Featured post

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!* Sunda...

Sunday, 1 November 2020

தனுஷுடன் D43 யில் இணையும்

 தனுஷுடன் D43 யில் இணையும் மாளவிகா மோகனன் ! 


சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த பிரமாண்ட தயாரிப்பான “D43” யில் தனுஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் இப்படத்தில் தொழில்நுட்ப குழுவிலும், நடிகர்கள் குழுவிலும் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர்களுக்கு பேரின்ப செய்தியாக, தமிழக இளைஞர்களின் இதய நாயகியாகவும், நடிப்பிலும் அசத்தி வரும்  மாளவிகா மோகனன் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக,  நாயகியாக இணைந்திருக்கிறார். 



இது குறித்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் T. G. தியாகராஜன் கூறியதாவது...


இளம் திறமையாக கலக்கி வரும் நடிகை மாளவிகா மோகனனை, எங்களின் அடுத்த தயாரிப்பான D43 க்காக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வெகு சில நடிகைகளே குடும்ப பாங்கிலான நம் வீட்டு பெண் மற்றும் மாடர்ன் தோற்றம் என  இரண்டிலும் அசத்தலாக இருப்பார்கள். அந்த வகையில்  மாளவிகா மோகனன் இரண்டு தோற்றங்களிலும் மிக  எளிதில் பொருந்துபவராக இருக்கிறார். தென்னிந்தியாவில் பல மொழி திரைப்படங்களிலும், அழுத்தமான பாத்திரங்களில் தோன்றி திறமையான நடிப்பை தந்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை இந்த இளம் வயதில் அவர் பெற்றிருப்பது பெரும் ஆச்சர்யம். அவரது பாத்திரம் இப்படத்திலும் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும். 


D43 யின் தற்போதைய நிலை குறித்து கூறும்போது.... 

இப்படம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, ஆக்சனும் உணர்வுகளும் இரண்டறக்கலந்த அட்டகாசமான கமர்ஷியல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான ரசிகர்களும் கண்டிப்பாக இப்படத்தினை கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். ஜீவி பிரகாஷ் தன் இசையால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்து, பெரும் சாதனைகள் செய்து வரும் நிலையில் அவரது இசை இப்படத்திற்கு பெரும் பலமாக இருக்கும். மிகத்திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழு படத்தில் இணைந்துள்ளது.  இப்படக்குழு மிகச்சரியான படைப்பை தந்து, பெரு வெற்றியை பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறேன்.

No comments:

Post a Comment