Featured post

Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's

 Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Laand...

Wednesday, 31 August 2022

விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத்

 ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘கோ’ ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, Red Giant Movies & RS Infotainment  ஆகிய நிறுவனங்கள் மீண்டும்  இணைந்து ‘விடுதலை’ படத்தினை வழங்குகின்றனர் .


விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக Red Giant Movies & RS Infotainment  நிறுவன தயாரிப்பாளர்கள் 

திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார்  மீண்டும்  இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இறுதிக்கட்டத்தை எட்டி,  பரபரப்பாக  தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.




பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 



இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் திரை ஆரவலர்களிடையே பெரிய அளவினில்  அலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், Red Giant Movies  வெளியீடு  

தற்போது  பல திரைப்படங்களுக்கு வெற்றியின்  முகவரியாக மாறியிருப்பதால், விடுதலை திரைப்படமும் பெரும் வெற்றியாக அமையுமென  தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் நம்புகிறார்.

No comments:

Post a Comment