Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Friday, 9 September 2022

பிரபல திரைப்பட நடிகர் மற்றும் பிளாக்ஷீப் யூடியூப் சேனலின் நிறுவனர் விக்னேஷ்

 பிரபல திரைப்பட நடிகர் மற்றும் பிளாக்ஷீப் யூடியூப் சேனலின் நிறுவனர் விக்னேஷ் காந்த்தின் திருமணம், நேற்று(07/09/2022) திருச்சி அருகேயுள்ள வயலூர் முருகன் கோவிலில் நடந்தது.  விக்னேஷ் காந்த் - இராஜாத்தி அவர்களின் திருமண விழாவில் திரைத்துறை பிரபலங்கள் சிவகார்த்திகேயன், விமல், சுப்பு பஞ்சு, அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழாசிரியர் ஞானசம்பந்தம் ஐயா அவர்களின் தலைமையில் திருக்குறள் முழங்க இத்திருமணம் நடந்தது.










விக்னேஷ் காந்த், சென்னை 28, நட்பே துணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்க்கஸ் , நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். டிஜிட்டல் உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் ப்ளாக்‌ஷிப் நிறுவனத்தின் நிறுவனர். அவருக்கு திரையுலகினரும், டிஜிட்டல் ஊடக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


திருமண அறிவிப்போடு சேர்த்து, பிளாக்‌ஷிப் நிறுவனத்தின் அடுத்தக் கட்டமாக ஒரு தொலைக்காட்சியை விரைவில் ஆரம்பிக்கிறார்கள் என்கிற அறிவிப்பையும் நேற்றே இணையத்தில் வெளியிடவே , இரட்டிப்பு வாழ்த்துகள் இணையம் எங்கும் அவருக்கு குவிந்து வருகிறது .  திருமண வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நடக்கவிருக்கிறது.

No comments:

Post a Comment