Featured post

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

 Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups* As Yash's Toxic: A Fairytale for Grown-Ups inch...

Sunday, 20 September 2020

சலாம் சென்னை” கோவிட் 19 க்கு

“சலாம் சென்னை” கோவிட் 19 க்கு எதிரான பணியில் பங்களித்த மக்களுக்கான அர்ப்பணிப்பு வீடியோ.
சென்னை காவல்துறையுடன் இணைந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இவ்வீடியோவை வழங்குகிறார்கள் !









வரலாறு இதுவரை கண்டிராத ஒரு பெரும் நோயுக்கெதிரான போரில் நாம் உள்ளோம். இங்கு நாம் அனைவருமே போர் வீரர்கள் தான். அதிலும் சென்னை போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள மாநகரில் இந்த கோவிட் 19 க்கு எதிராக போராடுவது என்பது பெரும் சிக்கல்கள் கொண்டது. ஆனாலும் நம்முடைய ஒற்றுமையும், நாம் கடைப்பிடித்த  ஒழுக்கமும் தான் நம்மை பெரும் பாதிப்பிலிருந்து மீட்டு வெளிச்சமிக்க நிகழ்காலத்தை தந்திருக்கிறது. “சலாம் சென்னை” எனும் இந்த வீடியோ பாடல் கோவிட் 19 க்கு எதிராக மக்களை காக்கும் பொருட்டு, உயிரை துச்சமாக மதித்து பணியாற்றிய வீரர்களை கொண்டாடவும், அவர்களை பெருமைபடுத்தி  வணங்கவும்  உருவாக்கப்பட்டது. இந்த ”சலாம் சென்னை” பாடல் ஐடியா சென்னை காவல்துறை கமிஷ்னர் திரு மகேஷ் குமார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த கோவிட் 19 எதிரான போரில் பணியாற்றிய வீரர்களுக்கு கூடுதல் நன்றியை தெரிவிக்கவும்,  தனியாக இருந்தாலும் நாம் அனைவரும் போர் வீரர்களே, நாம் அனைவரும் இணைந்தே இந்த கோவிட் 19 நோயை கடந்து வந்திருக்கிறோம். நம் சூழ்நிலை மோசாமானதாக இருந்தாலும் மீண்டும் நாம் வீறுகொண்டு எழுவோம் அதற்கான சக்தி  நம் அனைவரிடத்தும் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தவுமே இந்த வீடியோவை அவர் உருவாக்க முனைந்தார். கார்த்திக் நேத்தா இப்பாடலின் வரிகளை எழுத, பிரபல இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த பாடலை உருவாக்கியதில் மேலும் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால்,  சென்னை காவல்துறை கமிஷ்னர் அவர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்த நல்ல ஆல்பத்திற்குள் கூட்டி கொண்டு வந்ததே. இந்த ஆல்பத்தை பற்றி கேள்விப்பட்டவுடனேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இந்த கோவிட் 19 க்கு எதிரான போர்வீரர்களுக்கு ஆதரவாக, தங்கள் பார்வையில், அவர்களது ஸ்டைலில் நன்றி கூறி வீடியோவை  படம்பிடித்து அனுப்பினர்.

“சலாம் சென்னை” பாடலை ஹேப்பி யுனிகார்ன் (Happy Unicorn ) சார்பில்  அரபி ஆத்ரேயா தயாரித்துள்ளார். 700க்கும் மேற்பட்ட டிவி விளம்பரங்களை உருவாக்கியவர் இவர். மிகப்பிரபலமான  விளம்பர இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் இந்த “சலாம் சென்னை” ஐடியாவை அருமையான திரைமொழியில், அழகான வீடியோவாக படமாக்கியுள்ளார். இப்பாடல் இதற்கு முன்பெப்போதும் பார்த்திராத, இதற்கு பிறகும் பார்க்கமுடியாத வடிவில் மிக நேர்த்தியாக, உயர்தரத்தில், அட்டகாசமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான கால சூழ்நிலையில் இந்த பாடலின் ஐடியாவை ஸ்டோரி ஃபோர்டாக உருவாக்கி, சென்னையின் மிக முக்கிய அடையாளங்களான எல் ஐ சி (LIC), நேப்பியர் பாலம் போன்றவற்றில் படமாக்கியது மிக மிக கடினமான பணியே. ஆனால் இயக்குநர் அவினாஷ் தன் குழுவுடன், முழு ஈடுபாட்டுடன் தடைகளை தாண்டி பணியாற்றி, அனைவரும் அசந்து போகும் விஷுவல்களுடன் இந்த பாடல் வீடியோவை உருவாக்கியுள்ளார். இக்குழு இந்த பாடலுக்கு ஒரு மிகச்சிறந்த இசையமைப்பாளர் தேவை என கருதியது. அவர் சென்னையின் ஆன்மாவை அறிந்தவராக, இளம் திறமையாளராக, ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்து இசையமைப்பவராக இருக்க வேண்டுமென யோசிக்க, இன்றைய இளைஞர்களின் செல்ல நாயகன் ஜிப்ரான் இந்த கூட்டணியில்  இணைந்து அதை நிஜமாக்கி, அட்டகாசமான இசையை அளித்துள்ளார்.

எந்த ஒரு இசை ஆல்பத்தையும் பட்டிதொட்டிவரை கொண்டு சேர்க்கும், தென்னிந்திய இசை உலகில் கோலோச்சும் திங் மியூசிக் ( Think Music) நிறுவனம் இந்த பாடல் ஆல்பத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளது.

“சலாம் சென்னை” பாடல் அனைத்து வித முன்னெச்சரிக்கைகளையும் மேலும் அரசின் அனைத்து விதிகளையும்  கடைப்பிடித்து, மிகக்குறைவான படக்குழுவுடன் படமாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment