Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Friday, 13 November 2020

இசையமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர் பிரபல

 இசையமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர் பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் பேரன், பேத்தி 


தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களிலும் பிரபல நடன இயக்குநராக வலம்வந்தவர் ரகுராம் மாஸ்டர். அவர் நம்முடன் இல்லை. ஆனால், அவரின் கலைப் பயணம் அவரது பேரன், பேத்தி வாயிலாக மீண்டும் தொடங்கியுள்ளது.

ரகுராம் மாஸ்டர்- கிரிஜா ரகுராமின் மகள் சுஜா. இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சுஜாவுக்கு, திரிசூல் ஆர். மனோஜ், சனா மனோஜ் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.










தங்களது தாத்தா வகுத்த கலைப்பாதையில் தடம் பதிக்கத் தயாராகிவிட்டனர் இளங் கலைஞர்கள் திரிசூல் மனோஜ், சனா மனோஜ். இசையமைப்பாளராக, நடிகராக அறிமுகமாகிறார் திரிசூல் மனோஜ். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் என்.முரளிகிருஷ்ணனிடம் கலை பயின்ற திரிசூல் மனோஜ், தீபாவளி சிறப்பாக 'தீபாவளி ஆந்தம்' (Diwali Anthem) என்ற தனிப்பாடலை வெளியிட்டுகிறார்.

இதற்கு திரிசூல் மனோஜ் இசையமைத்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

அமெரிக்காவின் இளம் கலைஞர்களான திரிசூல் ஆர்.மனோஜ், சனாதனி, இஷான், நம்ரிதா ஆகியோர் பாடலை இணைந்து பாடியுள்ளனர்.

விரைவில் இந்தப் பாடல் உங்கள் காதுகளில் தென்றலில் கலந்து தழுவ வருகிறது.

No comments:

Post a Comment