Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Thursday, 12 November 2020

கபடதாரி’ டீசரை வெளியிடும் ' இசைப்

 ’கபடதாரி’ டீசரை வெளியிடும் ' இசைப் புயல்' பத்ம பூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்! 


கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன்

தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி டீசர் வெளியாக உள்ளது.



ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார். 


திரைப்பட ‌வெளியீடு மற்றும் தயாரிப்பு என தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வரும் தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயனின் தயாரிப்பில் கடந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு ‘கபடதாரி’ வெளியாக உள்ளதால் ரசிகர்களிடமும், திரையுலகிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘கபடதாரி’ படத்தின் டீசரை வெளியிடுவதால், அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ‘கபடதாரி’ தரத்துடன் மற்றும் வித்தியாசமான திரைக்கதையோடு ரசிகர்களை வெகுவாக கவரும் படமாக இருக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.


சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஸைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.


டிசம்பர் மாதம் 'கபடதாரி' திரைக்கு வரவிருக்கிறது.

No comments:

Post a Comment