Avatar: Fire and Ash Movie Re view
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம avatar fire and ash படத்தோட review அ தான் பாக்க போறோம். james cameron இயக்கி இருக்கற இந்த படம் ஒரு science fiction movie . இது avatar franchise ஓட third part . Sam Worthington, Zoe Saldaña, Stephen Lang, Joel David Moore, Kate Winslet, Cliff Curtis,Jack Champion, னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாம்.
jake க்கும் neytrii ஓட பையன் இறந்து போனதால ரொம்ப வருத்தமா இருப்பாங்க. இதுல இருந்து neytiri க்கு மனுஷங்க னா சுத்தமா பிடிக்காது. jake க்கு eywa ஓட சக்தி மேல சந்தேகம் வரும் அதுனால தன்னோட family இங்க safe அ இருப்பாங்களா ன்ற கேள்வியும் வருது. kiri யும் spider யும் ரொம்ப close ஆயிடுறாங்க. pandora ல mask இல்லாம spider ஆலா சுவாசிக்க முடியாது அதுனால இவனை மனுஷங்க கிட்ட போய் சேக்குறது தான் safe னு jake நினைக்கிற. அதே மாதிரி இவனை ஒரு flying ship ல அனுப்புறாங்க. அப்போ தான் ash people னு எரிமலை பகுதி ல இருக்கற மக்கள் இந்த ship அ தாக்கிடுறாங்க. இதுல jake ஓட family பிரிஞ்சி போயிடுறாங்க. spider க்கு mask இல்லாதனல சாகுற நிலமைல இருப்பான். அப்போ kiri தான் வந்து காப்பாத்துற. ஒரு பக்கம் மனுஷங்க இந்த pandora வை அழிச்சிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் spider அ பிடிச்சி வச்சு experiment பண்ணிட்டு இருப்பாங்க. இன்னொரு பக்கம் jake அ arrest பண்ணி வச்சிருப்பாங்க. ஒரு கட்டத்துக்கு மேல pandora safe அ இருக்கறதுக்காக spider அ இழக்க வேண்டிய கட்டாயம் வருது. அப்போ jake என்ன முடிவு எடுக்குறாரு? இந்த தாக்குதல் ல பிரிஞ்சு போன jake ஓட family ஒண்ணா சேந்தாங்களா இல்லையா? pandora வ பாதுகாத்துங்களா இல்ல மனுஷங்க இந்த இடத்தை அழிச்சிட்டாங்களா ன்ற பல கேள்விகளுக்கு இந்த படம் தான் பதில் அ இருக்கு.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது sam worthington ஓட நடிப்பு matured அ இருந்தது. emotional scenes ளையும் ரொம்ப super அ நடிச்சிருந்தாரு. zoe ஓட நடிப்பும் அட்டகாசமா இருந்தது. மனுஷங்க மேல இவங்க காமிக்க்ர வெறுப்பு ரொம்ப realistic அ இருக்கும். action scenes அ இருக்கட்டும் emotional scenes அ இருக்கட்டும் ரெண்டுத்துளையுமே ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. weaver kiri character ல ரொம்ப calm அ நடிச்சிருந்தாரு. இவங்க eywa கூட connect ஆகுறத பாக்கும்போது ரொம்ப natural அ இருக்கும். மத்த எல்லா actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு super அ perform பண்ணிருக்காங்க.
இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது james cameron ஓட direction அ பத்தி சொல்லியே ஆகணும். ஒரு பக்கம் emotional இன்னொரு பக்கம் epic storytelling னு perfect balance பண்ணிருக்காரு. ஒரு சில complicated ஆனா characters அ படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் super அ எடுத்துட்டு வந்திருக்காரு. இந்த படத்தோட screenplay and story னு பாக்கும்போது. குடும்பம், நம்பிக்கை, இழப்பு னு எல்லா theme யும் cover பண்ணிருக்காங்க. water vs fire அதாவுது இந்த ரெண்டு இன மக்களுக்கு நடுவுல நடக்கற சண்டையை ரொம்ப realistic அ குடுத்திருக்காங்க. dialogues எல்லாம் ரொம்ப simple அ இருந்தாலும் கதைக்கு நல்ல set ஆயிருக்கு. production design னு பாக்கும் போது fire , ash , ocean , forest க்கான environment அ ரொம்ப தத்ரூபமா படத்துல காமிச்சிருக்காங்க. இந்த ash மக்களுக்கு குடுத்திருக்க detailings எல்லாமே அட்டகாசமா இருக்கும். அதே மாதிரி visuals cgi னு இது எல்லாமே இந்த படத்துக்கு ப்ராமணடம இருந்தது. இந்த படத்துக்கு cinematography நல்ல இருந்தது. wide shots அ இடத்தோட அழகுக்காகவும் close up shots அ character ஓட emotions காகவும் use பண்ணிருக்காங்க. avatar உலகத்தை காமிக்க்ர விதமும் ultimate அ இருந்தது. படத்துல இருக்கற music and bgm emotional moments அ elevate பண்ணற விதமா அமைச்சிருக்கு. என்னதான் multiple storylines இருந்தாலும் கொஞ்சம் கூட audience க்கு confusion வரதமாதிரி editing பண்ணிருக்காங்க.
மொத்தத்துல theatre ல பக்கவேண்டிய முக்கியமான படம் தான் இது. சோ miss பண்ணாம unga family and friends ஓட சேந்து இந்த படத்தை பாத்துட்டு வாங்க.

No comments:
Post a Comment