Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Friday, 16 September 2022

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை

 டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது !


‘வெர்டிஜ்'  (Vertige) என்ற விருது பெற்ற கனடிய மினி வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்கை, பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்



சென்னை (செப்டம்பர் 16, 2022): டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான  ‘ஃபால்’ (Fall)  வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள்  பலர் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி  நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர். 


திவ்யா என்ற இளம் பெண்ணிற்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையில் இருக்கும் அவள், உண்மையில் என்ன நடந்தது என்பதையும், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகளையும் தேடுகிறாள். மேலும், அவளின் மறந்து போன நினைவுகளிலிருந்து முழுமையான நிகழ்வுகளை கண்டுபிடிக்க முயல்கிறாள். 


‘ஃபால்’ (Fall) தொடரை இயக்குவதுடன் ஒளிப்பதிவும் செய்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார்.


‘ஃபால்’ தொடர் ITV company நிறுவனமான Armoza Formats விநியோகம் செய்த, Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, மைக்கேல் ஆலன் எழுத்தில், விருது பெற்ற "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது

No comments:

Post a Comment