Featured post

*City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights

 *City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights* The Court of the Chief Judge, Cit...

Wednesday, 1 July 2020

மும்பை மாணவர்களும் ஆல் பாஸ்!

*மும்பை மாணவர்களும் ஆல் பாஸ்!  தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு. முன்னெடுத்த பேரவைச் செயலாளர்..!*

"உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு  மாணவர்களின் தேர்வு விசயமும் பெரும் கேள்விக்குரியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது..இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? என்று பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மனச்சிக்கலில் இருந்தார்கள். இந்நிலையில் மாணவர்களின்  இறுக்கத்தை போக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவித்து மாணவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொடுத்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் போலவே மும்பை தேர்வு மையத்தில் பதிவுசெய்த தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 மும்பை மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் படி..மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் திரு.ராஜேந்திர ராஜன் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். மும்பை வாழ் தமிழ் மக்களின் எண்ணத்தை ஏக்கத்தை முதல்வரிடம் அவர் எடுத்துச் சொன்னார்.

 மக்களால் ஆன அம்மாவின் அரசை சிறப்புடன் நடத்தி வரும் முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் மகாராஷ்டிரா மாநில அம்மா பேரவைச் செயலாளர் ராஜேந்திர ராஜன் அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக,  "மும்பை தேர்வு மையத்தில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக" அறிவித்தார். இதனால் அந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார்கள்.

இது குறித்து மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திர ராஜன் கூறும்போது, "மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதை உடனடியாக நிறைவேற்றுதில் நம் முதல்வர் மிக சிறப்பானவர். இந்த 69 மாணவர்கள் தேர்வு விசயத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதும் கனிவோடு பரிசீலித்து துரிதமாக முடிவெடுத்து பெரும் மகிழ்ச்சியைப் பரிசளித்தார். மேலும் முதல்வரின் இந்த அறிவிப்பு அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமின்றி மும்பை வாழ் தமிழ் மக்களுக்கும் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க-வையும் அதன் மக்கள் சேவை ஆட்சியையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லா இடங்களிலும்..எல்லோர் இதயங்களிலும் கொண்டு சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.

ராஜேந்திரன் ராஜன் 'ட்ரான்ஸ் இண்டியா மீடியா& எண்டெர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பாக ஆரி - ஆஷ்னாசவேரி நடிப்பில் 2018-ல் வெளியான 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருந்தார்.

No comments:

Post a Comment