Featured post

Joe" team re unite for new flick

 Joe" team re unite for new flick Rioraj Next movie begun officially  The first movie to address problems of men goes on floor  After a...

Thursday 1 September 2022

புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம்

 புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு,  பூஜையுடன் இனிதே துவங்கியது !!! 


SURYA INDRAJIT FILMS  சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 






தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக “பெண்டுலம்” படம் உருவாகிறது. 


அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார்,T.S.K, விஜித்,FIR ராம்,  ராம் ஜூனியர் எம் ஜி ஆர் , பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல்முறையாக எட்டு கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது.  


20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை குவித்திட்ட குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணிபுரிந்திட்ட B.சதீஸ் குமரன் இப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் ஷங்கரின் “ஐ” படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது. 


சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா முதலாக இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 


இப்படத்தின் படப்பிடிப்பு திரைபிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 


தொழில் நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு - திரவியம் பாலா (SURYA INDRAJIT FILMS)

இயக்குநர் : B.சதீஸ் குமரன்

இசை: சைமன் கிங் 

ஒளிப்பதிவு : ஆனந்த்  

எடிட்டர்: ராம் சதீஷ் 

கலை இயக்குனர்: K.B.நந்து விஜித் பாடலாசிரியர்: விவேகா, கு கார்த்திக் 

சண்டைப்பயிற்சி : டான் அசோக் 

நடன இயக்குனர்: ராஜேஷ்.J 

ஒப்பனை: அப்துல் ரசாக் 

உடைகள் : பெருமாள் செல்வம்

விஷுவல் எஃபெக்ட்ஸ் - டோனி மேக்மித் 

தயாரிப்பு நிர்வாகி - பழனிவேல் V 

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

ஸ்டில்ஸ் - ஜூடி

போஸ்டர் டிசைனர் - ராஜ் டிசைனர் பாயிண்ட்

No comments:

Post a Comment