Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Sunday 7 June 2020

எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் திரு

எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் திரு. பிரகாஷ். 2006 இல் எனக்கு திருமதி பிரமிளா ஜோசாய் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். வைதேகி காத்திருந்தாள் படத்தில் அருவியில் சருக்கிக் கொண்டே வருவாரே அவர்தான்.



அவரது கணவரும் நடிகர்தான். சுந்தர்ராஜன். தப்புத்தாளங்கள், ஜேஜே போன்ற படங்களில் நடித்தவர். இந்த தம்பதியரின் ஒரே மகள் மேக்னா ராஜ்.

எனக்கு அறிமுகமானவுடன் ஒரு போட்டோஷூட்டிற்கு ஏற்பாடு செய்தேன். செட்ஃபயரில் போட்டோ ஷூட் நடைபெற்றது.

கவிதாலயாவில் இயக்குநர் ஷெல்வன் இயக்க, ஜீவன் நடிப்பில் கிருஷ்ண லீலை என்ற படத்திற்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தார்கள். நான் இயக்குநர் ஷெல்வனை செட்ஃபயருக்கு வரவைத்தேன்.

நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பின், இயக்குநர் சிகரத்தை சந்திக்க அழைப்பு வந்தது. இயக்குநர் சிகரத்திற்கு ஏற்கெனவே தெரிந்த குடும்பம்தான் இவர்களோடது.

உடனடியாக பரிட்சயங்கள் புதுப்பிக்கப்பட பாலச்சந்தர் அவர்களால் டிக் அடிக்கப்பட்டார் மேக்னா ராஜ்.

அற்புதமான குணம் கொண்டவர். நயன்தாராவின் ஆரம்பகால முகவெட்டு அப்படியே இருக்கும்.  பப்ளிசிட்டி முதற்கொண்டு அப்படித்தான் கொடுத்தேன்.

ஆனால் என்ன காரணங்களாலோ படம் நின்றுபோக, தெலுங்கு.. மலையாளம் எனப் பிஸியாகிவிட்டார். தமிழில் 'உயர்திரு 420',  'காதல் சொல்ல வந்தேன்', 'நந்தா நந்திதா' படங்களில் நடித்தார்.

2018 இல் மேக்னா ராஜ் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் திரு. சிரஞ்சீவி சர்ஜா.

தான் மனதில் கொண்டவரே கதாநாயகனாக வந்ததில் மேக்னாவிற்கு பெருமகிழ்ச்சி. தொட்ரா படம் முடிந்ததும் அதன் இயக்குநர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு கதை சொல்லவேண்டும் என்றதும் மேக்னாவிடம் பேசினேன்.

ஹூப்ளியில் ஷூட்டிங்கில் இருக்கிறார் ... பத்து நாட்களுக்கு மேல் அங்குதான் நடக்கும். முடிந்தால் அங்கே போய் சந்திப்பதாக இருந்தால் சொல்லிவிடுகிறேன். நீங்கள் போக முடியுமா எனக் கேட்டார்.

ஹூப்ளியில் ஒரு ஹோட்டலில் சந்தித்தோம். சிரஞ்சீவியை மேக்னா ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை அந்தக் குணத்தில் கண்டேன். மேக்னாவின் பத்து நிமிடத்திற்கொரு முறை வரும் போனை எடுத்து காதல் குறையாமல் பேசிக்கொண்டிருந்தார் மனிதன்.

அப்படியொரு மனிதனாக இருந்தார். நீங்கதான் மேக்னாவை தமிழில் அறிமுகம் செய்தீர்கள் என்று சொன்னார்கள் என்றார். நானும் உங்க மூலமாக தமிழுக்கு வருவதாக இருக்கோ என்னவோ செய்யலாம் சார் என்று ஒப்புக்கொண்டார்.

பரபரப்பாக உயர்ந்து வந்துகொண்டிருந்த தீபம் அவர். நம்ம ஊர் நடிகர் திரு. அர்ஜூனுக்கு நெருங்கிய சொந்தம். திடீரென தீபம் அணைந்துவிட்டது.
மனம் ஏற்க மறுக்கிறது. தாளவில்லை. அழுதுகொண்டிருக்கிறேன். பெங்களூருக்குப் போய் இறுதி வணக்கம் சொல்லவும் முடியாத நிலை.

இரண்டு வருடம்கூட வாழவில்லை எங்கள் மேக்னா ராஜ்.

கன்னட திரையுலகம் நல்ல நடிகரை இழந்திருக்கிறது. மிகக் குறைந்த வயதில் இப்படியொரு உலகப் பிரிவு ஏற்க முடியவில்லை.

நல்லவர்களை இறைவன் சீக்கிரம் அழைத்துக் கொள்கிறானோ என்னவோ தெரியவில்லை. மனது வலித்துக் கிடக்கிறது. இறை மடியில் இளைப்பாருங்கள் சிரஞ்சீவியாய் நண்பா. எப்படி மீண்டு வரப்போகிறாரோ மேக்னா?! இனி நிமிடத்திற்கொரு முறை போன் பண்ணி விசாரிக்க அவர் இல்லையென்பதை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார் என்பதே தெரியவில்லை.

#RIPChiranjeeviSarja #MeghnaRajHusbandDiedInHeartAttack

No comments:

Post a Comment