Featured post

Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception

 *Producers express confidence as Angammal expands theatrical release driven by strong early reception* Angammal, scheduled for its release ...

Wednesday, 15 July 2020

அம்மாவின் கொள்கையின் படி

அம்மாவின் கொள்கையின் படி ஜல்லிக்கட்டு நாயகர் கழக ஒருங்கிணைப்பாளர் மக்களின் முதல்வர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படி  தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஓ.ப.ரவிந்திரநாத்குமார் அவர்களின் ஆசியுடன் திரு.வி.ப.ஜெயபிரதீப் அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மதுரை பாலமேடு கிராமத்தை சேர்ந்த திரு.முனியாண்டி என்பவர் தனது வறுமை நிலையை கருத்தில் கொண்டு விருதுநகர் சாத்தூரை சேர்ந்த மாட்டு வியாபாரியிடம்  தனது பசு மாட்டினை விற்றார். அப்போது அங்கிருந்த மஞ்சமலை கோவிலுக்கு சொந்தமான காளையானது அந்த பசு மாடு சென்ற வாகனத்தை மறைத்து பாசப்போரட்டத்தில் ஈடுப்பட்டது. இதை தொலைகாட்சியில் அறிந்த














திரு.வி.ப.ஜெயபிரதீப் அவர்கள் அந்த பசு மாட்டினை மீட்டு அதை கிராமத்து பெரியோர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பசு மாட்டினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம்.M.L.A.,  ஒன்றிய செயலாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் நகரசெயலாளர் திரு.V.k.குமார் ஊராட்சி தலைவர் திரு.செல்வராணிசிதம்பரம் வட்டசெயலாளர் திரு.M.கர்ணா ,  மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment