Featured post

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

 உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு! நல்ல படங்களுக்கு வாய...

Thursday, 24 September 2020

வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு

 வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வருக்கு சிறந்த ஆசிரியருக்கான விருதினை மேற்கு சென்னை ஷாகோதயா கிளஸ்டர் பள்ளிகள் கூட்டமைப்பு வழங்கியது.

சேட் பட்டு கிறிஸ்தவ யூனியன் பொதுப்பள்ளிகளின் சார்பில்   செப்டம்பர் 22 அன்று மெய்நிகர் ஆசிரியர் தின சிறப்பு விழா முனைவர் மற்றும் பேராசிரியர் உயர்திரு ஷாஜீவ் ஆபிரஹாம் ஜார்ஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


விழாவில்  மேற்கு சென்னை ஷாகோதயா கிளஸ்டர் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வேலம்மாள் வித்யாலயா பள்ளி முதல்வர் திருமதி ஷியாமளா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 



ஆசிரியர் பணியின் மீதான அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு ,இளம் தலைமுறையினரின் முன்னோடியாக செயலாற்றும் திறன் ஆகியவற்றின் காரணமாக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


வேலம்மாள் பள்ளிக் குழுமம் திருமதி ஷியாமளா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment