Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Tuesday, 18 August 2020

“ராட்சசன்” திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் !

“ராட்சசன்” திரைப்படத்திற்கு  கிடைத்த மற்றுமொரு  மகுடம் !


உள்ளங்களை கொள்ளை கொண்டு, அனைத்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த “ராட்சசன்” திரைப்படம், பல விருதுகளையும் பாரட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “ராட்சசன்” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. IMDB உலக திரைப்படங்களின் தகவல் களஞ்சியமாக ரசிகர்களின்  பெரும் மரியாதையை பெற்றிருக்கும் இணையதளம். அந்த இணையதளத்தில்  இத்தனை வருடங்கள் வெளியான படங்களின் வரிசையில் தமிழ் திரைப்படங்களில் No 1 படமாகவும், இந்திய திரைப்படங்களில்  No 3 திரைப்படமாகவும் இடம்பெற்றிருக்கிறது “ராட்சசன்” திரைப்படம்.

இது குறித்து Axess Film Factory தயாரிப்பாளர் G.டில்லிபாபு  கூறியதாவது...

இது எங்களுக்கு கிடைத்துள்ள  மிகப்பெரும் மரியாதை ஆகும். இந்த வரவேற்பும், இத்தனை பெரிய வெற்றியும் இப்படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் உரித்தானது. 3 வருடங்களுக்கு முன்னதாக நிறைய கனவுகளுடன், சினிமாவின் மீது பெரும் காதலுடனும், நிறைய  லட்சியத்துடனும் தயாரிப்பாளராக எனது பயணத்தை துவக்கினேன். அனைவராலும் மறக்க முடியாத படங்களை உருவாக்க நினைத்தேன். “ராட்சசன்” திரைப்படம் அந்த கனவை நனவாக்கியுள்ளது. தயாரிப்பாளராக பெரும் மரியாதையையும், பெயரையும் பெற்று தந்துள்ளது. நல்ல படங்களை தொடர்ந்து எடுக்க மிகுந்த ஊக்கம்  தந்திருக்கிறது. இந்நேரத்தில் இயக்குநர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால், PV. சங்கர், ஷான் லோகேஷ் சரவணன், ஜிப்ரான் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எங்கள் தயாரிப்பில் மிகப்பெரும் வெற்றிப்பயணமாக அமைந்த, இந்த ஆண்டு 2020 ல் வெளியாகிய “ஓ மை கடவுளே” வெற்றிக்கு பிறகு, Axess Film Factory  நிறுவனம் தற்போது GV பிரகாஷ் நடிப்பில் “பேச்சுலர்” (Bachelor) படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதைத்தவிர முன்னணி நடிகர்கள் நடிப்பில் புதிய திரைப்படங்களின் ஆரம்பகட்ட வேலைகளும் நடந்து வருகின்றன. அவற்றை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

No comments:

Post a Comment