Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Friday, 1 April 2022

மாஸ் மகாராஜா' ரவிதேஜாவின் 'டைகர்

 *'மாஸ் மகாராஜா' ரவிதேஜாவின் 'டைகர்' பட தொடக்க விழா*


*பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ரவிதேஜாவின் 'டைகர்'*


*'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பாளரின் அடுத்த பட அறிவிப்பு*


*'மாஸ் மகாராஜா' ரவிதேஜா - வம்சி கூட்டணியில் தயாராகும் 'டைகர்'*


‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிப்பில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர்’ நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா ஏப்ரல் 2ஆம் தேதியன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. அத்துடன் இப்படத்தின் பிரீ- லுக்கும் வெளியிடப்படுகிறது.


‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா முதன் முறையாக பான்- இந்தியா படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதனை முன்னணி இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தை 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார்.


‘டைகர் ’நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா, உகாதி தினமான ஏப்ரல் 2-ஆம் தேதியன்று மாதப்பூரில் உள்ள ஹெச் ஐ சி சி என்னுமிடத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் ‘டைகர்’ படத்தின் பிரீ =லுக் மதியம் 12 மணியளவில் வெளியிடப்படுகிறது. பான் இந்தியா திரைப்படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரம்மாண்டமாக அறிமுகமாகியிருக்கும் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவு படைப்பு இது.


‘டைகர்’ நாகேஸ்வரராவ் 1970களில் தென்னிந்தியா முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட மோசமான மற்றும் துணிச்சல்மிக்க திருடன். இவன் வசித்த ஸ்டூவர்ட்புரம் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட திரைப்படம். ஆற்றல்மிக்க இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா தன்னுடைய தோற்றத்தை முழுமையாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு, தோற்றப்பொலிவு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு முன் ரவி தேஜா ஏற்றிராத கதாபாத்திரம் இது.


இயக்குநர் வம்சி டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் திரைக்கதையை ஆய்வுகளுக்கு பிறகு முழுமையாக எழுதி நிறைவு செய்திருக்கிறார். அவருடைய கனவுப் படைப்பான இப்படத்தை தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உருவாகிறது. இதற்காகவும் இயக்குநர் வம்சி பிரத்யேகமாக உழைத்திருக்கிறார்.


‘டைகர்’ நாகேஸ்வரராவின் வாழ்க்கை கதை, ஒரு திரைப்படத்திற்கான முழுமையான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. இது போன்ற வெகுஜன மக்களை கவரும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ரவி தேஜா பொருத்தமானவர் என்பதால் அவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் ‘டைகர்’ நாகேஸ்வரராவ் ஏராளமான ஆக்சன் கட்சிகளுடன் பிரம்மாண்டமாக உருவாகும் என்பதால், இதன் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. 70-களில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் உருவாக்கத்தில் பிரபலமான தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.


ஆர் மதி ஒளிப்பதிவு செய்ய, ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லா பணியாற்ற, படத்திற்கான வசனங்களை ஸ்ரீகாந்த் விஸ்ஸா எழுதுகிறார். மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.


படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


தொழில்நுட்ப கலைஞர்களின் விவர பட்டியல்.


கதாநாயகன். =   ரவி தேஜா

எழுத்து & இயக்கம். = வம்சி

தயாரிப்பாளர்.  = அபிஷேக் அகர்வால்

தயாரிப்பு நிறுவனம்   = அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்

வெளியிடுபவர் . = தேஜ் நாராயணன் அகர்வால்

இணை தயாரிப்பாளர்.  = மயங்க் சிங்கானியா

வசனகர்த்தா. = ஸ்ரீகாந்த் விஸ்ஸா

இசை.  = ஜீ. வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு = ஆர் மதி

தயாரிப்பு ஒருங்கிணைப்பு. = அபினாஷ் கொல்லா

மக்கள் தொடர்பு = யுவராஜ்

No comments:

Post a Comment