Featured post

Avatar: Fire and Ash Movie Re view

  Avatar: Fire and Ash Movie  Re view ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம avatar fire and ash படத்தோட review அ தான் பாக்க போறோம். james cameron இயக்க...

Monday, 18 November 2019

சா என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் புதிய படம் உருவாகிறது

ஆணவக்கொலை பற்றிய கதை ஒற்றை எழுத்தில் தலைப்பு  சா புதுமுக இயக்குனர் அறிமுகம் |

"தா" " உ"  "சே" "நீ" "ரா" "ஏ" ஆகிய படங்கள் வரிசையில் அடுத்து "சா " என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் புதிய படம் உருவாகிறது.


கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் அனு கதையின் நாயகியாக நடிக்கிறார் மேலும் இதில் சஞ்சீவ், தாமோதரன், கிங்காங், போண்டா மணி. வேல்சிவா மற்றும் அருண்ஜீவாஆகியோர் நடிக்கின்றனர்.


அம்மா, அப்பா, வீடு, உறவு, சாதி, மதங்களை தாண்டி காதலித்து மணம் முடிக்கும் இளம் தம்பதிகளை ஆணவக்கொலை செய்யும் சம்பவங்களை மையமாக வைத்து வேறொரு கோணத்தில் சொல்லும் படம் தான் "சா " என்கிறார் புதுமுக இயக்குனரான எஸ்.இ.சபரி. இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து டைரக்ட் செய்கிறார்.

அஸ்வின் பாடலையும் சந்திரன் சாமி கேமராவையும், புவனேஷ் படத்தொகுப்பையும், நிஷான்லி இசையையும் கவனிக்கின்றனர்.


கோவை, மேட்டுப்பாளையம், கர்நாடகாவில் உள்ள மடிக்கேரி பகுதிகளில் உள்ள அழகிய இடங்களில் படத்தின் உச்சகட்ட காட்சிகள் படமாக்கப் பட்டு வருகிறது.

No comments:

Post a Comment