Featured post

Rise of a New Female Director in Tamil Cinema!

 *Rise of a New Female Director in Tamil Cinema!*  *Maragathamalai - A Super-Cool Fantasy Drama as Summer Treat for Kids!*  *L.G. Movies S. ...

Sunday, 4 September 2022

ஷெரோ 2022க்கான விருதுகள் வழங்கும் விழாவில் சுஹாசினி மணிரத்னம், ராதிகா

ஷெரோ  2022க்கான விருதுகள் வழங்கும் விழாவில்  சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார்,Shero home food நிறுவனர் ஜெயஸ்ரீ, திலக் வெங்கடசாமி,எழிலன் MLA ஆகியோர் இணைந்து வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை படைத்த திருமதி நித்யாவிற்கு queen விருதை  வழங்கினர்


 வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை புரிந்த 50க்கும் மேற்பட்ட பெண் சாதனையாளர்களுக்கு  இந்த விருதுகள் வழங்கப்பட்டன

ஷெரோ ஹோம் ஃபுட் அமைப்பு கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது...

 சாதிக்கவும் சம்பாதிக்கவும் ஆர்வமுள்ள இல்லத்தரசிகளுக்கு வாய்ப்பு வழங்கும் இந்த அமைப்பின் மூலம் தென்னிந்தியாவில் 500 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உருவாகி உள்ளனர். 

பெண்கள் தங்கள் சமையல் அறையிலிருந்தே தங்கள் வருவாயை உருவாக்கிக் கொள்வதன் அவசியத்தை ஆராய்ந்த ஷெரோ புட் டெக்னாலஜியின் நிறுவனர்கள் தங்கள் 20 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் இதனை சாத்தியப்படுத்தி உள்ளனர்.





 எளிய வீட்டுப் பெண்களும் வாரத்திற்கு 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வகையில் ஷெரோ புட் டெக்னாலஜி நிறுவனம் அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. மற்ற உணவு வீட்டு தயாரிப்பாளர்கள் போல ஒவ்வொரு வீட்டிலும் இல்லத்தரசிகள் சமைக்கும் பட்டியலை பின்பற்றாமல் ஷெரோ தனியே ஒரு உணவுப்பட்டியளை  தயாரித்து அதன்படி இல்லத்தரசிகளுக்கு பயிற்சி  வழங்கப்பட்டு சூப்பர் செஃப் ஆக உருவாக்கி உள்ளனர்.....

 மேலும் அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இந்த ஆண்டிற்கான விருது  வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. 

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிக்காக வழங்கப்படும் இந்த விருதுகள் நல்ல சமையல் செய்த கைக்கு தங்க வளையல் போடலாம் எனும்  பழமொழியை நிரூபிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. 

இந்த shero விருது வழங்கும்  விழாவில்  திரைப்பிரபலங்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஷெரோ ஹோம் ஃபுட் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜெயஸ்ரீ திலக்,  நடிகைகள் சுகாசினி மணிரத்னம் மற்றும் ராதிகா சரத்குமார்,சுபத்ரா,காயத்ரி  உள்ளிட்டோர் கலந்துகொண்டு  சாதனை பெண்களுக்கு விருதுகளை வழங்கினர்...

*விருது  வழங்கும் நிகழ்ச்சியின்போது பேசிய நடிகை  ராதிகா*

  நானும்  சுகாசினியும்  42 ஆண்டுகள் தோழிகளாக  இருப்பதாக கூறினார் சுகாசினி மிகவும் பொறுமைசாலி ஆனால் தான் பொறுமையாக இருக்க மாட்டேன் எனக் கூறினார்.  திறமையான பெண்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியிள் தன்னை அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும்  எங்களைப்போன்ற பிரபலங்களுக்கு பாராட்டுக்கள் விருதுகள் கிடைப்பது பெரிதல்ல வீட்டிலேயே உணவு தயாரிக்கும் வீட்டில்  இருக்கும் பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்குவது  உண்மையில் பாராட்டுக்குரியது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்வதாகவும்  அனைவரும் பிரபலங்களாக உருவாக முடியாது இருந்தாலும் அனைவரும்  இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ராணியாக இருப்பது மகிழ்ச்சி என கூறினார்.80s நடிகைகளின் பாஸ் சுகாசினி எனக் கூறினார்...

 *அதனைத் தொடர்ந்து பேசிய நடிகை சுகாசினி*

திரையுலகில் எனக்கு குருவாக இருப்பது  ராதிகா அவர்கள் எனக் கூறினார். உணவின் சுவைக்கு தேவையானது  குறித்த குட்டி கதை ஒன்றை கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சினிமாவில் நாங்கள் நடிக்கும் போது எங்களுக்கு கிடைக்கும் பாராட்டுகளின் மூலமே தாங்கள்  இளமையோடு இருப்பதாகவும் அதேபோல்  ஒவ்வொரு ஆண்கள்  தங்களது மனைவிகளை  பாராட்ட வேண்டும்  அப்போதுதான் அவர்கள் இன்னும் சாதிக்க கூடியவர்களாக இருப்பார்கள் எனக் கூறினார்.

*ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் பேச்சு*

தமிழர்கள் உழைக்க கூடியவர்களாக இருப்பார்கள் ஆனால் தொழில் முனைவோர்களாக இருக்கமாட்டார்கள்  என்பதை shero home food   நிறுவனர் திலக் மாற்றியமைத்துள்ளார். திராவிடர் மாடல் ஆட்சியில் பெண்களின் திறமைகளை வளர்க்கும் முயற்சியில் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அதனை நிரூபிக்கும் செயலாக இந்த நிகழ்ச்சி இருப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment