உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் 07.03.2019 அன்று மகத்துவ மகளிர் விருதுகள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.
இதில் திண்டுக்கல்லை சேர்ந்த திருநங்கை குணவதி சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கும் சக பெண்களோடு விருது வழங்கப்பட்டது இதுகுறித்து குணவதி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில்
“பெண்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் முன்னேறி வருகின்ற இவ்வேளையில் சர்வதேச பெண்கள் தினத்தில் திருநங்கையான என்னையும் அழைத்து விருது வழங்கி கௌரவித்தது எங்களை மேலும் ஒரு அங்கீகாரம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவது போல உள்ளதாக நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று குணவதி நெகிழ்ச்சியுடன் பேட்டியில் கூறினார்.
கல்வித்துறையில் கலைத்துறையில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன கல்வியாளர் எஸ்பிடி கனகசபை மற்றும் தொழிலதிபர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை ட்ரீம் விங்ஸ் மற்றும் ‘F Face கிரியேட்டர்ஸ்’ன் நிர்வாகிகள் திரு.கோபி, திருமதி, சியாஸ்ரீ ஏற்பாடு செய்திருந்தனர். குமரன் பல் மருத்துவமனை மருத்துவர்கள் திரு.சுதர்சன் -வனிதா சுதர்ஷன் மற்றும் விவேரா கிராண்ட் நிர்வாக இயக்குனர் திரு.விவேக் அவர்கள், மற்றும் நெக்ஸ் ஆட் திரு.டேனியல் ஷ்சாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment