விருது வாங்கும் படங்கள் என்றால் வணிக ரசனைக்கு எதிரான படங்கள் , ஆமை வேகப் படங்கள், போரடிக்கும் கதைகள், இருள் சூழ்ந்த காட்சிகள் என்றே இருக்கும் என்கிற பொதுவான மனநிலை நிலவுகிறது.
ஆனால் இதற்கு நேர் மாறான ஒரு படம்' டு லெட் '. செழியன் இயக்கியுள்ள இப்படம், உலகத்தரத்தில் ஓர் உள்ளூர் சினிமா.சிவகங்கை மனிதன் இசைத்துள்ள சிம்பொனி .
32 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது இப்படம் .
'டுலெட் 'ஒரு நிஜவாழ்க்கையைக் கண்முன் தரிசிக்கும் அனுபவத்தையும் சீரான திரைக்கதை ஓட்டத்தையும் தன்னகத்தே கொண்ட படமாக இருந்தது.
ஊடகங்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற ஒரு படமாக அமைந்துள்ளது .இது எப்போதாவது மட்டுமே நிகழும்.
தரத்துக்கான பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று விட்டால் அது எளிதில் வெற்றி பெற வாய்ப்பில்லாத திரைப்படம் என்கிற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
அதை உடைத்தெறியும் ஒரு படமாக 'டு லெட் ' மாறியிருக்கிறது.
வெளியான திரையரங்குகளில் 4வது வாரமாக ரசிகர்கள் ஆதரவுடன் அதிகரிக்கும் காட்சிகளும் திரையிடுவதற்கு கூடுதலாகி வரும்
திரையரங்குகளும் டு லெட் படம் புதிய வரலாறு படைத்து வருவதை உறுதி செய்கிறது.
திரை ரசனையின் இரு வேறு துருவங்கள் ஆக கலைப் பட ,வணிகப் பட ரசிகர்கள் இருப்பார்கள்.
யதார்த்த பூர்வமான ரசனை கொண்ட வணிகப் பட ரசிகர்கள் இப்படிப்பட்ட மிடில் சினிமாவைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அந்த நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கையைப் பெற்றதொரு படமாக' டு லெட் 'மாறியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் Review வில் வரவேற்பு பெற்ற இப்படம் Revenue விலும் வெற்றி பெற்றுள்ளது
No comments:
Post a Comment