Featured post

Vaa Vaathiyar Movie Review

Vaa Vaathiyaar Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vaa vaathiyar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Nalan Kumar...

Friday, 16 September 2022

Moviewood தளத்தின் புதிய வெளியீடுகள்

 *Moviewood தளத்தின் புதிய வெளியீடுகள்*


'மூவிவுட்' ஓடிடி தளம் பல புதிய திரைப்படங்களை ரசிகர்களுக்கு வருடத்திற்கு ரூ.99/க்கு வழங்கி வருகிறது. சென்ற மாதம் இந்தியாவின் முதல் ப்ராப்பர் சிங்கிள் ஷாட் படமான 'யுத்த காண்டம்' மற்றும் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மேதகு பாகம் 1' மற்றும் 'மேதகு பாகம்2' ஆகிய திரைப்படங்களை வெளியிட்டது. 


இம்மாத வெளியீடாக, த்வனி என்கிற மியூசிக்கல் திரில்லரை, நேரிடையாய் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறது.  இதில் புதுமுகங்களான பிரியங்கா, வருண், சுதாகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.ஆர். பாலாஜி. தயாரிப்பாளர் அனில் ஓய்.குமார்.


இது மட்டுமில்லாமல் 'தூண்டுதல்' எனும் பைலட் திரைப்படத்தை நேரிடையாய் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் திரைப்பட நடிகர் ஜார்ஜ் விஜய் மற்றும் ஆர்த்தி அஸ்வின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எழுதி இயக்கியவர் ராஜேஷ். தயாரித்திருப்பவர் சக்தி ராமசாமி. இன்றைய காலத்தில் கைபேசியினால் இளம் பெண்கள் அடையும் பாதிப்பை மிகவும் ஆழமாய் சொல்லியிருக்கும் படம்.


அமேசானில் வெளியாகி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற 'கயமை கடக்க' மற்றும் 'இறுதிப் பக்கம்' ஆகிய இரண்டு படங்களும் தற்போது மூவிவுட் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment