Featured post

Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu

 Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu India’s first Bolliger & Mabillard (B&M) Inverted...

Saturday, 2 April 2022

நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்திலிருந்து, அவரது ஸ்டைலீஷ் போலீஸ் லுக்

 நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்திலிருந்து, அவரது ஸ்டைலீஷ் போலீஸ் லுக் வெளியானது 


நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “தி வாரியர்” படத்தின் தயாரிப்பு தரப்பு, படத்தை பற்றிய ஒவ்வொரு அறிவிப்பிலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகின்றனர். 


லேட்டஸ்டாக அவர்கள், ராம் பொதினேனி போலீஸ் சீருடையுடன் முரட்டு பைக்கை  ஓட்டுவது போன்ற ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ராம் பொதினேனி கதாபாத்திரம் அசத்தும் தோரணையுடன்  கவலையற்ற அணுகுமுறையுடனும் இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது. இப்படம் ஜூலை 14ஆம் தேதி பிரமாண்டமாக உலகமெங்கும் வெளியாகிறது.


இப்படம் பெரிய திரைக்கு வரும்போது திரையரங்குகளில் ஆக்‌ஷன் திருவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Srinivasaa Silver Screen  பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை  தயாரிக்கிறார், பவன்குமார் வழங்குகிறார். இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி அதி பயங்கர வில்லனாக நடிக்கிறார்.



 2021ஆம் ஆண்டு இத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெளியான சீடிமார் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, தி வாரியர் படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கியமான பாத்திரத்திலும் கேரக்டரில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு  இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment