Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Monday, 5 September 2022

பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்

 *பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்'*

*தெலுங்கு நடிகர் சந்தீப் மற்றும் சிம்ஹா இணைந்து நடிக்கும் பான் இந்திய திரைப்படம் 'ராவண கல்யாணம்'*

*பான் இந்திய படைப்பாக உருவாகும் சிம்ஹாவின் 'ராவண கல்யாணம்'*


நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகரான சந்தீப் மாதவ் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'ராவண கல்யாணம்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது.






அறிமுக இயக்குநர் ஜே. வி. மது கிரண் இயக்கத்தில் தயாராகும் முதல் படைப்பு 'ராவண கல்யாணம்'. இதில் நடிகர் சிம்ஹா மற்றும் தெலுங்கின் இளம் நடிகரான சந்தீப் மாதவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடிகை தீப்ஸிகா மற்றும் புதுமுக நடிகை ரீது காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் நடிகர் ராஜேந்திர பிரசாத், சத்ரு, ராஜ்குமார் காசி ரெட்டி, மதுசூதன், குண்டு சுதர்சன், ஆனந்த், மணி பிரபு, சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சிதம் மனோகர் ஒளிப்பதி செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். வசனத்தை பவானி பிரசாத் எழுத, ஸ்ரீகாந்த் பட்நாயக் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ரொமாண்டிக் மாஸ் என்டர்டெயின்மென்ட் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ஹால்சியன் மூவிஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரேஷ்மி சிம்ஹா மற்றும் அருண்குமார் சுராபனேனி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை சிம்ஹா மற்றும் அல்லூரி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து வழங்குகிறார்கள்.


ஹைதராபாத்தில் நடைபெற்ற 'ராவண கல்யாணம்' படத்தின் தொடக்க விழாவில், திரையுலகை சேர்ந்த பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment