Featured post

SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer

 *SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer”* 
*SJ Suryah Directorial-Starrer “Killer”* 
*Shooting Starts with Ritu...

Thursday, 19 November 2020

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் நிறுவனர் தினத்தைக் கொண்டாடும் வகையில்

 வேலம்மாள் கல்விக் குழுமத்தின்  நிறுவனர் தினத்தைக் கொண்டாடும்   வகையில் மெய்நிகர் சிறப்பு நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது


வேலம்மாள் கல்விக் குழுமத்தின் பாரம்பரியத்திற்கு இணங்க, வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகள் 2020 நவம்பர் 4 ஆம் தேதி நிறுவனர் தினத்தை முன்னிட்டு வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் சாதனைத் தலைவர் ஐயாவின் உழைப்பு மற்றும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வலையொளி நிகழ்ச்சியைக் கொண்டாடியது

.


 வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் தலைவருமான திரு. எம். வி. முத்துராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 'நிறுவனர் தினம்' உற்சாகமாகவும், ஆர்வத்துடனும்,  கொண்டாடப்பட்டது.

 பெருமை வாய்ந்த தருணமாகத் தொடர்ந்த இந்நிகழ்வில்
உயர்ந்த ஆளுமையான எமது நிறுவனரின் உருவப்படம் வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து அவரது வளர்ச்சி மற்றும் கல்வியின் முன்னேற்றத்திற்கான பங்களிப்பு குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
 இறுதியில் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்ட மறக்கமுடியாத நெகிழ்ச்சிப் பாடலுடன்  இனிதே நிறைவடைந்தது. 

 இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் சார்பில் பார்வையற்றோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் எங்கள் அன்பான தலைவரின் எழுச்சியூட்டும் உரையுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது. 
இந்த இனிய மாலைப் பொழுது மூத்த முதல்வர் திருமதி.  ஜெயந்தி ராஜகோபாலன், நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களின் புகழுரைகளால் சிறப்புற்றது.

 இந்த நிகழ்வு பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து மிகுந்த பாராட்டையும் வாழ்த்துகளையும் பெற்றது.

No comments:

Post a Comment