Saturday, 5 September 2020

சந்தோஷ்குமார் ‘க்ளீன் போல்ட்’ குறும்படம் மூலம்

சந்தோஷ்குமார் ‘க்ளீன் போல்ட்’ குறும்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சந்தோஷ்குமார். அதில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால்கவனிக்கப்படத்தக்கவராக மாறியதால் தனது அடுத்தடுத்த குறும்படங்களால் சினிமாக்காரர்களிடம் நெருக்கமாகியுள்ளார். இந்நிலையில் இவர் விஜய்ஆதிராஜை வைத்து எடுத்த ‘சக்ரவியூகம்’ குறும்படத்துக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து விருதுகள் வாங்கியிருப்பதுடன் பிரபலசினிமா நிறுவனத்திடமிருந்து படம் இயக்குவதற்கான வாய்ப்பும் வந்துள்ளது. 

இந்தத் தகவல் ஆச்சரியமாக இல்லை? ஆனால் அதுதான் உண்மை. சந்தோஷ்குமார்
வெகுவிரைவில் ‘சக்ரவியூகம்’ குறும்படத்தை வெள்ளித்திரைக்காக
இயக்கவுள்ளராம் .
இதுகுறித்து இயக்குநர் சந்தோஷ்குமார் கூறியது,  ‘‘எனக்கு சொந்த ஊர்கோயமுத்தூர். சினிமா பின்னணி எதுவும் கிடையாது. படிச்சது கம்ப்யூட்டர்சயின்ஸ். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. சினிமா ஒரு ரசிகராகத்தான்அறிமுகம். எம்.பி.ஏ. படிக்கும்போது சக நண்பர் ஒருவர் டிஜிட்டல் கேமராவைத்திருந்தார். அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொள்ளவிளையாட்டாக நண்பர்களை வைத்து ஒரு வீடியோ எடுத்தேன். அந்த வீடியோவுக்குநல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. சிலர் ‘குறும்படம் ட்ரை பண்ணலாமே’
என்றார்கள். அப்போது நான் ஸ்டூடண்ட் என்பதால் கையில் பணம் இல்லாததால்
அந்த முயற்சியை அப்படியே ஓரங்கட்டி வைத்துவிட்டேன்.

பிறகு வேலைக்குப் போனதும் மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்கள்எடுக்கும் முயற்சியில் இறங்கினேன். முதல் முயற்சியாக ‘க்ளீன் போல்ட்’எடுத்தேன். அதற்கு ஒரு மில்லியன் வியூஸ் கிடைத்தது. தொடர்ந்து‘நெமிசிஸ்’(nemesis), ‘அத்தியாயம்’ என்று பல ஜானர்ல ஷார்ட் ஃபிலிம்எடுத்தேன்.தற்போது வெளிவந்துள்ள ‘சக்ரவியூகம்’ சைபர் இன்வெஸ்டிகேஷன்பற்றிய கதை. நகரில் சில கொலைகள் நடக்கிறது. அதுவும் செலக்டிவ்வாகநடக்கிறது. கொலையாளி யார்? கொலைகாரன் யார்? என்பதை ஒரு முழு
சினிமாவுக்கான விறுவிறுப்புடன் சொல்லியுள்ளேன்.

துப்பறியும் அதிகாரியாக விஜய் ஆதிராஜ் நடித்துள்ளார். அவர் எங்கள்குறும்படத்தில் நடித்தது மறக்க முடியாதது. விஜய் ஆதிராஜ் சார் எனக்குமுகநூலில் அறிமுகமானார். நாங்கள் வேலைக்குப் போகிறவர்கள் என்றுதெரிந்ததும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அவருக்காக ஸ்பெஷல்உணவு ஆர்டர் செய்தாலும் ‘நீங்கள் என்ன சாப்பிடுவீர்களோ அதுவே போதும்’என்றார். அதே மாதிரி தங்கும் விஷயத்திலும் சாதாரண ஓட்டல் போதும் என்று
சொல்லிவிட்டார். சில சமயம் பொதுவெளியில் படமாக்கும்போது கூடுதலாக நேரம்
செலவழிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அந்த சமயத்தில் பல மணி நேரம் காரில்
காத்திருந்து ஒத்துழைப்புக் கொடுத்தார்.

என்னுடன் வேலை செய்யும் ப்ரீத்தியும் இன்னொரு லீட் கேரக்டரில் நடித்துக் கொடுத்தார். கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளவர்கள் என்னுடைய நண்பர்கள்.நான் கேட்டதும் உடனே ‘சரி’ சொல்லி படப்பிடிப்புக்கு வந்தார்கள்.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவாளர் ஜிக்கு ஜாக்கோப் பீட்டர், இசையமைப்பாளர்ஸ்டேன்லி சேவியர், எடிட்டர் பிரேம் சாய் ஆகியோர் பிரமாதமான ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். குறும்படமாக இருந்தாலும் காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுத்தோம்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் படப்பிடிப்பு நடக்கும். நண்பர்கள் மற்றும்என்னுடைய குடும்பத்தினர் சப்போர்ட் இல்லாமல் என்னால் இவ்வளவுகுறும்படங்கள் பண்ணியிருக்க முடியாது. அவர்களுடைய தொடர் ஆதரவால்தான்என்னுடைய சினிமா பயணம் சாத்தியமானது.இயக்குநர் அருண்காந்த் தன்னுடைய ‘அருண்காந்த் ஓ.டி.டி.தளத்தில் ரிலீஸ்
செய்து கொடுத்தார்.

குறும்படங்கள் மூலம் முழு சினிமாவை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. தற்போது அதற்கான முயற்சியில் உள்ளேன். பிரபல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கதை சொல்லியுள்ளேன். க்ரீன் சிக்னலுக்காகக் காத்திருக்கிறேன்’’ என்று சொல்லும் சந்தோஷ்குமார், நயன்தாரா, டாப்ஸி போன்ற முன்னணி நடிகைகளுக்கான வுமன் சென்ட்ரிக் கதைகளும் வைத்துள்ளாராம். தவிர ‘சக்ரவியூகம்’ குறும்படத்தை மல்டிஹீரோ படமாக எடுக்கும் ஐடியாவிலும்

No comments:

Post a comment