Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Saturday, 9 March 2019

சிறப்பாக பாடிய சியான் விக்ரம்! களைகட்டும் கடாரம் கொண்டான்


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். 






இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது. 

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். 

"தீச்சுடர் குனியுமா?
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா?
எரிவா மேலே மேலே"

என ஆரமிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

"கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் சார் பாடிய பாடல் புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்" என ஜிப்ரான் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment