Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Friday, 18 September 2020

ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு

ஹாலிவுட்டில் முதல் அடியே வெற்றி: ஜி.வி.பிரகாஷுக்கு குவியும் வாழ்த்து
ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது. தினமும் புதுப்புது இசைக் கோர்ப்புகள், பாடல்கள் என யூடியூப் தளத்தில் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. ஏனென்றால், மக்களின் மனநிலையை அறிந்து எப்படிக் கொடுத்தால் ஈர்க்கலாம் என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி ஒரு ஹாலிவுட் பாடல் உருவாகி, மக்களை ஈர்த்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள இந்த ஹாலிவுட் ஆல்பத்தின் பெயர் 'கோல்ட் நைட்ஸ்'. இந்த ஆல்பத்திலிருந்து 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இருவரும் வெளியிட்டார்கள்.



துள்ளலான இசை, I Need to Know என்று ஈர்க்கும் வரிகள் என சமூக வலைதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. யூடியூப் ட்ரெண்ட்டிங்கிலும் உடனடியாக இடம்பிடித்தது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அசுரன், சூரரைப் போற்று என இசையுலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜி.விக்கு இந்த ஹாலிவுட் ஆல்பம் என்பது அவருக்கு ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.
ஏ.ஆர்.ரஹ்மான், அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் தாணு, சூர்யா, தனுஷ்,  ராதிகா சரத்குமார், இயக்குநர் கார்த்திக் நரேன், ரைசா வில்சன், அலிசா அப்துல்லா உள்ளிட்ட பலரும் இந்தப் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து ஜி.வி.யின் திரையுலக நண்பர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வாட்ஸ்-அப் வாழ்த்தால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும், சக இசையமைப்பாளராக யுவன் மற்றும் இமான் ஆகியோரும் வாழ்த்தியிருப்பது கூடுதல் சிறப்பு.
'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல்.  ஹை அண்ட் ட்ரை, ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார்.
ஹாலிவுட்டில் எடுத்து வைத்துள்ள முதல் அடியே ஜி.வி.பிரகாஷுக்கு வெற்றியடைந்துள்ளது. அடுத்து எடுத்து வைக்கவுள்ள அனைத்து அடிகளுமே வெற்றியடைய வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். விரைவில் அடுத்த ஹாலிவுட் பாடல் குறித்த அறிவிப்பு வரும். அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தன் மகள் அன்வியுடன் இணைந்து கண் சிமிட்டி சிரிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

No comments:

Post a Comment