரானா காலகட்டத்தில் தாங்களும் தங்களது குடும்பத்தினர் அனைவரும்  மிகவும் பாதுகாப்பாக இருப் பீர்கள்  என்ற நம்பிக்கையில் noise and grains மீண்டும் தொடர்பு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.



மக்களிடத்தில் பிரசித்தமான  எங்களது noise and grains நிறுவனத்தில் இருந்து இது வரை இசைமழையால் உங்களை நனைத்து வந்தோம்.  

தமிழ் சிம்பொனி தந்த இசைஞானி இளையராஜா,  ஆஸ்கர் நாயகன் இசைப்புயல்
A R ரஹ்மான், 1000 பாடல்களுக்கு மேல் பாடிய SPB,  காந்த குரலோன் ஜேசுதாஸ், ஹரிஹரன், பாடகர் ஸ்ரீனிவாஸ், சித் ஸ்ரீராம்,  சின்மயி,  நடிகை ஆண்ட்ரியா  உட்பட பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியது மட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக நம்ம ஊரு ஹீரோ,  சூர்யா சூப்பர் சிங்கர், முத்தாய்ப்பாக இளைய தளபதி விஜயின் மாஸ்டர் ஆடியோ நிகழ்ச்சி போன்றவற்றை வழங்கிய noise and grains ன் அடுத்த பரிமாணம்  ஆன்லைன் மூவிஸ்க் காக புதிய YouTube சேனல் இன்று புதிதாக துவக்கி உள்ளோம். இந்த தளத்தில் காலத்தால் அழியாத திரைப்படங்கள், குறும்படங்கள்,  வெப்  சீரிஸ்,  மற்றும் மக்களை மகிழ்விக்கும் அனைத்திற்கும் நாங்கள் உத்திரவாதம்.  எதிர் காலத்தில் புதிதாக திரைப்படங்கள், வெப் சீரிஸ் தயாரிப்பதற்கும், OTT   விநியோகம் செய்வதற்கும்  அதற்கு தேவையான  முயற்சிகளை  எடுத்து வருகிறோம் என்பதை மகிழ்ச்சியுடன்   தெரிவித்துகொள்கிறோம்.

No comments:

Post a Comment