தென்மேற்கு பருவக்காற்று, மேற்குதொடர்ச்சி மலை, பரியேரும் பெருமாள் இந்த படங்களின் வரிசையில் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு அற்புதமான கிராமத்து வாழ்வியலையும் , குடும்பஉறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்ல வருகிறது நெடுநல்வாடை திரைப்படம். பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பாராட்டுகளுடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த படத்தின் சிறப்புக்காட்சி நேற்று ( 14.03.2019 ) மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ்,பசங்க பாண்டிராஜ், பொன்ராம், எஸ்.ஆர்.பிரபாகரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், வேலாராமமூர்த்தி, இன்று நேற்று நாளை இயக்குனர் ஆர்.ரவிகுமார், ரெக்க படத்தின் இயக்குனர் ரத்னசிவா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, டோரா இயக்குனர் தாஸ் ராமசாமி, கலை இயக்குனர் ஆரோக்கியராஜ், ராஜதந்திரம் அமீத் ஏ.ஜி, திருமணம் என்னும் நிக்கா அனீஸ், அச்சமுண்டு அச்சமுண்டு அருண் வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment